மாமனார் ரஜினிக்கு எதிராக களம் இறங்கிய தனுஷ்.. பீதியில் அந்தர் பல்டி அடித்த ரஜினி..! என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்தே, குடும்பங்கள் கொண்டாடும் கமர்சியல் படமாக இது இருந்தாலும் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை, இதனால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்க்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நஷ்டத்தை சரி செய்வதற்காக, நடிகர் ரஜினிகாந்த் சம்பளத்தை குறைத்து மேலும் ஒரு படத்துக்கு கால் சீட் வாங்கியுள்ளது சன் பிக்சர்.

இதனை தொடர்ந்து ரஜினியின் புதிய படத்துக்கான இயக்குனரை தேர்வு செய்யும் பணியை ரஜினிகாந்த் விருப்பத்துக்கே விட்டுவிட்டது தயாரிப்பு நிறுவனம், இதனை தொடர்ந்து ரஜினியின் புதிய படத்தை இயக்குவதற்கு பல முன்னனி இயக்குனர்கள் போட்டி போட்டு கொண்டிருக்கையில், இயக்குனர் நெல்சனை தேர்வு செய்தார் ரஜினிகாந்த், இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக உறுதி செய்யப்பட்டு இந்த படத்திக்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியானது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் மிக பெரிய தோல்வியை தழுவியதை தொடர்ந்து ரஜினியின் புதிய படத்தில் இருந்து இயக்குனர் நெல்சன் மாற்றப்படுவதாக தகவல் வெளியானது, இதற்கான நடவடிக்கையில் ரஜினிகாந்த் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது. இது குறித்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரஜினிகாந்த் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை அறிவதற்காக நெல்சன் தொடர்பு கொண்ட போது சரியான பதில் ஏதும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கிய நடிகர் தனுஷ். நேரில் நெல்சனை அழைத்து நாம் ஒரு படம் பண்ணலாம் என கதை கேட்டுள்ளார். நெல்சன் சொன்ன கதையை தனுஷ் ஓகே சொல்லி, உங்கள் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை முடித்துவிட்டு அடுத்த இந்த படத்தை பண்ணலாம் என தனுஷ் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் குறித்தும் தனுஷ் கேட்க அதற்கு நடந்த விஷயங்களை தெரிவித்துள்ளார் நெல்சன்.

இதன் பின்பு ரஜினி நடிக்கும் படத்தின் கதையையும் கேட்ட தனுஷ், இந்த படத்தில் இயக்குனரை மாற்றம் செய்தால், நீங்கள் விருப்பப்பட்ட இதே கதையில் உடனே நான் நடிக்கிறேன், கதை எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு என தனுஷ் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் பின்பு ரஜினிகாந்த் புதிய படத்தில் வாய்ப்பு கொடுத்தால் கொடுக்கட்டும், இல்லை என்றால் கவலையில்லை என தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தகவல் அனுப்பியுள்ளார் நெல்சன்.

ஆனால் அப்பா நடிக்கும் படத்தின் கதையில் தனுஷ் நடிக்க இருக்கும் தகவல் அறிந்த ரஜினிகாந்த் இரண்டு மகள்களும் ஓன்று சேர்ந்து, அப்பா நெல்சன் உங்களுக்கு சொன்ன கதை நல்ல கதை, அவருடைய விருப்பத்துக்கு நீங்க படம் இயக்கவிட்டால் போதும் படம் சூப்பர் ஹிட் என தெரிவிக்க, தனது புதிய படத்தின் இயக்குனரை மாற்றுவதை கைவிட்டு ரஜினிகாந்த் அந்தர் பல்டி அடித்ததாக கூறப்படுகிறது.

நன்றி மறந்து நண்பன் முதுகில் குத்திய நெல்சன்…பாவம் சிவகார்த்திகேயன்..! என்ன நடந்தது தெரியுமா.?