வாழ்க்கையின் புதிய தோழியை பகிரங்கமாக அறிவித்த தனுஷ்…அந்த நடிகையுடன் மகிழ்ச்சியாக தனுஷ் மகன்கள்..!

0
Follow on Google News

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி ஒருமனதாக பிரிவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இருவரும் பிரிந்த பின்பு ஐஸ்வர்யா தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள சைக்கிளிங் செல்வது, ஜாக்கிங் செல்வது என பல உடற்பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதே நேரம் மறுபக்கம் தனுஷ் அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த தம்பதியர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. படப்பிடிப்பு இல்லாத மற்ற நேரங்களில் தனது இரண்டு குழந்தைகளை தனியாக அழைத்துச் சென்று மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு வருகிறார் தனுஷ் .தாய் ஐஸ்வர்யாவுடன் இருப்பதை விட தந்தையுடன் இருப்பதையே அதிகம் யாத்ரா, லிங்கா இருவரும் விரும்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ் தாய், தந்தை, அண்ணன், சகோதரிகள் என ஒட்டுமொத்த குடும்பமும் கலந்து கொண்டது. தனுஷ் சினிமா நிகழ்ச்சியில் இதுபோன்று மொத்த குடும்பமும் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை என்று கூட சொல்லலாம், இதில் தனுஷ் மகனும் கலந்து கொண்டார்.

மனைவியை விட்டு பிரித்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த தனுஷ், இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியாக காட்சியளித்தார். இந்த மேடையில் தனுஷ் தன் வாழ்க்கையின் புதிய தோழியை பகிரங்கமாக தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் மத்தியிலும் அறிமுகப்படுத்தினார். திருசிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனன் குறித்து தனுஷ் பேசுகையில், நித்யா மேனன் டேலண்ட் பற்றி பேசிக்கொண்டே போகலாம்.

இன்னும் பத்து நிமிடம் தான் சன் லைட் இருக்கும், அதற்குள் இந்த மொத்த படப்பிடிப்பை நடத்தி முடிக்க வேண்டும் என்றால், அதில் நித்யா மேனன் இருக்கிறார் என்றால் தைரியமாக அந்த காட்சியை எடுக்கலாம். அப்படி ஒரு தனித்துவமான திறமையாளர் நித்யா மேனன். இவருடன் உடன் இணைந்து அதிக படங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன், நித்யா மேனன் என் வாழ்க்கையிலும் இப்போது ஒரு சிறந்த தோழி என பகிரங்கமாக தனுஷ் பேசினார்.

இந்த நிகழ்ச்சியின் போது நித்யா மேனன் அருகில் தனுஷ் இளைய மகன் லிங்கா அமர்ந்திருந்தார். நித்யா மேனன் குறித்து தனுஷ் பேச நித்தியா மேனன் மேடையின் கீழே மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டிருக்க அருகில் இருந்த தனுஷ் மகனும் தந்தை நித்யா மேனன் பற்றி பேச பேச மகிழ்ச்சியுடன் சிரித்து என்ஜாய் பண்ணிக் கொண்டிருந்தார், மேலும் சமீப காலமாக நித்யாமேனன் மிக நெருக்கமாக தனுஷ் மற்றும் அவரது மகன்களுடன் நெருக்கி பழகி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அடுத்தடுத்து தனுஷ் நடிக்கும் படங்களில் நித்யாமேனன் நடிக்கும் வாய்ப்பை தனுஷ் அமைத்து கொடுக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், மனைவியை விட்டு பிரிந்த பின்பு கடும் சோகத்தில் இருந்த தனுஷ் வாழ்க்கையில் தோழியாக நித்யாமேனன் வந்த பின்பு சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியுடன் காட்சியளிக்கிறார் தனுஷ் என கூறப்படுகிறது.

பிளாட்பாரம் டூ சினிமா பைனான்சியர்… எப்படி வந்தது இத்தனை கோடி.? யார் இந்த அன்பு செழியன்.?