தனுஷ் சினிமா க்ளோஸ்… இனி ஒரு படத்தில் கூட தனுஷ் நடிக்க முடியாதா.? அய்யோ.. பாவம் தனுஷ்…

0
Follow on Google News

நடிகர் தனுஷின் பிறந்த நாளுக்கு ராயன் திரைப்படம் வெற்றி தான் ஸ்பெஷல் கிப்டாக இருக்கும் என பார்த்தால், தனுஷின் சினிமா வாழ்க்கைக்கே தயாரிப்பாளர்கள் சங்கம் முட்டுக்கட்டை போட்டு, தனுசுக்கு விபரீதமான கிப்ட்டை வழங்கியுள்ளது. தமிழின் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், ஆனால் இவரையும் சர்ச்சையையும் பிரிக்க முடியாது என்பது போல, தற்போது புதிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து சர்ச்சை தான் பெரும் பூதாகரமாக வெடித்தது.

அதோடு தமிழ் சினிமாவில் எந்த நடிகர், நடிகைகள் விவாகரத்து செய்தாலும், அதற்கு தனுஷ் தான் காரணம் என்றும் கூறி வந்தனர். அதன் பின்னர் தற்போது இந்த பிரச்சனை எல்லாம் ஓய்ந்த சூழ்நிலையில், தயாரிப்பாளர் சங்கமும் இனி தனுஷ் படத்தில் நடிக்க முடியாது என புதிய சர்ச்சையை கிளப்பி, அதிரடியாக அறிவித்தது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் தனுஷ் தனது 50-வது திரைப்படமான ராயன் திரைப்படத்தை, தானே இயக்கி, நடித்து, அந்த படத்தை வெற்றி படமாகவும் மாற்றினார். ஆனால் தற்போது இவரின் 50வது படமே இவருக்கு கடைசி படமாக அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சினிமா உலகை பொறுத்தவரை நடிகர்களை வளைத்து பிடிப்பதற்காக தயாரிப்பாளர்கள் பல வேலைகளை செய்வார்கள்.

அதில் எல்லோரும் செய்வது தான் அட்வான்ஸ் கொடுத்து வைப்பது. திரைத்துறையில் அட்வான்ஸ் வாங்காமல் எந்த நடிகரும் நடிக்க மாட்டார்கள். ஒரு நடிகரிடம் கால்ஷீட் இல்லையென்றாலும் கூட சில தயாரிப்பாளர்கள், பின்னால் உதவும் என நினைத்து அட்வான்ஸ் கொடுத்து வைப்பார்கள். அப்படி இருக்கும் போது சில நடிகர்களுக்கு தயாரிப்பாளரிடம் வாங்கிய அட்வான்ஸே மறந்தே போயிருக்கும்.

அதேபோல் தான் நடிகர் தனுஷூம் ஒரே நேரத்தில், நிறைய திரைப்படங்களுக்கு அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டு, இன்னும் படத்தில் நடித்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தனுஷை வைத்து புதிதாக திரைப்படம் தயாரிக்ககூடாது என தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட்டுள்ளது. அதோடு அவரை வைத்து படம் இயக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள், முதலில், அது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச வேண்டும், பின்னர் தான் படம் இயக்க வேண்டும் என்றும் செக் வைத்துள்ளது.

அதோடு தனுஷ், ஏற்கனவே, அட்வான்ஸ் தொகை வாங்கி இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு முதலில் படத்தை நடித்து கொடுக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதனை அடுத்து, முதலில் பெண்டிங்கில் இருக்கும் திரைப்படங்களை எல்லாம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் நடிகர் தனுஷ் இருக்கிறார். மேலும் பிடித்த கதையாகவே இருந்தாலும் புதிய கதைகளில் இப்பொழுது அவர் நடிக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்நிலையில்தான் நடிகர் தனுஷை போலவே விஷாலுக்கும் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆப்பு வைத்திருந்தது. விஷாலும் லைக்கா நிறுவனத்திடம் இருந்து அட்வான்ஸ் வாங்கி, இன்றுவரை நடித்துக் கொடுக்காமல் இழுத்து அடித்து வருகிறார். அதேபோல் இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலகட்டத்தில் ரூபாய் 2 கோடியை அபேஸ் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் விஷால் அந்த பணத்தை திருப்பி தர வேண்டும், அப்போதுதான் படத்தில் நடிக்க முடியும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருந்தது.

இந்த லிஸ்டில் தான் தற்போது தனுஷும் இணைந்து இருக்கிறார். தனுஷும் அட்வான்ஸ் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு படத்தை நடித்துக் கொடுத்தால்தான் இனி அவர் புதிய படத்திற்கு நகர முடியும். இருப்பினும் தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் தனுஷ் மீது இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை என்றும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தன்னிச்சையான முடிவு கண்டிக்கத்தக்கது என்றும் தனுஷ்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.