தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் போண்டாமணி. நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளின் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சுவாச பிரச்சனை காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போண்டா மணி, சிறுநீரக மாற்று சிகிச்சை செய்வதற்கு தனக்கு உதவும்படி வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் போண்டாமணி.
இதனை தொடர்ந்து சினிமா துறையை சேர்ந்த பல நடிகர்கள் போண்டா மணிக்கு பண உதவி செய்தனர். ஆனால் அவருடன் பல படங்கள் நடித்த வடிவேலு போண்டாமணி அபாய கட்டத்தில் இருந்த போது கூட எந்த ஒரு உதவியும் செய்யவில்லை, இந்நிலையில் சினிமா துறையினர் உதவியுடன் சிகிச்சை பெற்று வீடு திருப்பி ஓய்வில் இருந்து வந்த போண்டாமணி சமீபத்தில் மரணம் அடைந்தார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக நடித்துவரும் போண்டாமணி இதுவரை சம்பாதித்த பணத்தை எல்லாம் சேமித்து வைக்கவில்லையா.?அவருடைய பணம் என்னானது.? சிகிச்சைக்கு பணம் இல்லாமல் கூட கஷ்டத்தில் ஏன் இருக்கின்றார்.? என பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில். இதுகுறித்து விசாரித்ததில், தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுக்கு மட்டும்தான் லட்சங்களிலும் சம்பளம் வாங்குவார்கள். துணை நடிகர்கள் ஒருநாள் கால் சீட்டுக்கு ஆயிரம் முதல் மூவாயிரம் வரை தான் சம்பளம் வாங்குவார்கள். மேலும் அவர்களுக்கு தினமும் சூட்டிங் இருக்காது.
அதனால் அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்கு தான் அவர்கள் வாங்கும் சம்பளம் இருக்கும் என்பதால், அவர்களால் சேமித்து வைக்க முடியாது, அதனால் தான் தற்போது மருத்துவ சிகிச்சை கூட பணம் இல்லாமல் போண்டாமணி கஷ்டப்படுகிறார். மேலும் சொந்த நாடான இலங்கைக்கு செல்வதற்கு முயற்சி செய்து வருகிறார் போண்டாமணி, ஆனால் அவரிடம் பாஸ்போர்ட் இல்லாததால் இலங்கைக்கு செல்ல முடியாமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போண்டாமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்பு, அதாவது மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு அஜித் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார், அதில், வி.சி. குகநாதன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து 1996ல் வெளியான படம் மைனர் மாப்பிள்ளை. அந்த படத்தில் முதலில் ரஞ்சித் தான் நடித்து வந்திருக்கிறார். ஏதோ சில காரணங்களுக்காக ரஞ்சித் வெளியேற அடுத்து ஹீரோவாக யாரை போடலாம் என படக்குழு யோசித்துக் கொண்டிருக்கும் போது அங்கே இருந்த போண்டா மணி தான் அஜித்தை இந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என சொன்னதாக தெரிவித்த போண்டாமணி.
மேலும் சினிமாவில் பெரிய நடிகராக வந்தவுடன் உங்களுக்கு உதவி செய்யுறேன் மணி தன்னிடம் தெரிவித்த அஜித் அதன் பின்பு பெரிய ஹீரோவான உடன், அஜித் தனக்கு அவருடைய எந்த படத்திலும் வாய்ப்பே தரவில்லை. எப்போது கேட்டாலும், அடுத்த படத்தில் பார்க்கிறேன் என்றே தட்டிக் கழித்து வந்துள்ளார் அஜித். மேலும் சிட்டிசன் படத்தில் கூட அஜித் சான்ஸ் வாங்கித் தரவில்லை, இயக்குநரே போண்டா மணியை அந்த அத்திப்பட்டி காட்சியில் நடிக்க வைத்ததாக தெரிவித்த போண்டாமணி.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அதிக பணம் தேவைப்பட்ட நிலையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடம் பலமுறை போண்டாமணி கேட்டதாகவும் , அஜித்திடம் சொல்வதாக வாக்கு கொடுத்தார் சுரேஷ் சந்திரா, ஆனால் கடைசி வரை அஜித் உதவியே செய்யவில்லை என போண்டா மணி மரணம் அடைவதற்கு முன்பு மனம் உடைத்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அந்த வகையில் அஜித் உதவி செய்வார் என நம்பி ஏமாற்றம் தான் மிஞ்சியது போண்டாமணிக்கு என கடும் விமர்சனம் எழுந்து வருவது குறிப்பிட்டத்தக்கது.