பகத் பாசில் நீங்களும் இப்படி செய்யலாமா.? பாவம்யா மாரிசெல்வராஜ்.. .

0
Follow on Google News

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் திரைக்கு வந்த மாமன்னன் திரைப்படத்திற்கு, திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை என்றாலும் கூட, தற்பொழுது OTT யில் வெளியாகியுள்ள மாமன்னன் படத்தை மாரிசெல்வராஜ் வருத்தப்படும் அளவுக்கு கொண்டாடி வருகிறார்கள் குறிப்பிட்ட தரப்பினர்.. அட என்னப்பா.. மாரிசெல்வராஜ் இயக்கிய படத்தை கொண்டாடினால் அதற்கு அவர் சந்தோசம் தானே பட வேண்டும்.. எதற்கு வருத்தப்படவேண்டும் என்று கேட்கலாம்.

ஆம்.. ஒரு சாதி ஒழிப்பு போராளியாக அறியப்படும் மாரிசெல்வராஜ், இந்த சமூகத்தில் சினிமா மூலம் மாற்றத்தை கொண்டு வருகிறார், என வாழ்வியல் சம்பந்தமாக படம் எடுக்கிறார் என்கிற இமேஜ் அவருக்கு உண்டு, ஆனால் எந்த நோக்கத்திற்காக மாரிசெல்வராஜ் படம் எடுத்தாரோ, அந்த நோக்கத்திற்கு எதிர்மாறாக மாறியுள்ளது தற்பொழுது மாமன்னன் படத்தில் இடம்பெற்றுள்ள ரத்தினவேல் கதாபாத்திரம்..

மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மாரிசெல்வராஜ் பேசிய பேச்சுக்கு பின்பே, இவர் குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவர் என்கிற எதிர்ப்பு குரல் சில சமூகத்தினரிடம் இருந்து ஒலிக்க தொடங்கியது மட்டுமில்லாமல், சினிமா துறையிலில் இருந்தும் மாரிசெல்வராஜ்க்கு எதிராக முக்கிய சினிமா பிரபலங்கள் பேச தொடங்கினார்கள்.

ஒரு இயக்குனர் , ஒரு சாதி சார்ந்த நல்ல விஷயங்களை திரைப்படங்களில் பதிவு செய்வது சாதி பற்று. ஆனால் மற்றொரு ஜாதியை வெறுப்பது போன்று, மற்ற சாதியை இழிவாக பேசுவது போன்று படம் எடுப்பது தான் ஜாதி வெறி என்று சொல்லப்படும். தன்னுடைய ஜாதியை நீ என்ன வேண்டுமானாலும் உயர்த்திக் கொள், ஆனால் மற்றொரு ஜாதியை நீ அசிங்கப்படுத்த வேண்டும் என்று நினைத்தால் அது தான் ஜாதி வெறி என இயக்குனர் பேரரசு மாமன்னன் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் மாரிசெல்வராஜ் பேசிய பேச்சுக்கு தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருந்தார்.

இந்த நிலையில் குறுகிய நிலையில் இருந்த இயக்குனர் மாரிசெல்வராஜுக்கு இருந்த எதிர்ப்புகள், தற்பொழுது வேறு ஒரு விதமாக திரும்பியுள்ளது. நீ ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பெயர் குறிப்பிடாமல் ரத்தினவேல் என்கிற கதாபத்திரத்தின் மூலம் மிக கொடூரமான வில்லனாக, குறிப்பாக சாதி வெறியனாக கட்டப்பட்டுள்ளதற்கு, நீ எந்த கதாபாத்திரத்தை எந்த ஒரு சாதியை குறிப்பிடாமல் வில்லனாக காட்ட பட்டாயோ.. அதே ரத்தினவேல் தான் எங்களுக்கு ஹீரோ மட்டுமில்லை, அந்த கதாபத்திரம் எங்க சாதி தான், எங்க சாதி தான் என போட்டி போட்டு கொண்டிருக்கிறார்கள் குறிப்பிட்ட சில சமூகத்தினர்.

கடந்த சில நாட்களாவே மாமன்னன் படத்தின் இடப்பெற்றுள்ள பகத் பசிலின் ரத்தினவேல் கதாபாத்திரத்தை அவரவர் சாதி பெருமை பாடலை போட்டு கொங்கு பகுதியில் உள்ள குறிப்பிட்ட சாதியினர், வடமாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சாதியினர், தென்மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சாதியினர், கொண்டாடி வருவதற்கு, சிலர் கடுமையான எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் எரிகிற நெருப்பில் என்னை ஊற்றுவது போல், பகத் பாசில், பேஸ்புக் கவர் போட்டோவாக மாமன்னன் ரத்னவேலுவாக இருக்கும் போட்டோவை வைத்தர், இது ஏற்கனவே ரத்தினவேலுவை கொண்டாடி வரும் ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பகத் பாசில் பங்கேற்றது போல் அமைத்தது. இதனை தொடர்ந்து பகத் பாசில் பேஸ்புக் பக்கத்திற்கு சென்று, ஒவ்வொருவரும் ரத்னவேலு என்ற பெயரில் பல்வேறு சாதிய பெயர்களை இணைத்து கமெண்ட் செய்து பகத் பாசிலை வாழ்த்தி வந்த நிலையில், தீடிரென ரத்தினவேலுவாக இருக்கும் கவர் போட்டவை பகத் பசில் நீக்கியுள்ளது , அவர் நடித்த கதாபாத்திரம் புகைப்படத்தை அவர் எதற்கு நீக்க வேண்டும், ஏதும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா.? என்கிற குழப்பத்தில் ரத்தினவேலுவின் ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.