தனுஷுக்கு தக்க பாடம் புகட்டிய தமிழக மக்கள்… கேப்டன் விஜயகாந்த் அஞ்சலி செலுத்தாத உனக்கு இது தேவை தான்..

0
Follow on Google News

தமிழ் சினிமாவை வாழ வைத்த விஜயகாந்த் சமீபத்தில் மரணம் அடைந்த போது, சினிமா துறையை சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாமல், நியூ இயர் கொண்டாட்டத்தில் பிசியாக இருந்தனர், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்த வராத நடிகர்களை மக்கள் வறுத்து எடுத்து வந்த நிலையில், ஒவ்வொரு நடிகராக விஜயகாந்த் சமாதிக்கு வந்து அழுது தங்கள் நடிப்பின் முழு திறமையையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதில் முன்னணி நடிகராக இருக்க கூடிய அஜித், சிம்பு, தனுஷ் இவர்கள் இதுவரை விஜயகாந்த் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தாது மக்கள் மத்தியில் கடும் கோபத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதில் நடிகர் தனுஷ் குடும்பத்திற்கு நேரடியாகவே விஜயகாந்த் பல உதவிகளை செய்துள்ளார், தனுஷின் அக்காவுக்கு மருத்துவம் படிக்க சீட் வாங்கி கொடுத்து தன்னுடைய மகள் மருத்துவராக வேண்டும் என்கிற கஸ்தூரி ராஜா ஆசையை நிறைவேற்றி வைத்தவர் விஜயகாந்த்.

ஆனால் விஜயகாந்த் மறைவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வராத தனுஷ், நியூ இயர் கொண்டாட்டத்தில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என செம்ம ஜாலியாக இருந்து விட்டு சென்னை வந்த தனுஷ், அவருடைய நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகும் கேப்டன் மில்லர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பிசியாகி விட்டார், அதுமட்டுமின்றி கேப்டன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த மனம் இல்லாத தனுஷ்,

அவருடைய கேப்டன் மில்லர் ஆடியோ வெளியிட்டு விழாவில், விஜயகாந்த் நடிப்பில் வெளியான ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு பாடலை பாடி, விஜயகாந்த் மீது ஏற்பட்டுள்ள மக்களின் அனுதாபத்தை பயன்படுத்தி தன்னுடைய கேப்டன் மில்லர் படத்தை விஜயகாந்த் பாடல் மூலம் விளம்பரம் படுத்தி கொண்டார். தனுஷின் இந்த நடவடிக்கையை பார்த்து, கேப்டன் மறைந்த போது நேரில் வந்த அஞ்சலி செலுத்தவில்லை, இது வரை கேப்டன் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. யாரை ஏமாற்ற தனுஷ் இந்த நாடகத்தை போடுகிறார், உன் பருப்பு இனி எங்களிடம் வேகாது, கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தாத தனுஷ் படத்தை புறக்கணிப்போம் என மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான தனுஷின் கேப்டன் மில்லர் படத்தை அடித்து துவம்சம் செய்து ஓரம் கட்டி வருகிறது சிவகார்த்திகேயனின் அயலான், கேப்டனுக்கு அஞ்சலி செலுத்தாத தனுசின் கேப்டன் மில்லர் படத்தை மக்கள் புறக்கணிதத்தின் விளைவாக கேப்டன் மில்லரை மிஞ்சி வசூல் வேட்டை செய்து கொண்டிருக்கிறது அயலான்.

சிவகார்த்திகேயனின் அயலான் படம் முதல் நான்கு நாளில், 50 கோடி வசூல் செய்துள்ளதாகவும், கேப்டன் மில்லர் படத்திற்கு அடுத்தடுத்த நாட்களில் திரையரங்குகளில் கூட்டம் குறைந்து, வசூல் ரீதியாக கேப்டன் மில்லர் பலத்த அடி வாங்கி, நான்காவது நாள் முடிவில் 39.5 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை திரட்டி வைத்துள்ள தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் படம் செய்த வசூலை கூட எட்ட முடியாமல் திணறி வருகிறது. படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரம் கூட முடிவடையாத நிலையில், தியேட்டர்களில் கூட்டம் இல்லாமல் இருப்பது தனுஷை மட்டுமின்றி படக்குழுவையும் சேர்த்து கலங்கடித்துள்ளது. இவ்வாறு கேப்டன் மில்லர் படு தோல்வி அடைய காரணம் தனுஷ் விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்ததால், மக்கள் கேப்டன் மில்லர் படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டார்கள், இதே தான் மற்ற நடிகருக்கும் என்கிற விமர்சனம் பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.