கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தேர்வு செய்து நடித்து வர கூடிய நடிகை சாய் பல்லவி. அந்த வகையில் தன்னை தேடி வரும் பல வாய்ப்புகளை கதை சரியில்லை என்பதற்காக மறுத்து விடுவார். அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்தில் முதலில் சாய் பல்லவியை நடிக்க அணுகியுள்ளார்கள், ஆனால் படத்தின் கதையை கேட்டு கதை பிடிக்கவில்லை என்பதால், அஜித்துடன் நடிக்க மறுத்துவிட்டார் சாய் பல்லவி.
இதே போன்று கதை பிடிக்கவில்லை என்றால், அந்த படத்தில் நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என சொல்ல தயங்கும் சாய் பல்லவி, அந்த படத்தில் நடிக்க அவர்கள் கொடுக்க முடியாத ஒரு சம்பளம் கேட்டு அதிர்ச்சியடைய செய்து விடுகிறார். இது அவர் தனக்கு பிடிக்காத படங்களில் நடிப்பதை தவிர்ப்பதற்கான முடிவு என்றும், தனக்கு பிடித்த கதைகளில் தேவைக்கேற்ப சம்பளத்தை பெற்று கொண்டு நடித்து வருகிறார் சாய் பல்லவி.
இந்நிலையில் நடிகர் தனுஷ் உடன் நடந்த ஒரு சாபத்தை தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சாய் பல்லவி. மாரி 2 படத்தில் நடிகர் தனுஷ் உடன் ரவுடி பேபி பாடலுக்கு நடனமாடும் காட்சிகள் எடுக்கப்பட்ட அன்றைய தினத்தில் தனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய் காலத்தில் எந்த அளவுக்கு வலியையும், துன்பத்தையும் அனுபவிப்பார்கள் என்பது சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியும்.
இருந்தாலும் நடிகர் தனுஷின் கால் சீட் வீணாகி விடக்கூடாது என இயக்குனர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, அந்த கடினமான நடனத்தில் என்னுடைய மாதவிடாய் காலத்திலும் நடனம் ஆடினேன். நடனமாடிய போது எனது கால்கள் வலி ஏற்பட்டது, என்னுடைய தந்தை உடன் இருந்து என் காலில் ஆயுள் போட்டுக் கொண்டிருப்பதை அங்கே படப்பிடிப்பில் இருந்த அனைவரும் பார்த்தார்கள்.
என்னுடைய வழி என் தந்தைக்கு தெரிந்ததே தவிர, மற்ற யாருக்கும் தெரியவில்லை. ஒரு நடிகைக்கு மிகப்பெரிய பரிசு ரசிகர்களின் கைதட்டல் தான். அதனால் மாதவிடாய் காலத்தில் கடும் வலியினாலும் துன்பத்தினாலும் நான் ஆடிய நடனத்தை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்த போது நான் பட்ட வழி அனைத்துக்கும் பலன் கிடைக்கும் வகையில் மிக பெரிய பரிசு கிடைத்ததாக உணர்த்தேன் என சாய் பல்லவி தான் பெற்ற கஷ்டத்தை தெரிவித்துள்ளார்.