மாமியார் கொடுமை… அடிமாடு போன்று நடத்தப்பட்ட ஜெயம் ரவி…

0
Follow on Google News

நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவி ஆர்த்தியை விட்டு பிரிந்து அவருடைய தோழி கெனிஷாவை தன்னுடைய துணை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ஜெயம் ரவி. இந்த நிலையில் ஜெயம் ரவியை விட்டு அவருடைய மனைவி பிரிவதற்கு விருப்பமில்லை. ஆனால் ஜெயம் ரவி அவருடைய மனைவி விட்டு பிரிவதில் உறுதியாக இருக்கிறார்.

இந்த நிலையில் ஜெயம் ரவி இந்த அளவுக்கு தன்னுடைய 16 வருட இல்லற வாழ்க்கையை முறித்து கொண்டதின் பின்னணியில் அவரை மாமியார் ஒரு அடிமாடு போன்று நடத்திய கொடுமையை தன்னுடை அறிக்கை மூலம் மறைமுகமாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். பொதுவாகவே மாமியார் மருமகளை கொடுமைப்படுத்தும் செய்திகள் தான் பெருமளவு வெளிவரும்.ஆனால் மாமியார் மருமகனை கொடுமைப்படுத்தும் நிகழ்வும் ஆங்காங்கே அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம் மருமகன் வீட்டோடு மாப்பிள்ளையாக சென்றதின் விளைவு தான் ஜெயம் ரவி போன்றவர்கள் அடிமாடு போன்று நடத்தப்படுகின்றனர் என்கின்ற ஒரு விமர்சனமும் உண்டு. ஆனால் ஜெயம் ரவி வீட்டோட மாப்பிள்ளை என்று பரவலாக பேசப்பட்டாலும் கூட ஜெயம் ரவி அவருடைய உழைப்பால் தான் தன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் ஜெயம் ரவியை அவருடைய மாமியாரும் மனைவியும் கைப்பற்றி கொண்டு வீட்டோட மாப்பிள்ளை போன்று பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் ஜெயம் ரவி அவருடைய தந்தை மற்றும் அவருடைய அண்ணன் கட்டுப்பாட்டில் இருந்த வரை தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தார. ஆனால் எப்பொழுது மாமியார் கட்டுப்பாட்டுக்கு வந்தாரோ தொடர்ந்து அவர் நடித்த படங்கள் அனைத்துமே பிளாப் தான்.

காரணம் படத்தின் கதை, கால் சீட் என அனைத்தையும் முடிவு செய்ய வேண்டிய இடத்திற்கு வந்தார் ஜெயம் ரவியின் மாமியார். ஒரு கட்டத்தில் மற்ற தயாரிப்பு நிறுவனங்களில் ஜெயம் ரவி நடிக்கும் படங்களுக்கு அவர் தகுதிக்கேற்ற சம்பளம் வாங்கி வந்த நிலையில், மாமியார் தயாரிப்பில் ஜெயம் ரவிக்கு அடிமாட்டு விலைக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், அந்த அளவுக்கு ஜெயம் ரவியை அடிமை போல் நடத்தி வந்துள்ளார் அவருடைய மாமியார்.

ஒரு கட்டத்தில் பெரும்பாலான ஜெயம் ரவி நடிக்கும் படங்களை அவர் மாமியாரே தயாரித்து குறைந்த சம்பளத்திற்கு ஜெயம் ரவியை அடிமாடு போன்று நடத்தியது வந்துள்ளார். மேலும் ஜெயம் ரவியின் சினிமா வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்த அவருடைய அண்ணன் தனி ஒருவன் பார்ட் 2 எடுப்பதற்கு கூட அவரால் கால் சீட் கொடுக்க முடியாத அளவிற்கு ஜெயம் ரவியை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார் அவருடைய மாமியார்.

ஒரு கட்டத்தில் ஜெயம் ரவிக்கு ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டு நம்மை உருவாக்கிய நம்முடைய அண்ணனுக்கு கால் சீட் கொடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு நாம் சுதந்திரமாக செயல்பட முடியாத அளவுக்கு சென்று விட்டோம் என்று ஒரு குற்ற உணர்வோடு உணர்ந்த ஜெயம் ரவி. மேலும் தொடர்ந்து மனைவி தன்னை சந்தேகப்படுவது, மாமியார் தவறான கதையை தேர்வு செய்து நம்மை நடிக்க வைத்து நம்மளுடைய சினிமா கேரியரை மோசம் செய்து வருகிறது.

இப்படி எல்லாம் ஒரு கட்டத்தில் கோபமாக வெளிப்பட்ட தன் விளைவுதான் ஒட்டுமொத்தமாக மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்து விடலாம் என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஜெயம் ரவி. ஆனால் ஒரு கட்டத்தில் குழந்தைகள் நலன் கருதி மனைவியுடன் சேரலாம் என்று எண்ணினாலும் மாமியார் தன்னுடைய குடும்பத்தில் தலையீடு இருக்கக்கூடாது என்கின்ற நிபந்தனையை ஜெயம் ரவி வைக்க அதற்கு மனைவி ஒப்புக் கொள்ளாததால் ஒரே படியாக விவாகரத்து தான் ஒரே தீர்வு என்று ஜெயம் ரவி முடிவுக்கு வந்துள்ளததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here