நடிகர் தனுஷ் என்றதுமே கிசு கிசுக்கு பெயர் போனவர் என்று தான் பெயர், அந்த வகையில் பல நடிகை உடன் இணைந்து வைத்து கிசு கிசுக்க பட்டவர் நடிகர் தனுஷ், சமீப காலமாக நடிகர் தனுஷ் எந்த ஒரு நடிகையுடன் இனைந்து வைத்து கிசு கிசு வெளியாகாமல் இருந்து வந்த நிலையில், தற்பொழுது நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில் நடிகர் தனுஷை மிக கடுமையாக தாக்கி குறிப்பிட்டு இருந்தது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் தனுஷ்.
மேலும் தனுஷ்க்கு எதிராக நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கைக்கு சினிமா துறையை சேர்ந்த பல நடிகைகள் லைக் செய்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக அப்படி நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நடிகைகள் அனைவருமே, தனுஷ் உடன் இதற்கு முன்பு நடித்த நடிகைகள், அந்த விதத்தில் தனுசுக்கு எதிராக இப்படி நடிகைகள் ஒன்று சேர்ந்தால் தனுஷ் நிலைமை படு மோசமாகிவிடும் என பலரும் எச்சரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் தனுஷ் சுமார் 50 படங்கள் நடித்துள்ள நிலையில், ஒரு படத்திற்கு 3 நடிகைகள் விதம் மொத்தம் 150 நடிகைகளுக்கு தனுஷ் தொல்லை கொடுத்து இருப்பார் என்றும், அம்மா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைக்கு கூட நடிகர் தனுஷ் தொல்லை கொடுப்பார் என பிரபல பாடகி சுசித்ரா தெரிவித்து மிக பெரிய பரபரப்பை ஏற்ப்படுத்தி வரும் நிலையில் தற்பொழுது கீர்த்தி சுரேஷ் – தனுஷ் இடையில் நடந்த சம்பவம் வெளியாகியுள்ளது.
பிரபு சாலமன் இயக்கத்தில், தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடித்த தொடரி படம் பெரும்பாலும் ரயில் சம்பந்தமான ரயில் மேல் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் இருக்கும், அந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷை ஏதோ ஒரு விஷயத்திற்காக தனுஷ் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அதற்கு கீர்த்தி சுரேஷ் முடியாது என மறுத்தததாக கூறப்படுகிறது. இந்த பிரச்சனையின் காரணமாக கீர்த்தி சுரேஷ் உடன் நடிக்கும் காட்சியில் 15 டேக் 20 டேக் என தனுஷ் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
அதாவது கீர்த்தி சுரேஷ் சோர்ந்து போகும் அளவிற்கு தனுஷ் டேக் வாங்கி கொண்டு இருக்கிறார். இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது, படப்பிடிப்பும் சுமூகமாக நடைபெறவில்லை. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாகியும் இந்த பிரச்சனை தொடரில் படப்பிடிப்பில் தீர்ந்த பாடு இல்லை. ஒரு கட்டத்தில் ரயிலில் இருந்து இறங்கி வந்த கீர்த்தி சுரேஷ் கேராவனுக்குள் சென்றவர் அவருடைய அப்பா சுரேஷுக்கு தொலைபேசியில் பேசுகிறார்.
படப்பிடிப்பில் நடந்த பிரச்சனையை தன்னுடைய தந்தையிடம் தெரிவித்து இந்த பிரச்சனையை நான் எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை என தன்னுடைய தந்தையிடம் கீர்த்தி சுரேஷ் படபிடிப்பு தளத்தில் கேரவன்குள் இருந்து பேசுகிறார். உடனே கீர்த்தி சுரேஷின் தந்தை மகளிடம், நீ அமைதியா இரு, இதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்னவர். கீர்த்தி சுரேஷ் தந்தை சுரேஷ் ரஜினியும் நெருங்கிய நண்பர் என்பதால் உடனே கீர்த்தி சுரேஷின் தந்தை தனுஷின் மாமனாரான ரஜினிகாந்துக்கு போன் செய்கிறார்.
அங்கே தொடரி படப்பிடிப்பில் நடக்கும் விஷயத்தையும் தன்னுடைய மகள் கீர்த்தி தன்னிடம் அது குறித்து பேசியதையும் ரஜினிகாந்திடம் தெரிவிக்கிறார் கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ். இதன் பின்பு ரஜினிகாந்த் என்ன மேஜிக் செய்தார் என்று தெரியவில்லை தொடரி படப்பிடிப்பில் அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷுக்கு எந்த ஒரு பிரச்சனையும் தனுஷ் கொடுக்கப்படவில்லை.
இந்த சம்பவத்தை தொடரி படத்தில் படப்பிடிப்பில் வேலை செய்தவர்கள் தெரிவித்ததாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான தொடரி படம் நினைத்தபடி எடுக்க முடியாமல் போனதற்கு தனுஷும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்டவர் தான் தனுஷ் என பரவலாக பேசப்பட்டு வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.