தனுஷ் ஓவர் அட்ராசிட்டி… அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்களிடம் கைவரிசையை காண்பித்த தனுஷ்…

0
Follow on Google News

நடிகர் தனுஷ் அவருடைய மாமனார் குடியிருக்கும் போயஸ் கார்டன் வீட்டில் அருகிலேயே மிக பிரம்மாண்டமாக பங்களா ஒன்று கட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடியேறியுள்ளார். இந்நிலையில், தனுஷ் பிரமாண்டமாக கட்டியுள்ள போயஸ் கார்டன் இல்லத்தின் பக்கத்தில் உள்ள ஒரு வீட்டையும் விலக்கி வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விலக்கி வாங்கியுள்ள அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களை கால அவகாசம் கூட கொடுக்காமல் உடனே காளி செய்ய வேண்டும் என்று தனுஷ் தெரிவித்ததாகவும். ஆனால் அவர்கள் கால அவகாசம் வேண்டும் என்று வீட்டை காலி செய்வதற்கு தாமதம் செய்ததால், நடிகர் தனுஷ் ஆட்களை வைத்து அவர்களை மிரட்டியதாகவும், மேலும் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அந்த வீட்டிற்கு செல்லும் கரண்ட் தண்ணீர் போன்றவற்றை துண்டிக்க செய்ததாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் இது மிகப் பெரிய சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் தனுஷ் மீது தொடர்ந்து பல சர்ச்சைகள் வெடித்து வந்த நிலையில், தற்பொழுது போயஸ் கார்டனில் தன் வீட்டின் அருகே உள்ள வீட்டை விலக்கி வாங்கி அங்கே குடி இருக்கிறவர்களுக்கு கால அவகாசம் கொடுக்காமல் அடாவடி செய்யும் வகையில் நடந்து கொள்வதாக விமர்சனம் எழுந்து வருவது தனுஷின் இமேஜை மிகப்பெரிய அளவில் பாதிப்பு அடைய செய்துள்ளது.

தனுஷ் ஒரு வீட்டை விலக்கி வாங்கி விட்டார் என்றால் நிச்சயம், அந்த வீட்டில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு காலி செய்ய கால அவகாசம் கொடுக்க வேண்டும். ஆனால் ரவுடிகளை வைத்து மிரட்டுவது. அரசு அதிகாரிகளை வைத்து கரண்டை கட் செய்வது போன்ற செயலில் ஈடுபடுவதால், தனுஷ் இது போன்ற செயலில் அரசு அதிகாரிகள் செய்வதற்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தார் என்கின்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில் வீட்டில் குடியிருப்பவர்களுக்கு கால அவகாசம் கொடுத்து காலி செய்ய விடாமல், இறக்கமின்றி தண்ணீர் மற்றும் மின்சாரத்தை கட் செய்வது, அந்த வீட்டில் குடியிருப்பவர்கள் எந்த மாதிரி அவதிக்கு உள்ளாகுவார்கள், குறிப்பாக அந்த வீட்டில் வயதானவர்கள் இருந்தால் எந்த அளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்று கூட சற்றும் யோசியாமல் தனுஷ் இவ்வாறு செய்துள்ளார் இது ஒரு இறக்கமற்ற செயல் என்றும் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள்

மேலும் அதிகாரிகளின் சப்போர்ட்டும் இருப்பதால்தான் நடிகர் தனுஷ் போன்ற நடிகர்கள் ஒரே போன் காலில் நினைத்ததை சாதிக்கும் வகையில் வீட்டில் இருப்பவர்களை காலி செய்வதற்காக மின்சாரத்தை துண்டிப்பது, தண்ணீரை துண்டிப்பது, போன்ற அடாவடிகளை ஈடுபடுகிறார்கள் ஆனால் ஒரு சாமானியன் தன் வீட்டிற்கு மின் இணைப்பு வேண்டும், அல்லது தண்ணீர் இணைப்பு வேண்டும் என்றால் நடையா நடக்க வேண்டி இருக்கிறது, அந்த வகையில் தனுஷின் அடாவடி த்தனம் ஒரு பக்கம் இருந்தாலும் அவர் செய்யும் அடாவடிக்கு அரசு இயந்திரங்களும் துணை போகிறதா என மக்கள் மிகுந்த மன வேதனையை அடைந்து வருவதும், அதே போன்று இதற்கு முன்பு தனுஷ் மாமியார் லதா ரஜினிகாந்த் நடத்தும் ஆசிரமம் பள்ளி ஒன்றுக்கு வாடகை பாக்கி செலுத்தாமல் லதா ரஜினிகாந்த் அடாவடி செய்ததாக செய்திகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here