பல கோடி செலவில் தன்னுடைய மகளுக்கு மிக பெரிய அளவில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் திருமணம் ஏற்பாடுககளை செய்துள்ளர், ஆனால் இந்த திருமணத்தை பற்றி யாரும் பெரிதாக பேசாமல், அந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஜெயம் ரவி – கேனிஷா ஜோடி குறித்து தான் மிக பெரிய விவாதமே நடந்துள்ளது. குறிப்பாக இந்த உலகிற்க்கு ஒரு விஷயத்தை உணர்த்தவே ஜெயம் ரவி, இந்த நிகழ்வுக்கு கேனிஷா உடன் ஜோடியாக கலந்து கொண்டதற்கு காரணம் என கூறப்படுகிறது.
அதாவது முதல் நாள் இந்த திருமணத்தில் ஜெயம் ரவி – கேனிஷா இருவரும் ஒரே ஆடையில் ஜோடியாக வந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததில் பின்னணியில் கேனிஷாவை இரண்டாவது திருமணம் செய்ய போகிறேன் என இந்த உலகுக்கு மறைமுகமாக உணர்த்துகிறாரா.? அல்லது நாங்கள் இருவரும் காதலர்கள் என்பதை இந்த உலகுக்கு தெரிவிக்க தான் ஜெயம் ரவி இது போன்று நடந்து கொண்டு தன்னை சுற்றி வரும் சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயம் ரவி – கேனிஷா இருவரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வுக்கு பின்பு ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி தன்னுடைய வேதனையை அறிக்கை மூலம் பகிந்து கொண்டார். ஆனால் மனைவி அறிக்கை வெளியான அடுத்த நாள் மீண்டும் கேனிஷா உடன் ஜோடியாக ஜெயம் ரவி ஐசரி கணேசன் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டது, நீ என்ன அறிக்கை விட்டால் எனெக்கென்ன நான் கேனிஷாவை விட்டு வரமாட்டேன் என்பதை ஆர்த்திக்கு பதிலாக தருவது போன்று இருந்தது, இரண்டாவது நாள் ஜெயம் ரவி – கேனிஷா இருவரும் ஜோடியாக கலந்து கொண்ட நிகழ்வு.
இந்த நிலையில் கேனிஷாவை ஜெயம் ரவி திருமணம் செய்வதில் ஒரு சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது, அதாவது ஜெயம் ரவியை விட்டு பிரிவதாக அவருடைய மனைவி ஆர்த்தி இதுவரை அறிவிக்கவில்லை, குறிப்பாக சினிமா துறையை சார்ந்த தம்பதியர்கள் தங்களுடைய இல்லற வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பொழுது கணவன் மனைவி இருவருமே ஒருமனதாக பிரிவதாக ஒரே மாதிரியான அறிக்கை அவரவர் பெயர்களில் வெளியிடுவார்கள்.
உதாரணத்திற்கு நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக முடிவெடுத்த பின்பு தனுஷ் நாங்கள் இருவரும் ஒருமனதாக பிரிக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்ட அடுத்த சில நிமிடங்களிலே ஐஸ்வர்யாவும் அதே அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அறிக்கையில் இடம் பெற்ற வாக்கியங்கள் எல்லாம் ஒன்றாகத்தான் இருந்தது அவர்கள் பெயரும் கையொப்பமும் மட்டும் தான் வேற வேறாக இருந்தது.
அப்படி இருக்கையில் ஜெயம் ரவி தன்னுடைய அறிக்கையில் ஒருமனதாக பிரிக்கிறோம் என்று குறிப்பிடாமல், நான் என் மனைவியை விட்டு பிரிகிறேன் என்று தான் குறிப்பிட்டிருக்கிறார். அந்த வகையில் ஜெயம் ரவியை விட்டு பிரிவதற்கு முழுவதுமாக ஆர்த்தி சம்மதம் தெரிவிக்கவில்லை , ஜெயம் ரவி தான் ஆர்த்தியை விட்டு பிரிந்துள்ளார்.
இந்நிலையில் சட்டப்படி விவாகரத்து பெற்றால் மட்டுமே சட்டப்படி ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும். அந்த வகையில் ஜெயம் ரவி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் என்று ஆர்த்தி உறுதியாக இருப்பதாகவும். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறேன் என ஜெயம் ரவி இரண்டாவது திருமணத்திற்கு செக் வைத்துள்ளார் அவரது மனைவி ஆர்த்தி.
அதே நேரத்தில் ஆர்த்தி விவாகரத்து வழங்குவதில் பிடிவாதமாக இருப்பதால், இந்த விவாகரத்து வழக்கு அடுத்த பத்து வருடங்கள் கூட தொடர்ந்து நிலுவையில் இருக்கும், அதுவரையும் ஜெயம் ரவி – கேனிஷா இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் காத்திருப்பார்களா.? அல்லது இருவரும் லிவிங் டு கெதர் வாழக்கையில் மட்டுமே இருக்க போகிறார்கள் என்கிற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.