சமரச பேச்சுவார்த்தை தோல்வி… அப்பா பக்கம் செல்லும் நடிகர் ஜெயம் ரவி இரண்டு மகன்கள்.. விவாகரத்து உறுதி…

0
Follow on Google News

தற்பொழுது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் ஜெயம் ரவி அவருடைய மனைவி விவாகரத்து குறித்த விவாதம் உச்சத்தை தொட்டுள்ளது. நடிகர் ஜெயம் ரவி சினிமாவில் பெரும்பாலும் எந்த ஒரு நடிகையுடையும் கிசுகிசுவில் சிக்காமல் இருந்து வருகின்றவர். அந்த வகையில் சினிமா சார்ந்த எந்த ஒரு பொது நிகழ்வுக்கும் தன்னுடைய மனைவியுடனையே ஜெயம் ரவி கலந்து கொள்வார்.

அந்த விதத்தில் ஜெயம் ரவி அவருடைய மனைவியை மிகவும் நேசிக்க கூடியவராகவே வளம் வந்தவர்.மேலும் ஜெயம் ரவி திருமணம் செய்து கொண்ட குடும்பம் மிக பெரிய கோடீஸ்வரர் குடும்பம், அந்த வகையில் ஜெயம் ரவி நடிக்கும் படங்களை தொடர்ந்து அவருடைய மாமியார் தான் தயாரித்து வருகிறார். மேலும் ஜெயம் ரவி நடிக்கும் படத்தை தானே தயாரிக்கும் படம் என்பதால் மாமியாரே கதைகள் கேட்பது, ஜெயம் ரவி ககால் சீட்டை முடிவு செய்வது, என நாளடைவில் மருமகன் ஜெயம் ரவியை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது மனைவி ஆர்த்தியின் குடும்பம்.

அந்த வகையில் வீட்டோட மாப்பிள்ளை ஆகவே ஜெயம் ரவி மாறிவிட்டார் என்றே சொல்லலாம், மேலும் ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி சுதந்திரமாக எதுவுமே செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டதாகவும், அவருடைய மாமியார் மற்றும் மனைவி சொல்வதை மட்டும் கேட்கும் அளவுக்கு மாமியார் மற்றும் மனைவியின் கட்டுப்பாட்டுக்கு வந்த ஜெயம் ரவி, மாமியாரின் தவறான கதை தேர்வின் காரணமாக சினிமாவில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தார்.

ஜெயம் ரவி அவருடைய அண்ணன் இயக்கத்தில் நடித்த அனைத்து படங்களுமே மெகா ஹிட், குறிப்பாக ஜெயம் ரவியை சினிமாவில் மிகப்பெரிய நடிகராக உருவாக்கியதில் முக்கிய பங்கு அவருடைய அண்ணனுக்கு உண்டு. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி தன்னைச் சுற்றி கட்டப்பட்டிருந்த அடிமைச் சங்கிலியை நீக்கி தானே கதை கேட்டு தானே முடிவெடுக்க வேண்டும், தன்னுடைய விவகாரத்தில் மனைவி, மருமகள் யாரும் தலையிட கூடாது என்கின்ற முடிவை ஜெயம் ரவி எடுக்க தொடங்கியதின் விளைவால் குடும்பத்தில் ஜெயம் ரவிக்கு அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மாமியாருக்கும் ஜெயம் ரவிக்கும் பிரச்சனை என குடும்பத்தில் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு மன உளைச்சலை தரும் வகையில் சிறு சிறு பிரச்சனைகள் அரங்கேறி வந்துள்ளது. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்தவுடன், பலரும் ஜெயம் ரவி பொன்னின் செல்வன் படத்தில் நடித்த ஒரு நடிகையுடன் கிசுகிசுகள் சிக்கி அதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு விவாகரத்து முடிவை எடுத்தார் என்று பரவலாக பேசப்பட்டது.

ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், மாமியார் மற்றும் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மற்றும் பிரச்சனையின் காரணமாகவே ஜெயம் ரவி இந்த விவாகரத்து செய்து விட வேண்டும் என முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய முடிவெடுத்தபோது ஆர்த்தி பேசி சரி செய்து விடலாம், விவகாரத்தலாம் வேண்டாம் என்கின்ற முடிவில் இருந்துள்ளார்.

ஆனால் ஜெயம் ரவி சமரசமாக சில நிபந்தனைகளை மனைவியிடம் விதித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதை அவருடைய மனைவி ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், இதனால் ஜெயம் ரவிக்கும் அவருடைய மனைவிக்கும் இடையில் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியை தொடர்ந்து, ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி மனைவியும் விவாரத்து செய்துவிடலாம் என்கின்ற முடிவை எடுத்துள்ளார்.

அதே நேரத்தில் ஜெயம் ரவியின் இரண்டு குழந்தைகளும் அம்மாவை விட அப்பாவிடமே அதிக பாசமாக இருப்பதால், அப்பாதான் வேண்டும் என்று அம்மாவிடம் அடம் பிடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் ஜெயம் ரவி உடன் இருக்கும் புகைப்படத்தை நீக்கி ஜெயம் ரவியை அன்பாலோ செய்துள்ளார் அவரது மனைவி ஆர்த்தி. இதனை தொடர்ந்து ஜெயம் ரவியின் விவாகரத்து வதந்தி அல்ல உண்மை என்று பலரும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here