தனுஷ் – ஐஸ்வர்யா இருவருமே டேட்டிங் விஷயத்தில் படும் மோசம்… போட்டுடைத்த பாடகி சுசித்ரா…

0
Follow on Google News

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி நள்ளிரவு இருவரும் தங்களுடைய 18 வருட திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டு இருவரும் ஒரு மனதாக பிரிவதாக அறிவித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தாலும் சட்டபூர்வமாக விவாகரத்து பெறுவதற்கான ஐஸ்வர்யா – தனுஷ் இரு தரப்பிலும் எந்த ஒரு முயற்சியும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

ஆனால் சமீபத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் மிகப்பெரிய புயலை கிளப்பினார். அதில் நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் அனிருத் போன்ற பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்களும் லீக் ஆகி பரபரப்பை ஏற்படுத்திய பின்னணி பாடகி சுசித்ரா, சில காலம் ஆள் அட்ரஸே தெரியாமல் காணாமல் இருந்தார். இதன் பின்பு கடந்த 2020-ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக பங்கேற்றார்.

இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகராகவும் பணியாற்றி வந்த சுசித்ரா, சமீபத்திய பேட்டியில், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அதில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றி வந்ததாகவும் பலருடன் தொடர்பில் இருந்ததாகவும் அடுத்தடுத்து அதிர்ச்சிகளை அடுக்கி வருகிறார் பாடகி சுசித்ரா.

அதாவது தனுஷ் மோசமானவர் தான் ஆனால், தனுஷை விட பெரிய மோசடிக்காரி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான், அந்த இரண்டு குழந்தைகளும் தாத்தா மற்றும் பாட்டியிடம் வளர்ந்தால் நல்லா இருக்கும். இவர்கள் இருவரில் யாரிடம் இருந்தாலும் கெட்டுத்தான் போகும் என தெரிவித்த பாடகி சுசித்ரா. மேலும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருமே அவர்களுடைய திருமண உறவில் உண்மையாக இல்லை என்றும், இருவரும் திருமண உறவில் இருக்கும்போதே தங்களுக்கு பிடித்த நபர்களுடன் டேட்டிங் செல்வார்கள் என பரபரப்பை கிளப்பிய சுசித்ரா.

ஐஸ்வர்யா ஒரு நல்ல தாய் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் தனுஷ் தந்தையாக தன்னுடைய கடமையை சரியாக செய்கிறார். திருமண உறவில் தனுஷ் தன்னை ஏமாற்றி விட்டதாக ஐஸ்வர்யா கூறுகிறார். ஆனால் அதைத்தான் அவர் தனுசுக்கு செய்துள்ளார். தனுஷ் ஐஸ்வர்யாவும் ஒருவருக்கொருவர் ஏமாற்றியுள்ளன என பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்துள்ள பேட்டி மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது.

மேலும் தனுஷ் மற்றும் தனது முன்னாள் கணவர் கார்த்திக் இருவரும் அறைக்குள் தனியாக படுக்கையில் என்ன என்ன செஞ்சாங்க தெரியுமா? என சுசித்ரா படுமோசமான குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில், தனுஷை பார்த்தால் அறைந்து விடுவேன் என சுசித்ரா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்னதாக சுச்சி லீக்ஸ் மூலமாக சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து நடிகர் தனுஷ், திரிஷா, அனிருத், சஞ்சிதா ஷெட்டி போன்ற பல நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் வெளியானது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

சுச்சி லீக்ஸ் பிரச்சனை காரணமாக கார்த்திக் குமார் சுசித்ராவை விவாகரத்து செய்தார் என கூறப்பட்டு வந்த நிலையில், சுமார் 12 ஆண்டுகளாக தனுஷுடன் நெருங்கிய உறவில் தனது கணவர் கார்த்திக் குமார் இருந்து வந்ததாகவும் அதன் காரணமாக தான் விவாகரத்து கேட்டு வந்ததாகவும் சுசித்ரா தனது புதிய பேட்டியில் பேசியுள்ளார்.