இதற்கு மேல் தனுஷ் பெண்களை கேவல படுத்த முடியாது… ஏழை பெண்களை என்ன நெனச்சுக்கிட்டு இருக்கார் தனுஷ்..

0
Follow on Google News

தனுஷ் நடித்து இயக்கிய ராயன் படம் கழுவி கழுவி ஊத்தும் வகையில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. இதில் பல காட்சிகள் லாஜிக்கே இல்லாமலும் சென்று கொண்டிருக்கிறது, படம் ஆரம்பத்தில் குழந்தையை தூங்க வைத்துக் கொண்டு சென்ற பெற்றோர்கள் படம் இறுதிவரை என்னானார்கள் என்று தனுஷ் காட்டவில்லை. நடிகர் தனுஷ் ஒரு பாஸ்ட் புட் கடை ஒன்றை வைத்து இருக்கிறார்.

அந்த கடையை அவருடைய தம்பி என அனைவரும் சேர்ந்து பார்க்கிறார்கள், இவர்கள் குடும்பத்திற்கே அந்த அந்த கடை தான் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆனால் அது ஒரு பாஸ்ட் பூட் கடை என்னமோ இந்த கடைக்கு பல பிரான்சிஸ் இருக்குமாறியும், இது பல கோடி பிசினஸ் நடக்கிற மாதிரியும், ஒரு தாதா வந்து இந்த கடையை விலை பேசுவது என்பதெல்லாம் எந்த விதத்திலும் ஒட்டவே இல்லை.

ஒரு காட்சியில் நடிகர் சரவணன் தனுசை பார்த்து ராயா ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு பிரச்சனையை செய்து வந்த ஞாபகம் இருக்கா என்று கேட்பார், இதில் என்னமோ பாட்சா படத்தில் ரஜினிக்கு வரும் பிளாஸ்க் பேக் மாதிரி எதோ இருக்கும் என்பது போன்று பில்டப் கொடுக்கப்பட்டது, ஆனால் படம் முடியும் வரை பத்து வருடத்திற்கு முன்பு தனுஷ் என்ன பிரச்சனை செய்தார் என்று எந்த ஒரு தகவலும் இல்லை.

இந்த மிகப்பெரிய உச்சகட்டம் என்னவென்றால் ஒரு பின் தங்கிய ஒரு குடிசைப் பகுதியில் இருக்கக்கூடிய ஒரு பெண் அபர்ணா முரளி, இவர் தனுஷின் தம்பியான போதைக்கு அடிமையான சந்திப் கிருஷ்ணனை விரட்டி விரட்டி காதலிக்கிறார். ஒருநாள் சந்திப் கிருஷ்ணன் மது போதையில் அந்த பெண்ணின் வீட்டின் கதவை தட்டுகிறார். அந்த பெண்ணின் தந்தை கதவை திறந்து உனக்கு வேற வேலையே இல்லையா என்று கேட்க,

அந்த பெண்ணின் தந்தையை தள்ளிவிட்டு குடிசைகுள் சென்று சந்திப் கிருஷ்ணன் தரும் கோட்டரை ராவாக அவரை காதலிக்கும் அபர்ணா முரளி குடிக்கும் காட்சிகள் ஒரு ஏழ்மை நிலையில் இருக்கும் குடிசைப் பகுதியில் வாழும் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அதாவது தந்தை கண் முன்னே எந்தப் பெண் மது அருந்துவார். மேலும் சந்திப் கிருஷ்ணனும் அவருடைய காதலி அபர்ணா முரளியும் போதையில் மழையில் நடனமாடுகிறார்கள்.

பின்தங்கிய பகுதியில் ஒரு குடிசை பகுதியில் இருக்கும் பெண்கள் எல்லாம் மது அருந்திவிட்டு இப்படித்தான் இருப்பார்கள் என்கின்ற ஒரு தோற்றத்தை தனுஷ் உருவாக்குகிறாரா.? என்ற கடுமையான கேள்வி தற்போது எழுந்துள்ளது. மேலும் திடீரென அபர்ணா முரளி நான் மாசமாக இருக்கிறேன் என்று தெரிவிக்கிறார் பின்பு மிக குறுகிய காலத்தில் ஒரு குழந்தையைப் பெற்று இது உங்கள் ரத்தம் தான் என்று தனுஷ் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்கிறார்.

எந்த தாயும் தன்னுடைய குழந்தையை இப்படி செய்வார்களா.? அந்த வகையில் முழுக்க முழுக்க ஒரு ஏழ்மையில் இருக்கும் குடிசை பகுதியில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தனுஷின் ராயன் பட காட்சிகள் அமைந்துள்ளது. இதில் ஜீரணிக்கவே முடியாது என சொல்லும் வகையில் சந்திப் கிருஷ்ணனை டாஸ்மாக் வாசலில் கத்தியால் குத்தி விட்டு சென்று விடுவார்கள்.

அவரை கண்டுபிடித்து வீட்டிற்கு கொண்டு செல்லும் தங்கை அந்த கத்தியை எடுத்து விட்டு சாக்கு தைப்பது போல் தையல் போடும் காட்சி எல்லாம் ஜீரணிக்கவே முடியவில்லை. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம் தன்னுடைய தங்கையின் கல்யாணத்துக்காக ஒரு ரவுடி கொஸ்ட்டியில் இணையும் தம்பிகள் தன்னுடைய சொந்த அண்ணனையே குத்தி கொலை செய்கிறார்கள். மொத்தத்தில் இந்த படத்திற்கு தனுஷ் இவ்வளவு பில்டப் கொடுத்தது தேவையில்லை என்று படத்தை பார்த்தவர்கள் விமர்சனம் செய்து வரும் நிலையில் ராயன் படம் குறித்து உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.