இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் அவருடைய மகன் விஜயை சினிமாவில் ஹீரோவாக அடையாள படுத்த எத்தனையோ படம் எட்டுதாலும் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்தது, இத்தனைக்கு அன்று எஸ்.ஏ.சந்திரசேகர் முன்னணி இயக்குனர்களின் ஒருவர். இப்படி ஒரு சூழல், இன்று விஜய் இருப்பதை விட அன்று மூன்று மடங்கு உச்சத்தில் இருந்த விஜயகாந்தை சந்தித்து விஜய் உடன் இணைந்து ஒரு படம் நடிக்க எஸ்.ஏ.சந்திரசேகர் தயங்கி தயங்கி கேட்க.
உடனே கால் சீட் கொடுத்து செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் விஜய்க்கு சினிமாவில் வாழ்க்கை கொடுத்தவர் விஜயகாந்த். இந்த நிலையில் செந்தூரப்பாண்டி படத்தின் மூலம் நடிகர் விஜய்க்கு எப்படி விஜயகாந்த் சினிமாவில் வாழ்க்கை கொடுத்தாரோ.1 அதேபோன்ற ஒரு வாய்ப்பை விஜய் தற்பொழுது சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடிவரும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டிக்கு கொடுக்க வேண்டும் என்பது தான் நன்றி விசுவாசம்.
ஆனால் அதெல்லாம் செய்வதற்கு விஜய் ஒன்றும் விஜயகாந்த் போன்ற மனம் படைத்தவர் இல்லை என்றாலும் கூட. கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் விஜயகாந்த் இருந்து வரும் நிலையில், நடிகர் விஜயின் தந்தை உட்பட அனைத்து சினிமா துறவினரும் ஒவ்வொருவராக விஜய்காந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருகிறார்கள், ஆனால் விஜய் என்னவென்று கூட விஜயகாந்த் வீட்டை பக்கம் எட்டி பார்க்காதது தான் தற்பொழுது நன்றி மறந்த விஜய் என்கிற கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மற்றும் அவருடைய மைத்துனர் சுதீஷ் இருவரும் மூத்த சினிமா துறையைச் சார்ந்த பத்திரிகையாளர் அனைவருக்கும் அழைப்பு விடுத்து உங்களை கேப்டன் பார்க்க விரும்புகிறார், தற்பொழுது கேப்டன் பழைய நினைவுகளை எல்லாம் மறந்து வருகிறார். ஆனால் பழைய நண்பர்களை சந்திக்கும் போது சில அவருக்கு பழைய நினைவுகள் மீண்டும் வந்து செல்கிறது என இந்த ஏற்பாடுகளை செய்துள்ளார்கள்.
அப்படி சினிமா மூத்த பத்திரிகையாளர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்ட விஜயகாந்த் சந்திப்பின் போது, சில நிமிடங்கள் அமைதியாக இருந்த விஜயகாந்த் ஒவ்வொருவராக பார்த்து பின்பு பழைய நினைவுகள் வந்து, ஒவ்வொரு பெயரையும் தெரிவித்து கண்ணீர் விட்டு விஜயகாந்த் அழ ஆரம்பித்து விட்டாராம். அந்த வகையில் நடிகர் விஜய் நேரில் சென்று விஜயகாந்த்தை உடல்நலம் விசாரித்து இருந்தால்.
தன்னை வைத்து பல படங்கள் இயக்கிய எஸ்.ஏ.சந்திரசேகர் மகன், சிறுவனாக என்னுடைய படத்தில் நடித்தவன், தம்பியாக நான் செந்தூரப்பாண்டி படத்தில் அறிமுகம் செய்து வைத்த விஜய் என்று மிக பெரிய உச்சத்தில் இருக்கிறார் என்கிற நினைவு விஜயகாந்துக்கு வந்து கண்ணீர் விட்டு மகிழ்ச்சி அடைந்திருப்பார். ஆனால் அதற்கான வாய்ப்பை விஜய் ஏற்படுத்தி தரவில்லை.
அதே நேரத்தில் நடிகர் விஜய் அவர் தந்தையுடன் சண்டையிடாமல் இருந்திருந்தால், நிச்சயம் எஸ்.ஏ சந்திரசேகரை விஜயை கையை பிடித்து விஜயகாந்தை சந்திக்க அழைத்துச் சென்றிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் விஜய்யை பின்னின்று தவறாக வழிநடத்துகின்ற்றவர்கள் அவருடைய தந்தையை மட்டும் விஜய்யிடம் இருந்து பிரிக்க வில்லை, எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் நெருக்கமானவர்களையும் விஜய் சந்திக்காதபடி செய்து வருகிறார்கள் என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.
அந்த வகையில் விஜயகாந்த் குடும்பத்தினர் எஸ்.ஏ.சந்திரசேகர் உடன் மிக நெருக்கமாக இருந்து வருவது தான், விஜயை பின்னின்று வழி நடத்துகின்றவர்கள், விஜயகாந்தை சந்திக்க விடாமல் தடுத்து இருக்கலாம் என்றும், என்ன தான் இருந்தாலும் விஜய்க்கு தெரிய வேண்டாமா.? அவர் தந்தையையே கண்டுகொள்ளாதவர், விஜயகாந்தை கண்டு கொள்வாரா.? என விஜய் மீது கடுமையாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடதக்கது.