ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், பாப் பாடகி கேனிஷா உடன் ஜோடியாக வலம் வர தொடங்கியுள்ளார், மனைவியை விட்டு ஜெயம் ரவி பிரிவதாக அறிவித்த பொது, கேனிஷா உடன் கிசு கிசுக்கப்பட்டு தகவல் வெளியான போது, அதை முற்றிலும் மறுத்த ஜெயம் ரவி, தற்பொழுது கேனிஷா உடன் ஒரு தம்பதியினர் போன்று உலா வர தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் ஜெயம் ரவி பற்றி அனைவருக்கு தெரியும், ஆனால் அவருடன் உலா வரும் கேனிஷா யார்.? அவர் குடும்ப பின்னணி என்ன என்கிற தகவல் மர்மமாகவே இருந்த நிலையில் தற்பொழுது கேனிஷா குடும்ப பின்னணி குறித்து பல தகவல் வெளியாகியுள்ளது. கேனிஷா அப்பா தாய் மொழி தமிழை பூர்வீகமாக கொண்டவர், கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் வசித்து வந்துள்ளார்,

கேனிஷாவின் தாய் கென்யாவை சேர்ந்தவர், இவர் ஒரு முறை பெங்களூருக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்தபோது அங்கே கேனிஷா தந்தை அவருடைய அம்மாவை பார்த்திருக்கிறார். பார்த்த உடனேயே மனதை பறி கொடுத்தவர் தன்னுடைய காதலை தெரிவித்து இருக்கிறார். இருந்தாலும் கேனிஷா தந்தையின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய தாய் கென்யா சென்றுள்ளார்.
இதன் பின்பு கென்யாவில் கேனிஷா அம்மா எங்கே இருக்கிறார் என்று முகவரியை தேடி கண்டுபிடித்து அங்கே நேரில் சென்று தன்னுடைய காதலை தெரிவிக்கிறார் கேனிஷாவின் தந்தை. இதன் பின்பே கேனிஷாவின் தாய் அவருடைய தந்தையின் காதலை ஏற்றுக் கொள்கிறார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் திருமணம் முடிந்து சுமார் 17 வருடங்களுக்கு பின்பு தான் கேனிஷா பிறக்கிறார்.
மேலும் கேனிஷாவின் தந்தை தொழிலதிபராக இருந்த வந்துள்ளார். கேணிஷாவின் தாய் மேடைகளில் பாடல் பாடி ஆடக்கூடியவராக இருந்து வந்துள்ளார். சிறுவயதில் கேனிஷா கென்யாவில் வளர்ந்துள்ளார், அதன் பின்பு பெங்களூரிலும் வளர்ந்துள்ளார், அப்பாவின் தாய் மொழி தமிழ் என்பதால் அவர் தமிழும் நன்றாக பேசக்கூடியவர். மேலும் கேனிஷா, அவருடைய தாய் போன்று பாடல் பாடக்கூடியவர்.
மேலும் கேனிஷா ஆப்பிரிக்காவில் மிகவும் பிரபலமாக செயல்படக்கூடிய மன நோய்க்கான ஹீலிங் பயிற்சியும் பெற்றதாக கூறப்படுகிறது. கேனிஷா தாய் இறந்து விடுகிறார் அடுத்த சில வருடங்களே அவருடைய தந்தையும் இறந்து விடுகிறார். அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக தாய் தந்தை இல்லாமல் தனியாகவே இருந்து வரும் கேனிஷா தான் கற்றுக்கொண்ட ஹீலிங் பயிற்சியை மனநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு வழங்கி அவர்களை குணப்படுத்தி ஒரு புது வாழ்க்கையை கொடுத்து வருகிறார் கேனிஷா எனக் கூறப்படுகிறது.
அந்த வகையில் குடும்ப பிரச்சனையால் கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டு ஒரு விபரீத முடிவை எடுக்கும் சூழலுக்கு ஜெயம் ரவி தள்ளப்பட்டிருந்த காலத்தில், கேனிஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் இருக்கும் கோவாவிற்கு வந்து மன நோய்க்கான ஹீலிங் பயிற்சியை பெற்றுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார். ஆரம்பத்தில் கேனிஷா வேண்டாம் மறுத்துள்ளார், சென்னையிலே பல பயிற்சி மய்யம் உள்ளது அங்கே பயிற்சி மேற்கொள்ளுங்கள் என அறிவுறுத்தி இருக்கிறார்.
அதன் பின்பு ஜெயம் ரவி தன்னுடைய மன கஷ்டங்களை தெரிவித்து நான் கோவா வந்தால் தான் சரியாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார். இதன் பின்பு நேரில் கோவாவிற்கு வர வைத்து அவருக்கு மன ரீதியான ஹீலிங் பயிற்சி அளித்து அவரை மனப்பிரச்சனையிலிருந்து மீட்டு எடுத்துள்ளார் கேனிஷா மேலும் கேனிஷா அளித்து வரும் ஹீலிங் பயிற்சி என்பது ஆப்பிரிக்காவில் தான் அனுமதி, இந்தியாவில் அனுமதி இல்லை என்றே கூறப்படுகிறது.