ஆண்மையுள்ள ஆண்மகன் ஜெயம் ரவி …. ஆர்த்திக்கு தரமான பதிலடி கொடுத்த கெனிஷா …

0
Follow on Google News

ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து, கெனிஷா என்கிற பெண்ணுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார், மேலும் ஜெயம் ரவி – கெனிஷா சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில், என்னுடைய வாழ்க்கையில் ஒளியை கொடுக்க வந்த கெனிஷா என்னுடைய துணை என்று வெளிப்படையாக அவருக்கும் கெனிஷா வுக்கும் இடையில் இருக்கும் உறவு குறித்து உறுதி செய்தார் ஜெயம் ரவி.

மேலும் தன்னை ஜெயம் ரவியின் முன்னாள் மனைவி என்று யாரும் அழைக்க வேண்டாம் என ஆர்த்தி தெரிவித்து இருந்த நிலையில், அதற்கு நேரடியாகவே ஜெயம் ரவி முன்னாள்’ என்ற சொல் நான் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த தருணத்தில் எடுக்கப்பட்டது. அது எனது கடைசி மூச்சு வரை அப்படியே இருக்கும் என நேரடியாகவே இனி மீண்டும் ஆர்த்தி உடன் இணைய விருப்பம் இல்லை, எனது இறுதி மூச்சு வரை முன்னாள் மனைவி தான் என்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டார் ஜெயம் ரவி.

மேலும் ஆர்த்தி அவருடைய இரண்டு குழந்தைகளை முன்னிறுத்தி நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு தாயாக எனக்கு எப்பொழுதும் என் குழந்தைகளின் நலனும், எதிர்காலமுமே முதல் முக்கியத்துவம் வாய்ந்தது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும், மனோதிடத்தையும் அவர்களுடன் ஒருத்தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை என தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் ஜெயம் ரவி பரிதவிக்க விட்டு சென்று விட்டார் என்பது போன்று ஆர்த்தி தெரிவித்து இருந்த நிலையில்.

அதற்கு சரியான பதிலடியை கொடுத்துள்ள ஜெயம் ரவி, நான் என் மனைவியை விட்டு தான் விளக்கியுள்ளேன், என்னுடைய குழந்தையை விட்டு விலக வில்லை என தெரிவித்த ஜெயம் ரவி , மேலும் நான் மிகவும் தெளிவாக சொல்கிறேன். உங்கள் விளையாட்டை இப்போதே நிறுத்துங்கள். மிக முக்கியமாக, எனது குழந்தைகளை இதில் மீண்டும் ஒருபோதும் ஈடுபடுத்த வேண்டாம். நான் ஒரு சிறந்த தந்தையாகவும், அவர்களுக்கு எல்லா உறவாகவும் இருப்பேன். உங்களின் நடவடிக்கைகளுக்கு உங்களை நீதிமன்றத்தில் மட்டுமே பார்ப்பேன் என ஆர்த்தி குழந்தைகளை முன்னிறுத்திய குற்றச்சாட்டுகளுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார் ஜெயம் ரவி.

இந்த நிலையில் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தற்போதும் நான் ஆர்த்தி ரவி தான். எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. எனது பிள்ளைகளுக்கு அவர் தான் அப்பா. மேலும் நான் எப்பொழுதும் ஆர்த்தி ரவியாகத்தான் இருப்பேன் என தெரிவித்து இருந்த நிலையில் இதற்கு மறைமுகமாக கெனிஷா தனது சமூக வலைத்தளத்தில் மூலம் ஆர்த்திக்கு பதிலடி கொடுக்கும்படி ஒரு பதிவு போட்டு மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் கெனிஷா.

ஆண்மையுள்ள ஆண்மகன் எங்கு அமைதியை உணர்கிறாரோ அந்தப் பெண்ணின் பக்கம் சாய்வார் என கெனிஷா தெரிவித்துள்ளது, அதாவது ஆர்த்தி தற்போதும் நான் ஆர்த்தி ரவி தான் என்று தெரிவித்ததற்கு மறைமுகமாக என்னிடம் அமைதியை உணர்கிறார் ஜெயம் ரவி அதனால் என் பக்கமே அவர் இருப்பார், இனி உன் பக்கம் வரமாட்டார் என ஆர்த்திக்கு மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் கெனிஷா பதிவு அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் வலிமையுடன் போட்டி போடுவதல்ல ஒரு சமநிலை. இருவரும் ஒருவருக்கொருவர் சமநிலையை பூர்த்தி செய்து கொள்கிறோம் என்றும், யாராவது என்னிடம் எதையாவது சொல்ல வேண்டும் என்றால் என் முகத்திற்கு நேராக வந்து சொல்லுங்கள்” என்று ஆர்த்தியை மறைமுகமாக தாக்கியிருந்தார் கெனிஷா. இந்த நிலையில் ஜெயம் ரவி – கெனிஷா இருவரும் ஜோடியாக வலம் வந்த பின்பு ஆர்த்தி ஒரு அறிக்கை வெளியிட்டு தன் பக்கம் தான் நியாயம் உள்ளது என தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதிலடியாக ஜெயம் ரவி மற்றும் கெனிஷா இருவரும் பதிலடி கொடுத்து அவர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை உலகுக்கு வெளிப்படுத்தி இருந்தார்கள். இந்நிலையில் இதற்கு ஆர்த்தி என்ன பதில் அறிக்கை வெளியிட போகிறார் என பலரும் அவளோடு எதிர்பார்த்து கொண்டிருப்பது குறிப்பிடதக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here