நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் இருவரும் ஒரு மனதாக பிரிவதாக தனித்தனியாக அறிவிப்பு வெளியிட்டு கடந்த இரண்டு வருடத்திற்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்து இருவரும் நீதிமன்றம் படிக்கட்டை ஏறினார்கள்.
இந்த நிலையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த போது இருவரும், ஆந்திராவில் உள்ள ஒரே ஓட்டலில் தனி தனி அறையில் இருந்து வந்ததாக அப்போது செய்திகள் வெளியான நிலையில், இவர்கள் பிரிவதாக அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு. மூன்று நாட்கள் வரை அதே நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் இருந்துவந்ததாக தகவல் அப்போது வெளியானது2022 ஆண்டு ஜனவரி 15,16,17 என தொடர்ந்து மூன்று நாட்கள் ஆந்திராவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஒரே அறையில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் இருந்து வந்த நிலையில் ஜனவரி 16ம் தேதி ஞாயிற்று கிழமை மாலை கணவன் மனைவி இருவரும் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இருவரும் பார்ட்டியில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்துவிட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்கு சென்றுள்ளனர், ஏற்கனவே இருவருக்கும் இருந்து வந்த கருத்து வேறுபாடு மீண்டும் இருவருக்கும் இடையில் முட்டி கொண்டதாக கூறப்படும் நிலையில் இருவரும் கடுமையாக வார்த்தையால் மோதி கொண்டதாக கூறப்படும் நிலையில் இருவரும் இனி இணைந்து வாழ வேண்டாம் பிரிந்து வாழ்வோம் என ஒரே அறையில் தங்கி இருந்த இருவரும் முடிவு செய்த நிலையில்.
அடுத்த நாள் 17ம் தேதி ஐஸ்வர்யா, கணவர் தனுஷ் உடன் ஆந்திராவில் உள்ள ஓட்டலில் தங்கி இருந்த அறையில் இருந்து வெளியேறி அதே ஓட்டலில் தனி அறைக்கு சென்றுள்ளார் ஐஸ்வர்யா, இதனை தொடர்ந்து மீண்டும் ஜனவரி 17ம் தேதி இருவரும் பேசி பிரிவதில் உறுதியாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அன்று இரவே தனுஷ் முதலில் ஐஸ்வர்யாவை விட்டு பிரிவதாக அறிவிப்பு வெளியிட அடுத்த இரண்டு மணி நேரத்தில் தனுஷை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில் இருவரும் பிரிவதர்க்கு முன்பு மூன்று நாட்கள் ஒரே அறையில் ஒன்றாக தான் இருந்தார்கள் என அப்போது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இருவரும் அவசரத்தில் பிரிவதாக முடிவு எடுத்துவிட்டார்கள், குழந்தைகள் நலன் கருதி மீண்டும் இணைந்து வாழ்வார்கள் என பலரும் எதிர்பார்க்கபட்ட நிலையில் அதற்கான வாய்ப்பு அமையவில்லை, மேலும் இருவரும் பிரிந்தாலும், சட்டப்படி விவாகரத்து பெறவில்லை என்பதால் மீண்டும் இணையலாம் என பேச்சு அடிபட்டு வந்த நிலையில் அதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கும் வகையில் சட்டப்படி விவாகரத்து பெற்று நிரந்தரமாக பிரிந்துள்ளது தனுஷ் – ஐஸ்வர்யா ஜோடி.
இந்நிலையில் தனுஷிடம் இருந்து ஐஸ்வர்யா விவாகரத்து பெற்றதே அவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தான் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், விரைவில் ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம் செய்ய போகிறார் என ஒரு வந்தந்தி பரவியது, ஆனால் அது உண்மை இல்லை என்றும், ஐஸ்வர்யா இனி அடுத்து திருமணம் செய்யும் எண்ணமே இல்லை என்றும், முரட்டு சிங்கள் ஆகவே இனி இருந்து விடுவோம் என உறுதியாக இருக்கிறாராம் ஐஸ்வர்யா.