நடிகர் தனுஷ் அவருடைய மனைவி ஐஸ்வர்யா இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த இரன்டு வருடங்களுக்கு முன்பு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு, இரண்டு குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அதனால் விரைவில் பிரிந்த இந்த ஜோடி மீண்டும் இணைய வாய்ப்பு இருப்பதாக சில தகவல் வெளியானது ஆனால் அதற்க்கான வாய்ப்பு இல்லாமல், இருவரும் சட்டப்படி பிரிந்துள்ளார்கள்.
இந்நிலையில் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்த பின்னனியில் இது வரை வெளிவராது மிக பெரிய ட்விஸ்ட் ஆக, தனுஷ் தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் ரஜினிகாந்த் இருவருக்கும் இடையில் நடந்த மிக பெரிய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு காலத்தில் இயக்குனர் கஸ்தூரி ராஜா கடன் சுமையால் தத்தளித்து கொண்டிருந்த போது, தனது இரண்டு மகன்கள், செல்வராகவன், தனுஷ் இருவரையும் சினிமாவில் களம் இறக்கி வாங்கிய கடனை அடைக்க திட்டமிட்டார்,
அதன்படி துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக தனுஷ் , இயக்குனராக செல்வராகவன் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த படம் ஹிட் அடித்து கடனில் தத்தளித்த கஸ்தூரி ராஜாவை காப்பாற்றியது. கடனை அடைக்க மகன்கள் இருவரையும் சினிமாவில் அறிமுகம் செய்தார் கஸ்தூரி ராஜா, ஆனால் இருவரும் அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து சினிமாவில் முன்னணி இடத்தை பிடித்தனர்.
இதில் தனுஷ் சூப்பர் ஸ்டார் மகளை திருமணம் செய்து செட்டிலானார். செல்வராகவன் அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்து காணாமல் போனார். கஸ்தூரி ராஜா குடும்பத்துக்கு ஒரே வருமானம் நடிகர் தனுஷ் தான் இவர் தான் மொத்த குடும்பத்துக்கு காமதேனு பசு என்றே சொல்லலாம். இந்நிலையில் இடையில் கஸ்தூரி ராஜாவுக்கு பொருளாதார சிக்கல் காரணமாக, தனது சொந்த ஊர் தேனீ மாவட்டத்தில் உள்ள தொழில் அதிபர் ஒருவரிடம் 80 லட்சம் வரை கடன் வங்கியுளளார்,
இதே போன்று இன்னும் சிலரிடம் கடன் வாங்கியுள்ளார் கஸ்தூரி ராஜா, கடன் கொடுத்தவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்மந்தி என்பதால் நம்பி கஸ்தூரி ராஜாவுக்கு கடன் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து ஒரு கட்டத்தில் கஸ்தூரி ராஜா கடனை கொடுக்க முடியாமல் இழுத்தடித்துள்ளார், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க தொடர்ந்து சாக்கு போக்குகளை சொல்லி காலத்தை கடத்தி கொண்டே வந்தததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து கடன் கொடுத்தவர்கள் இதை ரஜினிகாந்த் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர், கஸ்தூரி ராஜா வாங்கிய 80 லட்சம் கடன் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரிய தொகை கிடையாது, கொடுத்து உதவி செய்திருக்கலாம், ஆனால் கஸ்தூரி ராஜாவுக்கு தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பகிரங்கமாக தெரிவித்து விட்டதாக கூறப்படும் நிலையில், கஸ்தூரி ராஜாவை கடன்காரர்கள் கடும் நெருக்கடி கொடுத்த பின்பு மகன் தனுஷ் உதவி செய்து தந்தையை மீட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் இருந்தே ரஜினிகாந்த் மீது கஸ்தூரி ராஜாவுக்கு கோபம் இருந்து வந்துள்ளது, குறிப்பாக ரஜினிகாந்த் வீட்டில் எந்த நிகழ்வு நடந்தாலும் கூட, தனுஷ் கலந்து கொள்வார், ஆனால் கஸ்தூரி ராஜா அவருடை மனைவியும் ஒரு முறை கூட கலந்து கொண்டதே இல்லை, இதற்கு காரணம் கஸ்தூரி ராஜாவுக்கு எனக்கு எந்த சம்பந்தம் இல்லை என ரஜினிகாந்த் பகிரங்கமாக தெரிவித்தது தான் என கூறப்படுகிறது.
அந்த வகையில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த பின்பு, கஸ்தூரி ராஜா இவர்களை இணைத்து வைக்க மேலோட்டமாக முயற்சி செய்தாரே தவிர தீவிரமாக எந்த உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. ஒரு வேலை கஸ்தூரி ராஜா மகன் தனுஷிடம் பேசி மனசை மாத்தி விவாகரத்து பெறாமல் தடுத்து இருந்திருக்கலாம் என கூறப்படுவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.