ஆள் வெச்சு அடிச்சுட்டா.? பாவம்யா ஜெயம் ரவி … இப்படியுமா மாமியார் குடும்பம் செய்வாங்க.?

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தி விட்டு பிரிந்த நிலையில் அவருடைய மனைவி மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைவதற்காக தயாராக இருந்தாலும் கூட ஜெயம் ரவி மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்வதற்கு ஒரு சதவீதம் கூட விருப்பமில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். ஜெயம் ரவி இப்படி தன்னுடைய மனைவியை முழுவதுமாக வெறுப்பதற்கு அவர் அனுபவித்த கொடுமைகள் தான் என்று கூறப்படுகிறது.

தன்னுடைய 15 வருட இல்லற வாழ்க்கையில் கடைசியாக 5 வருடம் பிரச்சனை மேல் பிரச்சனை, அதில் இறுதி கட்டமாக கடைசி இரண்டு வருடம் கொடுமை மேல் கொடுமைகளை ஜெயம் ரவி அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இப்படி பணக்கார குடும்பம் என்று பில்டப் கொடுத்த ஜெயம் ரவி மாமியார் மற்றும் மனைவி ஆகியோர் முழுக்க முழுக்க ஜெயம் ரவி வருமானத்திலேயே வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஜெயம் ரவி, மனைவியின் கொடுமைகள் தாங்க முடியாமல் தன்னுடைய வீட்டில் உள்ள அனைத்து உடைமைகளையும் விட்டுவிட்டு தான் அணிந்திருந்த ஆடையுடன் வாடகை காரில் ஏறி அந்த வீட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார். இதனை தொடர்ந்து சில காலம் கோவாவில் இருந்த ஜெயம் ரவி. தன்னுடைய மன ப்பிரச்சனையை தீர்த்துக்கொண்டு, தன்னுடைய பெற்றோரிடம் தான் அனுபவித்த சித்திரவதைகளை எடுத்து கூறி கலந்து ஆலோசித்து,

இனியும் எனக்கு அந்த வாழ்க்கை வேண்டாம் என்று முடிவு செய்து, மனைவி விட்டு பிரிவதாக அறிவித்தார். இந்த நிலையில் இந்த விஷயத்தை பேசி சரி செய்யலாம் என்றால் அதற்கு வழியே இல்லை என்பது போன்று அமைந்து விட்டது. காரணம் ஜெயம் ரவி அவருடைய மனைவியுடன் இணைந்து வாழ விருப்பமில்லை என்று தெரிவித்த பின்பு, நம் கணவர் நம்ம விட்டுப் போனால் தான் சந்தோசம் என்றால் சந்தோஷமாக இருக்கட்டும் என்று ஆர்த்தி பெருந்தன்மையாக கூட விட்டுக் கொடுத்திருக்கலாம்.

ஆனால் தொடர்ந்து ஜெயம் ரவி உடைமைகள் அவருடைய பாஸ்போர்ட் அவருடைய அனைத்து ஆவணங்களையும் வைத்துக்கொண்டு தராமல் இழுத்து அடித்துக் கொண்டிருந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்த ஜெயம் ரவி, தன்னுடைய உடமைகளை மீட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். ஜெயம் ரவி உடைமைகளை காவல் நிலையம் மூலமாக மீட்டாலும் முழுமையாக அவருடைய பொருட்களை மீட்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஜெயம் ரவி மனைவி நாங்கள் வீட்டை திறந்துதான் வைத்துள்ளோம் இது அவருடைய வீடு எப்ப வேண்டுமானாலும் வரலாம் ஏன் அவரே வந்து அவருடைய பொருள்களை எடுத்துச் செல்லலாமே என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஜெயம் ரவி ஏன் அவருடைய வீட்டிற்கு சென்று அவருடைய உடமைகளை அவரே எடுக்காமல் போலீஸ் நிலையத்தில் கம்ப்ளைன்ட் செய்தார் என்று விசாரித்ததில் சில தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது ஜெயம் ரவி அவருடைய பொருள்களை எடுக்கச் சென்றால் ஜெயம் ரவி எங்களை தகாத வார்த்தைகளால் திட்டினார், தாக்கினார் என்று கூட ஏதாவது தன் மீது அவதூறு பரப்பலாம் என்று ஜெயம் ரவிக்கு அச்சம் இருந்ததாகவும், மேலும் ஒருவேலை அவர்களே கூட ஆட்களை ச வைத்து அடித்து விடுவார்களா என்று ஜெயம் ரவி பயப்படுகிறார் என்ற கேள்விக்கு அதற்கெல்லாம் வாய்ப்பில்லை.

ஆனால் ஜெயம் ரவி அங்கே சென்று விட்டு வந்தால் அவர் மீது ஏதாவது அவதூறு பரப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது, என்னுடைய நகைகளையும் சேர்த்து எடுத்துவிட்டார், அல்லது எங்களை கடுமையாக திட்டினார் என்றெல்லாம் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கு இதுக்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டாம் என்பதற்காக தான், முழுமையாக நான் என் மனைவியை விட்டு பிரிந்து விட்டேன் இனிமேல் என்ன இருக்கிறது அந்த வீட்டிற்கு செல்ல, அதனால் என்னுடைய உடமைகளை மீட்டெடுத்து தாருங்கள் என ஜெயம் ரவி போலீஸ் நிலையம் சென்றதாக கூறப்படுகிறது.