நடிகர் ஜெயம் ரவியுடன் தற்பொழுது இணைத்து வைத்து பேசப்படும் பாடகி கேனிஷா கோவாவில் உள்ள இரவு பப்புகளில் நல்ல நடனமாடி பாடக்கூடியவராக இருந்து வந்துள்ளார். அதாவது மது அருந்த கூடிய பப்களில் நன்கு நடனம் ஆடி பாடக்கூடிய கேனிஷா பாடலுக்கும் நடனத்திற்கு ரசிகர்கள் ஏராளம் உண்டு. குறிப்பாக கேனிஷா ஆடி, பாடும் பப்களில் பெரும் கோடீஸ்வரர்கள் வந்து செல்லும் இடம் என கூறப்படுகிறது.
மாலை நேரம் தொடங்கி நள்ளிரவு வரை பப்களில் ஆடி பாடும் கேனிஷா, மற்ற நேரங்களில் மன அமைதிக்கான ஆன்மீக பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மன அமைதியைத் தேடி அலைந்த ஜெயம் ரவி – கேனிஷா சந்திப்புக்கு பின்பு கேனிஷா கொடுத்த மன அமைதிக்கான ஆன்மீக பயிற்சியில் தன்னுடைய மனதை கேனிஷாவிடம் பறிகொடுத்து விட்டார் ஜெயம் ரவி என கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் கேனிஷா உடன் இருப்பதே சொர்க்கம் என ஜெயம் ரவி நினைக்கும் அளவுக்கு, ஜெயம் ரவிக்கு ஆன்மீக பயிற்சி அளித்துள்ளார் கேனிஷா. இதனை தொடர்ந்து கேனிஷா இருக்கும் கோவாவில் நிராதாரமாக் செட்டிலான ஜெயம் ரவி. கேனிஷாவுக்கு தேவையான உதவிகளை செய்தார். தன்னுடைய காரை வெளியில் எங்க வேண்டுமானாலும் போவதற்கு பயன்படுத்திக் கொள் என்று கேனிஷாவிற்கு ஜெயம் ரவி தன்னுடைய மனைவி பெயரில் இருந்த அந்த காரை கொடுத்திருக்கிறார்.
அந்த கார் சட்ட விதிகளை பின்பற்றாமல் சென்றதால் கோவா போலீசாரிடம் மாட்டிக் கொள்கிறது. இந்த தகவல் ஜெயம் ரவி மனைவிக்கு பெரிய வருகிறது, இதன் பின்பே கோவா பப்பில் பாடிக் கொண்டிருக்கும் கேனிஷாவிடம் கணவர் ஜெயம் ரவி நெருக்கமாக இருப்பதை அறிந்துள்ளார் ஆர்த்தி. மேலும் கேனிஷா ஆன்மீக பயிற்சியில் மன நிம்மதி அடைந்த ஜெயம் ரவியை தொடர்பு கொள்ள கூட முடியாதபடி தவித்து வந்துள்ளார் ஆர்த்தி.
இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி விட்டு பிரிந்த நிலையில் அவருடைய மனைவி மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைவதற்காக தயாராக இருந்தாலும் கூட ஜெயம் ரவி மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்வதற்கு ஒரு சதவீதம் கூட விருப்பமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். ஜெயம் ரவி இப்படி தன்னுடைய மனைவியை முழுவதுமாக வெறுப்பதற்கு அவர் அனுபவித்த கொடுமைகள் தான் என்று கூறப்படுகிறது.
தன்னுடைய 15 வருட இல்லற வாழ்க்கையில் கடைசியாக 5 வருடம் பிரச்சனை மேல் பிரச்சனை, அதில் இறுதி கட்டமாக கடைசி இரண்டு வருடம் கொடுமை மேல் கொடுமைகளை ஜெயம் ரவி அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படி பணக்கார குடும்பம் என்று பில்டப் கொடுத்த ஜெயம் ரவி மாமியார் மற்றும் மனைவி ஆகியோர் முழுக்க முழுக்க ஜெயம் ரவி வருமானத்திலேயே வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஜெயம் ரவி, மனைவியின் கொடுமைகள் தாங்க முடியாமல் தன்னுடைய வீட்டில் உள்ள அனைத்து உடைமைகளையும் விட்டுவிட்டு தான் அணிந்திருந்த ஆடையுடன் வாடகை காரில் ஏறி அந்த வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். இதனை தொடர்ந்து சில காலம் கோவாவில் இருந்த ஜெயம் ரவி. தன்னுடைய மன ப்பிரச்சனையை தீர்த்துக்கொண்டு, தன்னுடைய பெற்றோரிடம் தான் அனுபவித்த சித்திரவதைகளை எடுத்து கூறி கலந்து ஆலோசித்து,
இனியும் எனக்கு அந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்து, மனைவி விட்டு பிரிவதாக அறிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிய என்ன காரணம் என 4 பக்கத்திற்கு வெளியிட்ட அறிக்கையை படித்தவர்கள் கண் கலங்கும்படி செய்துள்ளது.