நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான தகவல் சினிமா துறையினர் மட்டுமின்றி சினிமா ரசிகர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காரணம் சினிமா சார்ந்த எந்த ஒரு பொது நிகழ்வுக்கும் ஜெயம் ரவி அவருடைய மனைவியுடன் தான் வருவார், அந்த அளவுக்கு இந்த தம்பதிகள் அஜித் – ஷாலினி போன்ற சிறந்த தம்பதியினர் என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
சினிமா துறையில் இருப்பவர்கள் திரையில் நடிப்பதை விட பொது இடங்களில் இன்னும் நன்றாக நடிப்பார்கள் என்கின்ற ஒரு செய்தியும் உலா வருகிறது. அதாவது கணவன் மனைவிக்குள் ஆயிரம் பிரச்சனைகள் வீட்டில் இருந்தாலும், வெளியில் வரும்போது இந்த உலகத்திலேயே இவர்கள் தான் சிறந்த தம்பதிகள் என்று காட்டிக் கொள்ளும் அளவிற்கு வெளியில் நடந்து கொள்வார்கள்.
வீட்டில் ஆயிரம் சண்டை இருந்தாலும், மேடையில் நடிகர் தன்னுடைய மனைவியை பற்றி புகழ்வதும் நடிகை தன்னுடைய கணவரை பற்றி புகழ்வதும் இப்படி சினிமாவில் நடிப்பதை விட மேடையில் தான் அதிகம் நடிப்பார்கள் என்கின்ற ஒரு பேச்சும் சினிமா வட்டாரங்களில் உள்ளது. அந்த வகையில் சினிமா துறையை சார்ந்த தம்பதிகள் உண்மையிலேயே அவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்களா? சிறந்த தம்பதிகளாக இருக்கிறார்களா? இல்லை நடிக்கிறார்களா என்று கூட கணிக்க முடியாது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜெயம் ரவி விவாகரத்துக்கு பொன்னியின் செல்வன் படத்தில் அவருடன் நடித்த ஒரு நடிகையுடன் ஏற்பட்ட கிசுகிசு தான் என்று பரவலாக பேசப்பட்ட நிலையில். அதில் துளி அளவும் கூட உண்மை இல்லை என தெரியவந்தது. குறிப்பாக ஜெயம் ரவி திருமணத்திற்கு பின்பு தன்னுடைய மாமியாருக்கு ஒரு மருமகனாக இல்லாமல் மகனாக இருக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.
ஆனால் ஜெயம் ரவை வெள்ளந்தி மனதை அவருடைய மாமியார் தவறாக எடுத்துக் கொண்டு அவரை ஒரு சிறை கைது போல் நடத்த ஆரம்பித்து விட்டார் என்றும், அதாவது அவர் நடிக்கும் படத்தில் கால் சீட்டிலிருந்து எந்த கதையில் நடிக்க வேண்டும், அவருடைய அண்ணன் படத்தில் கூட நடிப்பதற்கு மாமியாரின் அனுமதி வேண்டும் என்கின்ற அளவிற்கு ஜெயம் ரவி ஒரு சிறை கைதி போல் நடத்தப்பட்டார் என கூறப்படுகிறது.
இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம், இதுவரை தமிழ் சினிமாவில் ஒரு ஒழுக்கமான நடிகராக இருக்கக்கூடிய ஜெயம் ரவி எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசுக்கள் சிக்காமல் இருந்து வந்தவர் ஆனால் அவருடைய மனைவி ஆரத்தி ஜெயம் ரவி மீது அதிக சந்தேகம் கொண்டதாகவே சினிமா துறையைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் பல பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
குறிப்பாக ஜெயம் ரவி ஷூட்டிங்கில் இருக்கும்போது அவருடைய தொலைபேசி எடுக்கவில்லை அல்லது சுவிட்ச் ஆப் ஆக இருந்தாலும் உடனே அவருடைய மனைவி அங்கு இருக்கும் இயக்குனருக்கோ.? கேமராமேனுக்கோ அல்லது உதவி இயக்குனருக்கோ போன் செய்து தன்னுடைய கணவன் என்ன பண்ணுகிறார் என்று கேட்டுக் கொள்வாராம் அவரது மனைவி.
அதேபோன்று வெளியூரில் அல்லது வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் நள்ளிரவு போன் செய்து யார் பக்கத்தில் என்று சந்தேகத்துடன் கேட்பாராம் அவரது மனைவி . இப்படி தன்னுடைய கணவன் எங்கே செல்கிறார் எங்கே வருகிறார் என்று தீவிரமாக கண்காணித்து வந்தது ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி அவமானமாக கருதியுள்ளார். இதனைத் தொடர்ந்து மாமியார் ஒரு பக்கம் தன்னை சிறைப்படுத்துவதும் மனைவி மறுபக்கம் தன்னுடைய சந்தேக பார்வையில் தன்னை தீவிரமாக கண்காணிப்பதும் விரும்பாத ஜெயம் ரவி முதலில் இந்த சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டும் என்று முடிவெடுத்த பின்பு தான் விவாகரத்து முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.