வீட்டோட மாப்பிளைனா கொத்தடிமை மாதிரி நடத்துவீங்களா.? நடிகர் ஜெயம் ரவிக்கு விவாகரத்து பின்னனியில் நடந்த கொடுமை…

0
Follow on Google News

கடந்த சில ஆண்டுகளாகவே கோலிவுட்டில் பிரபலமான ஜோடிகள் விவாகரத்து செய்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சி கொடுத்திருக்கிறது. சமந்தா- நாக சைதன்யா, தனுஷ்- ஐஸ்வர்யாவை தொடர்ந்து நாக ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து பெறுவதாக அறிவித்திருந்தார்கள். இந்த விவகாரம் முடிவதற்குள் பிரபல நடிகர் ஜெயம் ரவி- ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக வந்திருக்கும் செய்தி தான் தற்போது ரசிகர்கள் பேரிடியாக இருக்கிறது.

நடிகர் ஜெயம் ரவி, திறமையான நடிகராக இருந்தாலும், கடந்த சில வருடங்களாக கதைகளை சரியாக தேர்ந்தெடுக்காததால் தொடர்ந்து சறுக்கல்களை சந்தித்து வருகிறார். கோமாளி படத்திற்கு பிறகு, இவருக்கு எந்த படமும் சரியாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. இருந்த போதிலும், மக்கள் மனத்தில் நல்ல ஹீரோ என்ற பெயரை பெற்றிருக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் பிரிய இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த செய்திகளுக்கு ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் எந்த விளக்கமும் கொடுக்காததை அடுத்து இந்த செய்தி உண்மையாக இருக்குமோ என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை எல்லாம் டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் கூறுகையில், ஜெயம் ரவியின் மாமனார் விஜயகுமாரும், சுஜாதாவும் ஒரு படத்தில் நடித்தபோது காதலித்தார்கள். பிறகு திருமணம் செய்துகொண்டார்கள். சுஜாதா மிகப்பெரிய பணக்காரர். கல்பனா ஹவுஸ் என்ற பங்களாவின் ஓனரும் அவர்தான். மேலும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்துகொண்டிருக்கிறார். ஆர்த்தியை ஜெயம் ரவி திருமணம் செய்துகொண்ட பிறகு வீட்டோடு மாப்பிள்ளை ஆனார்.

ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியின் மார்க்கெட் சரிய தொடங்கியதை அடுத்து ஜெயம் ரவியை வைத்து படங்களை தயாரித்தார். அப்படி அவர் கடைசியாக தயாரித்த சைரன் படம் முதலுக்கு மோசமில்லை என்ற நிலையில் தப்பித்தது. சூழல் இப்படி இருக்க பாண்டிராஜ் சுஜாதாவிடம் கதை சொன்னார். அந்தக் கதை பிடித்துப்போனதை அடுத்து; ஜெயம் ரவியை ஹீரோவாக போட்டு 53 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்டார் சுஜாதா.

ஆனால் ஜெயம் ரவியோ தனக்கு சம்பளமாக 25 கோடி ரூபாய் கேட்டார். அதற்கு மாமியாரோ, ‘உங்களுக்கு மார்க்கெட் அவ்வளவு இல்லையே’ என்று கூற; ரவியோ விடாப்பிடியாக 25 கோடியில் நின்றார். பிறகு இயக்குநரை அழைத்த சுஜாதா, பட்ஜெட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல; தான் வாங்கிய ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸை அவரிடமே திருப்பி கொடுத்துவிட்டு விஜய் சேதுபதியிடம் கதை சொல்லி ஓகே வாங்கிவிட்டார் இயக்குனர்.

இது ஜெயம் ரவியின் காதுகளுக்கு செல்ல; இவற்றுக்கெல்லாம் காரணம் தனது மாமியார்தான் என்று நினைத்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், ஆர்த்தியுடனும், அவரது மாமியாருடனும் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார் ஜெயம் ரவி. அதாவது ஜெயம் ரவி நடிக்கும் படத்தை அவரது மாமியார் தான் கேட்டு முடிவு செய்கிறார், ஜெயம் ரவி சம்பளத்தையும் மாமியாரே முடிவு செய்கிறார், இப்படி ஜெயம் ரவியை ஒரு தலையாட்டி பொம்மை போன்று அடிமையாக பயன்படுத்தி வந்துள்ளார் எ அவரது மாமியார் என்றும்,

ஒரு கட்டத்தில் தன்னுடைய சினிமா வீழ்ச்சிக்கு காரணம் தன்னுடைய மாமியார் தான் என்பதை உணர்ந்த ஜெயம் ரவி, போதும்உங்களிடம் அடிமையாக இருந்து நான் அனுபவித்த கொடுமையெல்லாம் போதும் என, இனி நானே கதை கேட்டு படத்தில் கமிட்டாகி கொள்கிறேன், இனி நீங்கள் யாரும் இன்னுடைய சினிமா விஷயத்தில் தலையிட வேண்டாம் என ஜெயம் ரவி முடிவு எடுக்க, மாமியார் மருமகன் இடையில் மோதல் உச்சகட்டத்தை எட்டி ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்யும் முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here