இதெல்லம் தேறாது…. தனுஷை அவமானப்படுத்திய சன் பிக்சர்… திருச்சிற்றம்பலம் படத்தில் நடந்தது என்ன.?

0
Follow on Google News

தனுஷ் நடிப்பில் தற்பொழுது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படத்திற்கு பின்பு வெளியான ஜகமே தந்திரம், மாறன் போன்ற படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வரும் சினிமாவில் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளார் தனுஷ். இதனால் ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் தனுஷ்.

இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படம் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த தனுஷ் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியுடன் இருந்து வந்தார். திருச்சிற்றம்பலம் தன்னை சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என்ற நம்பிக்கையில் இருந்தார் தான் தனுஷ். ஆனால் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் திருச்சிற்றம்பலம் படத்தை பார்த்து அதிருப்தியடைத்துள்ளது.

இந்த படத்தின் கதை, இயக்குனர், சக நடிகர் மற்றும் நடிகைகள் என அனைத்தும் தனுஷ் தேர்வு செய்து இருந்த நிலையில். என்ன இது படம் என தனுஷ் மீதும் தயாரிப்பின் நிறுவனம் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. இருந்தும் இந்த படம் நிச்சயம் வெற்றி பெரும் என தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார் தனுஷ், இருந்தும் தயாரிப்பு நிறுவனம் ஏற்று கொள்ளவில்லை.

தொடர்ந்து தனுஷை அவமதித்து வந்த தயாரிப்பு நிறுவனம், இந்த படம் எல்லாம் எங்கே ஓட போகிறது என்று அலட்சியப்படுத்தி, போட்ட பணத்தை எடுத்தால் போதும், திருச்சிற்றம்பலம் படம் தேரவே தேறாது, இருந்தும் பணத்தைப் போட்டு எடுத்தாச்சு ரிலீஸ் செய்வோம், வருவது வரட்டும் என்கின்ற முடிவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் ப்ரோமோஷன் குறித்து தனுஷ் தரப்பில் பேசியபோது, இதுவரை இந்த படத்துக்கு செலவு செய்தது போதும், மேலும் செலவு செய்ய முடியாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவிக்க. இருந்தும் இந்த படம் தன்னுடைய அடுத்த கட்டத்தை நிர்ணயம் செய்ய கூறிய படம் என்பதால். தனுஷ் தன்னுடைய சொந்த பணத்தை போட்டு ப்ரோமோஷன் செய்துள்ளார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி கொண்டு இருக்கிறது. மேலும் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரமோஷனுக்காக தனுஷிடம் சன் டிவி இல் ஒரு பேட்டி கொடுக்க சன் தயாரிப்பு நிறுவனம் அழைத்துள்ளது. ஆனால் ஆரம்பத்தில் இந்த படம் எங்கே பேர போகிறது என்று தன்னை அலட்சியப்படுத்திய தயாரிப்பு நிறுவனம் மீது உள்ள கோபத்தில் பேட்டி கொடுக்க தனுஷ் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

சிம்பு – அதிதி சங்கர் விவகாரம் முடிவுக்கு வந்தது… செம்ம மகிழ்ச்சியில் இயக்குனர் சங்கர்… என்ன நடந்தது தெரியுமா.?