கடந்த 2022 இல் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ். மேலும், இப்போது நடிப்பு, டைரக்சன் என சினிமாவில் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார். என்னதான், மனைவியை விட்டு பிரிந்தாலும், மனைவியின் தங்கச்சியோடு தனுஷ் இன்னமும் டச்சில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. அப்படி, தனுஷ் இன்னமும் சவுந்தர்யா ரஜினிகாந்திடம் பழகி வருவதற்கு ஒரு காரணம் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
கிட்டத்தட்ட 45 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இத்தனை தசாப்தங்களாக ஒருவர் ஹீரோவாக வலம் வருவது என்பது சாதாராண விஷயம் அல்ல. இந்த உச்சத்தை எட்டியதற்கு ரஜினிகாந்தின் விடாமுயற்சி தான் முக்கியக் காரணம். இன்று வரை சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகள் ஐஸ்வர்யா 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இளைய மகள் சவுந்தர்யா கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். என்னதான் மிகப்பெரிய ஸ்டாரின் வாரிசுகள் என்றாலும், ரசிகர்களை ஈர்க்கும் அளவிற்கு இவர்களது படைப்புகள் இல்லை என்று பலரும் விமர்சிப்பதுண்டு. மேலும், மூத்த மகள் ஐஸ்வர்யாவும் நடிகர் தனுசும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியனருக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் தற்போது விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இப்போது, ஐஸ்வர்யா லால் சலாம் படத்தை இயக்கி, படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். தனுஷும் கேப்டன் மில்லர் படத்தை முடித்த கையோடு, அடுத்ததாக ஒரு படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார். இப்படி இருவரும் விவாகரத்துக்குப் பிறகு தங்கள் கரியரை நோக்கி படுவேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், தனுஷ் எடுக்கப்போகும் படத்திற்கு ஐஸ்வர்யாவின் தங்கச்சி சவுந்தர்யா ரஜினிகாந்த் தான் கதையையே ரெடி பன்னி கொடுத்திருக்கிறாராம். இதனால் தனுஷ் அக்காவுடன் பஞ்சாயத்து என்றாலும், தங்கச்சியுடன் டச்சில் தான் இருக்கிறார் என்று பலரும் கூறி வருகின்றனர். 2014 இல் தன் அப்பாவை வைத்து கோச்சடையான் என்ற படத்தை எடுத்தவர் சவுந்தர்யா ரஜினிகாந்த்.
இந்தப் படம் ரிலீஸ் ஆனதும் எக்கச்சக்கமான நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றது. இப்படியான நிலையில் இவர் ரெடி பண்ண கதையை வைத்தா தனுஷ் படம் எடுக்கப் போகிறார் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, நடிகர் தனுஷ் இயக்கும் படத்தில் அவரது சகோதரியின் மகனை ஹீரோவாக அறிமுகம் செய்யப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் மலையாள நடிகர்களான அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.