விஜய்க்கு முட்டு கொடுத்து அசிங்கப்பட்டு காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட கூல் சுரேஷ்.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

கூல் சுரேஷ் இவர் சினிமாவில் துணை நடிகராக இருந்து வருகிறார். சினிமாவில் பெரியதாக இவரால் சாதிக்க முடியவில்லை.இந்நிலையில் தன்னை பிரபலப்படுத்தி கொள்வதற்காக ஒவ்வொரு யுக்தியாக கையாண்டு வருகிறார் கூல் சுரேஷ். பிக் பாஸ் நிகழ்ச்சில் ஜூலி க்கு எதிராக கடும் எதிப்பு இருந்த நேரத்தில், ஜூலிக்கு ஆதரவாக பேசி வந்த கூல் சுரேஷ். புதிய படம் ஒன்றில் ஜூலியை கதாநாயகியாக நடிக்க வைக்க இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் சமீப காலமாக நடிகர் சிம்புவின் ரசிகன் என தன்னை காட்டி கொண்டு, வெந்து தணிந்தது காடு, வணக்கத்தை போடு, என்றும் , இடையில் கொப்பன் மவனே.. ஒக்காலி என இவர் பேசி வருவது ட்ரெண்டாகி வருகிறது. இது போன்று இவரின் இந்த பேச்சு யாருடா.. இந்த பைத்திய காரன் என மக்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனம் மூலம் பிரபலம் அடைந்து வருகிறார். ஏதோ ஒரு வகையில் தான் பிரபலம் அடைந்தால் போதும் என்கிற நோக்கில் இந்த ட்ரெண்டை விடாமல் பிடித்து வருகிறார் கூல் சுரேஷ்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் மண்ணை கவ்வியுள்ளது. மேலும் இந்த படம் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கூல் சுரேஷ், சிலர் பீஸ்ட் படத்திற்கு தெரியாமல் போய் விட்டேன், கேஜிஎப் படத்திற்கு போயிருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். யோவ்… நீ அந்தப் படத்திற்கு ரசித்து தானே போன, விஜய் சார் உன்னை வா… வா.. என்று சொன்னாரா.

உன் மனதிற்குள் விஜய் சார் இருக்கிறார், அதனால் தான் நீ அந்த படத்திற்கு சென்றாய், உண்மையா.? இல்லையா.? ஒக்காலி டிக்கெட் விலை ரூ.2000, ரூ.3000 வித்தது, அப்போது எனக்கு சாப்பாட்டிற்கு கஷ்டமாயிருக்கிறது, நான் போகமாட்டேன், அப்படி யாராவது சொன்னார்களா.? இல்ல ஒவ்வொரு இயக்குனரும், ஒவ்வொரு நடிகரும், ஒக்காலி இந்தப் படம் போடக்கூடாது என்று நினைத்தா படம் எடுக்கிறார்கள், படம் ஓட வேண்டும் அப்படி என்று தான் நினைத்து படம் எடுக்கிறார்கள்.

இப்படி கூல் சுரேஷ் பேசி கொண்டிருந்த போது மேடையில் இருந்த பெரியவர்கள், கிழே இருந்த மக்கள் அனைவரும் மரியாதையை பேசு, அநாகரிகமான வார்த்தையை பயன்படுத்ததே என கூல் சுரேசை எச்சரித்தனர். இதன் பின்பு என்ன செய்வது என திகைத்து போன கூல் சுரேஷ், மன்னித்துக் கொள்ளுங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன். சமீப காலமாக என்னை அறியாமலே இந்த வார்த்தைகள் எல்லாம் வந்துவிடுகிறது.

மிக தாழ்மையுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சமீபகாலமாக என்னுடைய இந்த வார்த்தை ட்ரெண்டிங் ஆனதனால் ரசிகர்களே விரும்பி கேட்கிறார்கள். அதனால்தான் இதை நான் இங்கே பேசினேன் என கூல் சுரேஷ் விளக்கம் கொடுக்க. உடனே எழுந்து வந்த தயாரிப்பாளர் K.ராஜன் பேசியதாவது. தம்பி சபை நாகரீகம் என்று ஒன்று உள்ளது. உங்களுக்கு பழக்கமான வார்த்தையாக அது இருக்கலாம்,

ஆனால் சபையில் நாகரீகமான, நல்ல பண்பான மக்கள் இருக்கின்ற இடத்தில் நாகரிகமாக பேச வேண்டும். அப்படி யாரு அந்த வார்த்தையை விரும்புகிறார்களோ, அங்கே சென்று ஆயிரம் முறை சொல்லு, அவனை அப்படி ஆயிரம் முறை சொல்லு, ஆனால் இந்த சபை அதற்கான இடமில்லை என கூல் சுரேசை கடுமையாக எச்சரித்தார் தயாரிப்பாளர் K.ராஜன்.

பீஸ்ட் படு மொக்கை… கதறும் விஜய் ரசிகர்கள்..! நெல்சன் இப்படியா விஜய் அண்ணாவ வெச்சு செய்வார்.!