மக்கள் தனுஷுக்கு சவுக்கடி கொடுக்கும் நேரம் இது.! ராயன் மாதிரி படம் எடுத்த எப்படி சமூகம் திருந்தும்..

0
Follow on Google News

ராயன் படத்தின் கதை வேற ஒண்ணுமில்ல, கதையில மூணு அண்ணன் ஒரு தங்கச்சி, இளைய 2 அண்ணன்களும் சேர்ந்து மூத்த அண்ணனை கத்தில குத்திருவாங்க, அப்புறம் தங்கச்சி அவளோட இளைய அண்ணனை கத்தியால குத்தி கொன்னுடும், அப்புறம் மூத்த அண்ணன் 2 ஆவது அண்ணனை கத்தியால குத்தி கொன்னுடுவாரு சார்.. நடுநடுவுல வில்லனுக ஒரு 150 பேரை இந்த மூணு அண்ணனுகளும் சேர்ந்து கொல்லுவாங்க.

கடைசியா மிஞ்சுன ஒரே அண்ணனும், ஒரு தங்கையும் லாரில ஏறி ஊரைவிட்டே போறாங்க சார். இது தான் ராயன் படத்தின் கதை சுருக்கம், படத்தின் முழு ரிவியூ பார்க்கலாம், ஒரு ஊரிலே காத்தவராயன், மாணிக்க ராயன், முத்துவேல் ராயன் என்று மூன்று ராயன்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா. அனாதைகளான இவர்களின் உயிருக்கு ஆபத்து வரும் போது ஒரு கொலை செய்து விட்டு ஊரை விட்டு ஓடி வந்து எல்லோரையும் வளர்த்து ஆளாக்குகிறார் மூத்த அண்ணன் ராயன்.

ராயன் வாழும் பகுதியில் உள்ள இரண்டு ரவுடிக் கும்பலுக்கு இடையே நடக்கும் மோதலில் ஏற்படும் குழப்பத்தில் ராயனின் உருப்படாத தம்பி நெம்பர் 1 மாட்டிக் கொள்கிறார். அந்தத் தம்பியைக் காப்பாற்ற அண்ணன், தம்பிகள் மூவரும் இணைந்து ரவுடிக் கும்பல் 1 ஐப் போட்டுத் தள்ளுகிறார்கள். எதிரி ஒழிந்தான் என்று நிம்மதியாக இருக்க அறிவில்லாத ரவுடி நம்பர் 2, ராயன் இருந்தால் தனக்கு ஆபத்து என்று அவரைப் போட்டுத் தள்ள முயல்கிறார்.

ஆகவே, தங்கையின் திருமணத்துக்கு முன்பு ரவுடி நம்பர் 2வையும் போட்டு விடுவோம் என்று களமிறங்கும் ராயனுக்குத் திடீர் அதிர்ச்சி. ரவுடி நம்பர் 2 உடன் இணைந்த அவரது இரண்டு தம்பிகளே அவரைக் குத்தி விடுகிறார்கள். மேலும் அந்தக் கும்பல் தங்கையையும் வல்லுறவு கொள்கிறது.இப்படி அறிவால் கத்தி, ரத்தமுமாக சென்று கொண்டிருக்கும் கதையில், , நடு அண்ணன், சின்ன அண்ணன் ஆகிய இருவரையும் பழி வாங்க பெரிய அண்ணனோடு இணைந்து தங்கை எடுக்கும் துர்கை அவதாரம் தான் climax.

இத்தனைப் பேரைக் கொன்ற தனுஷைப் போட்டுத் தள்ளலாம் என்று காவல் துறை காத்திருக்கிறது. அவர் மீண்டும் இன்னொரு ஊருக்குத் தங்கையுடன் சேர்ந்து தப்பியோடி இரண்டாம் பாகத்திற்கு lead கொடுக்கிறார். இருந்ததில் படம் பார்த்தவர்கள் தான் செத்து சுண்ணாம்பாக வீடு திரும்பும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் இந்த படம் தேவையா என்றால், சமுதாயத்தை சீரழிக்கு இந்த படம் தேவையில்லை என்றே சொல்ல வேண்டும். ஏற்கனவே தமிழக்தில் ரவுடிசம் தலைவிரித்து ஆடி கொண்டிருக்கையில், அதை கட்டுப்படுத்துவது எப்படி என அரசும் காவல்துறைக்கு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ள, இந்த காலகட்டத்தில் கொலை எப்படி செய்வது என்று இளைய தலைமுறையினர் கற்றுக்கொள்ள உதவும் படமாக அமைத்துள்ளது ராயன்.

கஞ்சா போதையில் இப்படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது தான் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும் வகையில் அமைத்துள்ளது ராயன், மேலும் கூலிப்படைகள் கூட்டத்தோடு பார்த்து தன் தொழில்நுட்ப அறிவை மேலும் வளரும் வகையிழும், அரசியல் ரௌடிஸிசம் மில்லியனர்களை போட்டு தள்ள ஊக்குவிக்கும் படம் தான் தனுஷின் 50வது படம். மொத்தத்தில் இந்த சுமுகத்தை சீரழிக்கும் இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால், அடுத்தடுத்து இது போன்ற படங்கள் தொடர்ந்து எடுக்கப்படும். மொத்தத்தில் இந்த படத்தை மக்கள் புறக்கணிப்பதே இந்த சமூகத்திற்கு மக்கள் செய்யும் கடமை என்கிற கருத்தும் உலாவி வருகிறது.