தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்… மூன்றே நாளில் இமாலய சாதனை…ராயன் எத்தனை கோடி வசூல் தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான ராயன் திரைப்படம் ஜூலை26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. வடசென்னையில் தன் தம்பிகள் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வரும் போது தனுஷ் எதிர்கொள்ளும் பிரச்னைகளையும், திருப்பங்களையும் மையமாக வைத்து உருவான இந்தப்படம் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றது. படம் முழுக்க முழுக்க சண்டைக் காட்சிகளால், பல ஹாலிவுட் படங்களைப் போலவே இருந்தது என சொல்லலாம்.

அதோடு படத்தில், அடிதடி, சண்டை காட்சிகள் அதிகமாக இருப்பதால், இந்த படத்திற்கு சென்சார் போர்டு நிறுவனம் ஏ சர்டிஃபிகேட் வழங்கியிருந்தது. படத்தின் முதல் பாதி வெறித்தனமாகவும் மற்றும் இடைவேளை காட்சியானது, தியேட்டரே பற்றி எரியும் அளவு பிளாக் பஸ்டராகவும் அமைந்தது. அதேபோல், இரண்டாம் பாதி கொஞ்சம் விறுவிறுப்பு குறைவாக இருந்தாலும் படம் பார்ப்பவர்களுக்கு விஷுவல் ட்ரீட் கொடுத்து தனுஷ் மிரளவைத்திருந்தார்.

இந்நிலையில் தான் தமிழ் திரையுலகிற்கு ஹாலிவுட் ரேன்ஜ்க்கு நடிகர் தனுஷ் கொடுத்த ராயன் படம், வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்து பல ரெக்கார்ட்களையும் முறியடித்துள்ளது. தனது 50வது படமான ராயன், ரசிகர்களுக்கு சமர்ப்பணம் என்று தனுஷ் கூறியிருந்த நிலையில், தனுஷின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவு வசூலை இந்தப்படம் வாங்கி குவித்துள்ளது. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ராயன் ரூ.6 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியானது.

அதோடே சனி மற்றும் ஞாயிறு காட்சிகளும் ஹவுஸ்புல்லாக ஓடிகொண்டிருந்தது. இந்நிலையில், முதல்நாளிலேயே, இந்தியளவில் ரூ. 12.5 கோடி ரூபாயை ராயன் வசூலித்துள்ளது. இது தமிழில் 11 கோடியும், தெலுங்கில் 1.5 கோடியும் வசூல் வேட்டை செய்துள்ளது. குறிப்பாக தனுஷ் நடித்த படங்களில் முதல் நாள் அதிகவசூல் ஈட்டிய படமாக கர்ணன் தான் இருந்தது.

ஆனால் கர்ணன் படம் முதல் நாளில் ரூ. 10.40 கோடி வசூல் செய்தது, தற்போது அந்த வசூல் சாதனையை ராயன் படத்தின் முதல் நாள் வசூல் முறியடித்துள்ளது. அதோடு தனுஷ் நடித்த படங்களில் முதல் நாள் அதிக வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் ராயன் படம் பெற்றுள்ளது. அதேபோல் உலகளவில் சக்கப்போடு போட்டு கொண்டிருக்கும் ராயன், இரண்டாவது நாளில் ரூ. 46 கோடி வரை வசூல் செய்துள்ளது.

இதனை தொடர்ந்து, மூன்றாவது நாளும், உலகளவில் ரூ. 73 கோடி வரை வசூல் செய்த ராயன் படம் தான், தனுஷின் சினிமா கெரியரின் பெஸ்ட் திரைப்படம் என்றும் சொல்லப்படுகிறது. இதன்மூலம் கேப்டன் மில்லர் படத்தின் மொத்த வசூலையும் இப்படம் மூன்றே நாட்களில் கடந்துவிட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் A சான்றிதழுடன் திரைக்கு வந்து முதல் 3 நாளில் இத்தனை கோடிகளை வசூலித்த முதல் தமிழ்ப்படமும் ராயன்தான்.

இப்படி பல சாதனைகளை முறியடித்த ராயன் படம், நடிகர் தனுஷ் இயக்குநராக மாபெரும் வெற்றியைப் பெற்றார் என்பதற்கு சாட்சியாக அமைந்துள்ளது. அதேபோல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு மிகப்பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்பதால், ராயன் படம், ரூபாய் 100 கோடிகள் வசூலைப் படைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

ரூபாய் 100 கோடிகளை ராயன் படம் வசூல் செய்தால், தமிழ் சினிமாவில் 100 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இயக்குநர்கள் பட்டியலில் நடிகய் தனுஷூம் இணைத்துவிடுவார். அதே போல் தனது பிறந்த நாளுக்கு ரசிகர்கள் கொடுத்த மிகப்பெரிய பரிசு இந்த பிளாக் பஸ்டர் வெற்றி என நடிகர் தனுஷ் தன் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.