காச வாங்கிட்டு எப்படியா ஜெயம் ரவி பேசுவது… கொஞ்சமாவது மனசாட்சி வேண்டாமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவர் தமிழில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் இறைவன். சைக்கோ திரில்லர் கதைகளை கொண்ட ‘இறைவன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு ஏ சர்டிபிகேட் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இறைவன் திரைப்படத்திற்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ராவ்வான திரில்லர் படத்தை திரையில் கொண்டாட ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர். ஆனால், அந்த நிலமையை அப்படியே தலைகீழாக மாறியது. எதிர்பார்த்து திரையரங்கிற்குள் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

இதனால் இறைவன் படத்தின் வசூலும் நாளுக்கு நாள் குறைய துவங்கியுள்ளது. ஜெயம் ரவி, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இணைந்த நடித்த படத்திற்கே இப்படியொரு நிலைமையா என பலரும் கேட்டு வருகிறார்கள். இறைவன் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 9 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.

தற்போது இப்படம் தோல்வி அடைந்தால் ஜெயம் ரவி தான் காரணம் என்று பலர் பேசி வருகின்றனர். இதற்கு முன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் குழந்தைகளுடன் இப்படத்திற்கு வராதீர்கள் என்று ஜெயம் ரவி கூறியதனால் தான் ‘இறைவன்’ திரைப்படத்திற்கு அதிக கூட்டம் வரவில்லை என்று நெட்டிசன்கள் பேசி வருகின்றனர். இதை குறிப்பிடுவதற்குதான் படத்திற்கு சென்சார் வழங்கப்படுகிறது. இந்நிலையில், இதை தனியாக குறிப்பிட்டு சொல்ல வேண்டிய அவசியம் என்ன என்பதே தயாரிப்புத் தரப்பினரின் கேள்வியாக உள்ளது. படத்தின் நாயகனே இப்படி பேசியதால், படத்திற்கு ரசிகர்களின் கூட்டம் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி பொன்னியின் செல்வன் மற்றும் இறைவன் இந்த இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் ஜெயம் ரவி நடித்து வந்துள்ளார். அப்போது தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக ஸ்டீராயிடும் எடுத்துள்ளார். அதனால் அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டு மூன்று மாதங்களுக்கு ஷூட்டிங் எதுவும் வராமல் உடல் நலம் சரியில்லாமல் தவித்துள்ளார்.

பாடிபில்டிங் கலாச்சாரம் தற்போது இளைஞர்கள், இளைஞிகள் இடையே பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. பலரும் தங்கள் உடலை மெருகேற்ற வேண்டும், பிட்டாக இருக்க வேண்டும் என்று பயிற்சிகளை செய்ய தொடங்கி உள்ளனர். முக்கியமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கலாச்சாரம் காரணமாக பலரும் ஜிம்மிற்கு செல்வத்தையும், பயிற்சிகள் செய்வதையும் வழக்கமாக்கிக்கொள்ள தொடங்கி உள்ளனர். பலரும் உடலை வேகமாக ஏற்ற வேண்டும் என்று ப்ரோட்டின் பவுடர் எடுக்க தொடங்கி உள்ளனர்.

இன்னும் ஒரு சிலர் ஒரு படி மேலே போய் சிலர் ஸ்டிராய்டு எடுக்கவும் தொடங்கி உள்ளனர். முக்கியமாக வேகமாக சிக்ஸ் பேக் வைக்க வேண்டும் என்று பலரும் ஸ்டீராய்டு எடுக்க தொடங்கி உள்ளனர். தீவிர உடற்பயிற்சி, அதீத ஸ்டீராய்டு பயன்பாடு காரணமாக பல இளைஞர்கள் மாரடைப்பு காரணமாக பலியாகும் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளன. அதை தான் ஜெயம் ரவியும் எடுத்து அவதிப்பட்டுள்ளார்.

பின் சரியாக அவர் படம் நடிக்க வரும் பொழுது நயன்தாராவுக்கு திருமணம் ஆனது. எனவே நயன்தாரா ஷூட்டிங் சிறிது காலம் வரவில்லையாம். அதன் பிறகு பார்த்தால் இயக்குநருக்கு உடல்நிலை சரியில்லையாம். இதுபோன்ற நிகழ்வுகளால் படத்தின் சூட்டிங் தள்ளிப் போனது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதியிலும் மாற்றம் ஏற்பட்டது.

இதனால் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் ஜெயம் ரவி. இப்படத்திற்காக அவரிடம் பேசப்பட்ட தொகை 12 கோடியாம். ஆனால் ஷூட்டிங் தள்ளிப் போனதால் மேலும் 3 கோடி கேட்டுள்ளார். இந்நிலையில் பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி இப்படி பேசியதும் படத்தின் வெற்றிக்கு தடையாக அமைந்ததாக தற்போது தயாரிப்பு தரப்பிற்கு வருத்தத்தை அளித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.