மாமியாரின் முழு கட்டுப்பாட்டில் நடிகர் ஜெயம் ரவி… மனைவியை விவாகரத்து செய்ய பின்னணி காரணம் இது தானா.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் பிறப்பில் ஒரு இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவர். மதுரை திருமங்கலத்தில் ஒரு இஸ்லாமிய குடுமபத்தில் பிறந்த எடிட்டர் மோகன், சுமார் பத்து வயது இருக்கும் தருவாயில், சென்னைக்கு தன்னுடைய சிறு வயதில் பிழைப்பு தேடி வந்த போது ரெனால்ட் தங்கவேலு என்கின்ற ஒரு காமெடி நடிகரிடம் வேலைக்குச் சேர்ந்துள்ளார், அந்த காமெடி நடிகர் ரெனால்ட் தங்கவேலு அவரை தத்துப் பிள்ளையாக எடுத்து இஸ்லாமியராக பிறந்த அந்த சிறுவனுக்கு மோகன் என பெயரிட்டு தன்னுடைய வாரிசாகவே எடிட்டர் மோகனை வளர்த்து வந்துள்ளார்.

மேலும் ரெனால்ட் தங்கவேலு மோகனுக்கு எடிட்டிங் போன்ற சினிமா துறை சார்ந்து பல கலைகளை கற்றுக் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து எடிட்டர் மோகன் பிராமண சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார், அவர்களுக்கு பிறந்த ஜெயம் ரவி, ஜெயம் ராஜா போன்ற தன்னுடைய பிள்ளைகளை இந்து கலாச்சார படியே வளர்த்து வருகிறார் எடிட்டர் மோகன்.

அதே போன்று தன்னுடைய குழந்தைகளுக்கும் இந்து மதம் சார்ந்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார் மோகன். அந்த வகையில் எடிட்டர் மோகன் பிறப்பில் ஒரு இஸ்லாமியராக இருந்தாலும் அவர் வளர்ந்து வந்த விதம் மற்றும் அவர் பின்பற்றக்கூடிய அனைத்தும் இந்து மதம் சார்ந்த இருந்து வருகிறது. இந்த நிலையில் எடிட்டர் மோகன் தன்னுடைய இரண்டு மகன்களான ஜெயம் ரவி மற்றும் ஜெயம் ராஜா இருவரையும் ஆரம்பத்திலிருந்து ஜெயம் ரவியை ஒரு நடிகனாகவும் ஜெயம் ராஜாவை ஒரு இயக்குனராகவும் செதுக்கி செதுக்கி வளர்த்து வந்துள்ளார்.

அந்த வகையில் ஜெயம் ராஜாவை பிலிம் இண்டஸ்ட்ரீஸ்ல் சேர்த்து, இயக்குனர் சார்ந்து எடிட்டர் மற்றும் கலைகளை கற்று தந்துள்ளார், அதேபோன்று ஜெயம் ரவிக்கு டான்ஸ், நடிப்பு என ஒரு நடிகராக என்ன தேவையோ அதை அனைத்தையும கற்றுக் கொடுத்து, கல்லூரியில் ஜெயம் ரவியை விஸ்காம் படிக்க வைத்தார். அந்த வகையில் ஜெயம் ரவி ஒரு நடிகராக வேண்டும் ஜெயம் ராஜா ஒரு இயக்குனராக வேண்டும் என்று முடிவு செய்து, வர்களுடைய சிறு வயதிலிருந்து வளர்த்து வந்துள்ளார் எடிட்டர் மோகன்.

மேலும் தெலுங்கில் நல்ல ஹிட் ஆன ஜெயம் படத்தை வாங்கி இங்கே டப்பிங் செய்து தன்னுடைய மகன் ஜெயம் ரவியை ஹீரோவாகவும் மற்றொரு மகன் ராஜாவை இயக்குனராகவும் அறிமுகம் செய்கிறார் எடிட்டர் மோகன். தற்பொழுது தன்னுடைய இரண்டு மகன்களும் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்த உடனேஅவர்களே சொந்தமாக முடிவெடுக்கும் இடத்திற்கு வந்து விட்டார்கள்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் ஜெயம் ரவி நடிக்கும் படத்தின் கதைகளை அவருடைய தந்தை எடிட்டர் மோகன் தான் கேட்டு வந்துள்ளார். அதன் பின்பு ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியே தன்னுடைய கதையைக் கேட்க படத்தை புக் செய்தார். ஆனால் ஜெயம் ரவி திருமணத்திற்கு பின்பு அவர் நடிக்கும் படத்தின் கதையை அவருடைய மாமியார் கேட்டு புக் செய்து வருகிறார். இருந்தாலுமே தன்னுடைய இரண்டு மகன்களும் திருமணம் ஆன பின்பு அவர்களுடைய சுதந்திரத்தில் எடிட்டர் மோகன் தலையிடுவதில்லை என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் ஜெயம் ரவி அவருடைய மனைவி உடனான விவாகரத்துக்கு காரணம், தந்தையிடம் இருந்து அவரது மாமியார் ஜெயம் ரவியை பிரித்து, ஜெயம் ரவி சினிமா கால் சீட் கொடுப்பது முதல், அவர் எந்த கதையில் நடிக்க வேண்டும் என்பது வரை அனைத்தும் தனது கட்டுக்குள் வைத்திருப்பதால் தான் என கூறப்படும் நிலையில், அது உண்மை இல்லை என்றும், தன்னுடை மகன் ஜெயம் ரவி சுதந்திரத்தில் எப்பபோதும் எடிட்டர் மோகன் தலையிடுவதில்லை என கூறப்படுகிறது.