நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிவதற்கு பின்னணியில் கோவா பாடகி கேனிஷா தான் என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இது குறித்து ஜெயம் ரவி தன்னை கேனிஷா உடன் இணைந்து வைத்து பேசுவது தவறு, அந்த மாதிரியெல்லாம் பேச வேண்டாம், நானும் கேனிஷாவும் எதிர்காலத்தில் ஹீலிங் மய்யம் திறக்க இருப்பதாக தெரிவித்தார், ஜெயம் ரவி விளக்கம் கொடுத்த பின்பும் கூட கேனிஷா – ஜெயம் ரவி குறித்த சர்ச்சை ஓயவில்லை.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சம்பந்த பட்ட கேனிஷா தன்னுடன் ஜெயம் ரவியை இணைத்து வைத்த பேசப்படும் சர்ச்சைக்கு விளக்கம் அளிக்கும் வகையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார், அதில் தான் ஒரு பாடகி என்றும் மேலும் ஹீலிங் தெரிந்த நபர் என தெரிவித்தவர். மேலும் கேனிஷாவுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டு என்றும், ஜெயம் ரவியை 2024க்கு முன்பு ஒரு தடவை கூட நேரில் சந்தித்து இல்லை என தெரிவித்த கேனிஷா.
கடந்த ஜனவரி மாதம் நடிகர் ஜீவா வெளியிட்ட ஆல்பம் நிகழ்ச்சியில் தான் முதல் முதலில் ஜெயம் ரவியை சந்திக்கும் வாய்ப்பு கேனிஷாவுக்கு கிடைத்துள்ளது. அப்போது ஜெயம் ரவியிடம் கேனிஷா பேசிய போது அவருடைய குடும்பம் மற்றும் குழந்தைகள் பற்றி மிகப் பெருமையாக பேசி இருக்கிறார் ஜெயம் ரவி. அதனை தொடர்ந்து அவருடைய பேட்டிகளை பார்க்க தொடங்கிய கேனிஷா அதன் பின்பு ஜெயம் ரவியை நேரில் சந்திக்கவோ அல்லது பார்க்கவோ வாய்ப்பு கேனிஷாவுக்கு கிடைக்கவில்லை.
இப்படி சுமார் ஆறு மாதம் எந்த ஒரு தொடர்பும் ஜெயம் ரவி – கேனிஷா இருவருக்கும் இருந்தது இல்லை. ஆனால் திடீரென்று கடந்த ஜூன் மாதம் ஜெயம் ரவியிடம் இருந்து தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறிய கேனிஷா, அப்போது ஜெயம் ரவி தான் மிக கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், எனக்கு ஒரு ஆலோசனை வழங்க வேண்டும் அதாவது உங்களுக்கு நன்கு தெரிந்த ஹீலிங் ட்ரீட்மென்ட் எனக்கு கொடுங்க என ஜெயம் ரவி கேனிஷாவிடம் கேட்டிருக்கிறார்.
அதற்கு கேனிஷா நான் கோவாவில் இருக்கிறேன், சென்னையிலேயே எத்தனையோ கீலிங் ட்ரீட்மெண்ட் கொடுக்கிறவர்கள் இருக்கிறார்கள், அவர்களிடமே நீங்கள் ட்ரீட்மென்ட் எடுக்கலாமே என கேனிஷா தெரிவித்திருக்கிறார். ஆனால் ஜெயம் ரவி சென்னையில் கீலிங் ட்ரீட்மென்ட் எடுத்தால், அது மீடியாவில் வந்துவிடும், அதனால் என்னுடைய குடும்ப விவரம் வெளியே தெரிந்துவிடும் என்று என்பதால் கோவாவில் இந்த ஹீலிங் பயிற்சியை மேற்கொள்கிறேன் ப்ளீஸ் என்று கேனிஷாவிடம் தெரிவித்து இருக்கிறார் ஜெயம் ரவி.
அதற்கு கேனிஷா உங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என்றால் நீங்கள் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார். அதன் பின்பு தான் சுமார் 6 மாதங்களுக்கு பின்பு கேனிஷா – ஜெயம் ரவி சந்திப்பு மீண்டும் கோவாவில் நடந்துள்ளது. இதனை தொடர்ந்து கடுமையான மனா உளைச்சலில் இருந்த ஜெயம் ரவிக்கு கீலிங் பயிர்ச்சி அளித்து வந்துள்ளார் கேனிஷா. இவ்வளவு தான் எனக்கு ஜெயம் ரவிக்கும் உள்ள தொடர்பு என ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த கேனிஷா.
ஏன் தேவையில்லாமல் என்னையும் ஜெயம் ரவையையும் இணைந்து வைத்து இட்டுகட்டி பேசி வருகிறீர்கள் என வேதனையை பகிர்ந்து கொண்ட கேனிஷா. எனக்கும் குடும்பம் உள்ளது, நானும் ஒரு பெண் தான் என தன்னை ஜெயம் ரவி உடன் தொடர்பு படுத்தி தேவையில்லாத இட்டுகட்டி பேசி வருவதற்கு வருத்தத்தை தெரிவித்துள்ளார் கேனிஷா.