தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட நடிகராக உள்ள தனுஷ் கடைசியாக ‘நானே வருவேன்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த ஆண்டு வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. தமிழில் ‘சாணி காயிதம்’, ‘ராக்கி’ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடத்தில் கவனம் பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.
தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து தனுஷை வைத்து 4ஆவது முறையாக மிகப்பிரமாண்டமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை அடித்த கன்னட ஸ்டார் சிவராஜ் குமாரும் இப்படத்தில் நடிக்கிறார்.
’ஜெயிலர்’ திரைப்படத்தில் வெறும் 10 நிமிடங்கள் தோன்றிய சிவராஜ் குமார் காட்சிகளுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்றால் தனுஷின் ’கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அப்படி என்றால் அந்த படத்தில் அவருடைய காட்சிகள் மிகப்பெரிய அளவில் மாஸ் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் டிசம்பர் 15ஆம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சிறிது நாட்கள் முன்பு வெளியான கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் முக்கியமான நடிகர் ஒருவர் தனுஷூக்கு அண்ணனாக நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஜெயிலர் படத்தின் அனுபவத்தை போல், சிவராஜ் குமாருக்கு கேப்டன் மில்லர் படப்பிடிப்பின் போது சிறப்பாக எதுவுமே அமையவில்லை.
எதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோம் என்று யோசிக்கும் அளவிற்கு தனுஷ் இவரை நடத்துகிறாராம். தனுஷ் எப்போதும் படத்தின் ஷூட்டிங்க்கு லேட்டாக வருகிறாராம். அதுவும் வந்த பதினைந்து நிமிடத்தில் கிளம்பி விடுகிறாராம். கேட்டால் இன்னைக்கு மனது சரியில்லை என்று கூறி விடுகிறாராம். அதுமட்டுமில்லாமல் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரை மரியாதைக்குக் கூட கண்டுகொள்ள மாட்டாராம்.
கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நாட்கள் முழுவதும் இப்படித்தான் தொடர்ந்து நடந்திருக்கிறது. சிவராஜ் குமார் ரொம்பவும் கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்து முடித்து கொடுத்திருக்கிறார். இதனால் சிவராஜ்குமார் தமிழ் சினிமாவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவிற்கு அவர் மனம் பாதிக்கப்பட்டுள்ளதாம். சிவ ராஜ்குமார் ரஜினியின் நெருங்கிய நண்பர். இருப்பினும் தனுஷ் இவ்வாறு நடந்து கொள்வது தனுஷ் மீது மிக பெரிய அவ பெயரை ஏற்படுத்தி வருகிறது.
இருந்தாலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ரஜினி கூட இப்படி படப்பிடிப்பு தளத்திற்கு லேட்டாக வருவது, சக கலைஞர்களை மதிக்காமல் நடந்து கொள்வது என செய்ததில்லை. மேலும் ரஜினிகாந்த் மருமகன் என்கிற காரணத்தினால் தான் தனுஷ் உடன் பிற மொழி நடிகர்கள் நடிக்க முன் வருகிறார்கள், மேலும் தனுஷை பெருமபாலான நடிகர்கள் ரஜினியின் மருமகனாக தான் மரியாதையையுடன் பார்த்து வருகிறார்கள்.
அப்படி இருக்கையில் தனுஷின் இந்த செயல்பாடுகள், மிக பெரிய உச்சத்தில் இருக்கும் ரஜினிகாந்த் மருமகன் தனுஷ், முதலில் படப்பிடிப்பில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை மாமனார் ரஜினியை பார்த்து கற்று கொள்ளட்டும் என விஷயம் அறிந்தவர்கள் சினிமா வட்டாரத்தில் மூணு முனுத்து வருவதை பார்க்க முடிகிறது.