நடிகர் தனுஷூக்கு தமிழ் சினிமாவில் முக்கிய இடம் உள்ளது , நடிகர் தனுஷ் சினிமாவில் எந்தளவுக்கு பேரும் புகழும் இருக்கிறதோ அந்தளவுக்கு அவர் மீது நிறைய சர்ச்சைகளும் விமர்சனங்களும் இருந்து வருகின்றன. குறிப்பாக பல நடிகைகளுடன் அவர் கிசுகிசுக்கப்பட்டவர். அவருடன் நடித்த பல நடிகைகளுடன் அவர் நெருங்கிய நட்பில் இருந்ததாக அவ்வப்போது இணையத்தில் தகவல் வெளியாகி வைரலாவது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது.
ஆரம்பத்தில் ஸ்ருதிஹாசன் அமலாபால் திரிஷா சமந்தா மற்றும் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி ஆகியோருடன் தனுஷ் நெருக்கமான இருந்ததாக பலமுறை தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் 3 படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த போது அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்துள்ளததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

அதே போல் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி – தனுஷூக்கும் நெருங்கிய நட்பு இருந்துள்ளது,இதுகுறித்து பெரிய பிரச்னை ஏற்பட்ட நிலையில் டிடி அவரது கணவரையே விவாகரத்து செய்துவிட்டதாகவும் கோலிவுட்டில் நீண்ட நாட்களாக ஒரு தகவல் உலா வருகிறது. அதே போல் நடிகை திரிஷாவுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் வருண் என்கிற தெலுங்கு பட தயாரிப்பாளருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், திரிஷா தனுஷ் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை அவர் பார்த்ததால் அந்த திருமணமே நின்றுபோனதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தங்கமகன் படத்தில் சமந்தா தனுஷ் முத்தக்காட்சிகளில் நடித்ததால்தான் நாக சைதன்யா, சமந்தாவையே விவகாரத்து செய்தார் என்றும் தகவல் அப்போதே வெளியானது. இந்நிலையில் மைனா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அமலாபால், வேலையில்லா பட்டதாரி வேலையில்லா பட்டதாரி 2 என படங்களிலும் தனுஷூக்கு ஜோடியாக நடித்தார்.
காதல் மன்னன் பெயர் வாங்கிய தனுஷூக்கும் அமலாபாலுக்கும் நெருங்கிய உறவு ஏற்பட்ட நிலையில்தான் அமலா பாலின் கணவர் இயக்குனர் ஏஎல் விஜய், அமலா பாலை விவாகரத்து செய்தார் என்றும் கூறப்படுகிறது. இப்படி பல நடிகைகளுடன் நெருங்கிய நட்பில் இருப்பதும், அவர்களது திருமண வாழ்வில் பிரிவை ஏற்படுத்துவதும் நடிகர் தனுஷின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகவே ரசிகர்கள் பார்க்கின்றனர்.
அதனால் எந்த நடிகை விவகாரத்து தகவல் வெளியானாலும் மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா என மீம்ஸ் போட்டு தனுஷை கலாய்த்து வருகின்றனர். அதிலும் அமலாபால் தனுஷ் நெருக்கம் என்பது ஊரறிந்த ஒரு ரகசியமாகவே உள்ளது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து பேசிய நடிகை அமலாபால், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்தேன். அந்த படத்தில் நடித்த போது கேரவனில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டோம்.
தனுஷை பொருத்தவரை அவர் பார்க்கத்தான் ஒல்லியாக இருக்கிறார். ஆனால் சாப்பாடு நிறையவே சாப்பிடுவார். அவர் சைவ உணவு சாப்பிடுபவர். அதே சமயம் முட்டை மட்டும் விரும்பி சாப்பிடுவார். சாப்பிடும்போது தனுஷூக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது கவுண்டமணியின் மிகப்பெரிய ரசிகர் தனுஷ். அதனால் அவர் சாப்பிடும் போது கேரவனில் இருக்கும் டிவியில் கவுண்டமணியின் காமெடியை பார்த்து சிரித்துக் கொண்டே தான் சாப்பிடுவார் என்று நடிகை அமலா பால் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.