ரஜினி சொன்ன அந்த ஆசை வார்த்தையை நம்பி வசமாக சிக்கிய தனுஷ்… கொடுத்த வாக்கை மறக்கலாமா.?

0
Follow on Google News

நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். மிகக் குறுகிய காலத்தில் காதலித்த இவர்களின் திருமணம் அறிவிப்பு வெளியாகி அடுத்த ஒரு வாரத்திற்குள் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் மிக எளிமையாக தனுஷ் – ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு மாமனார் ரஜினி மீது தனுசுக்கும் மருமகன் தனுஷ் மீது ரஜினிக்கும் ஒரு அன்பும் மரியாதையும் இருவருக்கிடையில் இருந்து வந்தது.

2011 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் உடல் நிலை சரி இல்லாமல் சென்னை மற்றும் சிங்கப்பூரில் சிகிச்சைக்கு சென்று சென்ற போது ஒரு குடும்பத்தின் மூத்த மகன் போன்று அந்த குடும்பத்தினருக்கும், மாமனார் ரஜினிகாந்த் அவர்களையும் உடன் இருந்து பார்த்து கொண்டார் தனுஷ். பல்வேறு கட்டங்களில் சினிமாவில் தனுஷ் சரிவை சந்தித்தபோதெல்லாம் தன்னுடைய மாமனார் ரஜினிகாந்தின் செல்வாக்கை பயன்படுத்தி தனக்கான வாய்ப்பை உருவாக்கி கொண்டவர் தனுஷ்.

அந்த வகையில் மனைவி ஐஸ்வர்யா மீது அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் காரணமாக சிறு சிறு பிரச்சனைகள் இருந்தாலும், மாமனாருக்கு மரியாதை கொடுத்து மனைவி ஐஸ்வர்யா அட்ராசிட்டிகளை சகித்துக் கொண்டு வாழ்ந்து வந்தவர் நடிகர் தனுஷ். போயஸ் கார்டன் ரஜினிகாந்த் வீட்டின் அருகிலேயே ஒரு காலி இடத்தை வாங்கி அதில் தனுஷ் வீடு கட்டுவதற்கு முக்கிய காரணம் தனுஷ் மனைவி ஐஸ்வர்யா தன்னுடைய தாய் – தந்தை வீட்டின் அருகிலேயே குடியிருக்க வேண்டும் என்கிற பிடிவாதம் தான் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தனுஷ் புதிய வீடு கட்டுவதற்கு முன்பு மாமனார் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து, இந்த வீட்டின் கட்டிட பணிகளை ஸ்டார்ட் பண்ணுங்க நாங்க பண உதவி செய்கிறோம் என்று உறுதியளித்துள்ளனர். புதிய வீட்டின் பூமி பூஜை நடந்து கட்டிட வேலை ஆரம்பித்த அடுத்த சில நாட்களிலேயே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் இடையில் ஏற்பட்டு மோதல் காரணமாக இருவரும் பிரிவதாக அறிவித்தனர்.

தனுஷ் அவருடைய மனைவியை விட்டு பிரிவதற்கு முன்பு தனுஷ் புதியதாக கட்டும் வீட்டிற்கு ரஜினிகாந்த் தரப்பில் இருந்து பண உதவி செய்வோம் என்று கூறியிருந்த நிலையில் , ஐஸ்வர்யாவை விட்டு பிரிந்த பின்பு தனுஷ் புதிய வீட்டை பற்றி மாமனார் ரஜினிகாந்த் தரப்பில் இருந்து யாரும் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் மனைவியை விட்டு பிரிந்த இந்த சூழலில் அவர்கள் தரப்பிலிருந்து பணம் கேட்பது நமக்கும் தன்மானமாக இருக்காது என்பதை உணர்த்த தனுஷ்.

மேலும் அவர்களும் இனி பணம் கொடுக்க முன்வர மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு யாருடைய உதவியும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியில் புதிய வீட்டை கட்டி முடிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்தார் தனுஷ். அந்த வகையில் அடுத்தடுத்து படங்களின் கமிட்டான தனுஷ், படம் தொடங்குவதற்கு முன்பே அவருடைய முழு சம்பளத்தையும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து பெற்று கொண்டார்.

அந்த வகையில் சத்தியஜோதி மூவிஸ் தயாரிப்பில் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்து மூன்று படத்திற்கான சம்பளத் தொகையை முழுவதுமாக வாங்கி, அந்த பணத்தை புதிய வீடு கட்டுவதற்கு பயன்படுத்தி கொண்டார். இப்படி யாருடைய தயவும் இல்லாமல் தன்னுடைய முயற்சியில் 150 கோடி ரூபாய் மதிப்பில் மிக பிரமாண்ட வீட்டை கட்டி முடித்து சோதனைகள் கடந்து சாதனை படைத்துள்ளார் தனுஷ்.