உன் படத்துக்கெல்லாம் இசையமைக்க முடியாது… பாக்கியராஜிடம் இளையராஜா நடந்து கொண்ட விதம்…

0
Follow on Google News

80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்தவர் இசைஞானி இளையராஜா. ஒரு படத்தை அதன் கதையைத் தாண்டி, தன் இசையாலேயே பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடிக்கச் செய்யும் அளவிற்கு இசையமைத்து இன்றும் இரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார். இளையராஜாவின் பாடல்கள் என்றால் 80s, 90 s ரசிகர்கள் மட்டுமில்லாமல், 2K ரசிகர்களும் ரசித்துக் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அந்தளவிற்கு இளையராஜா போட்ட இசைகள் அனைத்தும் காலம் கடந்தும் இனிமை குறையாமல் கேட்க கேட்க ஒரு அலாதியான அனுபவத்தைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஏன், இன்றளவிலும் மழை பெய்தவுடன் இசைஞானி+நான்+டீ என்று ஸ்டேட்டஸ் போட்டு அவரது பாடல்களை இளம் தலைமுறையினர் ரசித்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? இவ்வாறு தனது தனித்துவமான இசையால், தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா,

1976 ஆம் ஆண்டு வெளிவந்த அன்னக்கிளி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவர் போடும் கிராமிய மெட்டுக்கள் அனைத்தும் நம்மை “vibe” ஆகச் செய்யும். இவரையடுத்து தமிழ் சினிமாவில் எத்தனையோ இசையமைப்பாளர்கள் கொடி கட்டி பறந்திருக்கிறார்கள். ஆனாலும், அவர்களையெல்லாம் விட இளையராஜா ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஆம், இதுவரை 1000 இற்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு இசையமைத்து இந்திய சினிமாவின் சிறந்த இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்திருக்கிறார்.

அதுமட்டுமில்லை, கண்ணதாசன், வாலி, வைரமுத்து போன்ற முன்னணி பாடலாசிரியர்களுடன் பணியாற்றியுள்ளார். இளையாராஜா தமிழ் சினிமாவில் பிசியாக இருந்த காலகட்டத்தில், ஒரே நேரத்தில் ஐந்து ஆறு படங்களுக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். அந்தளவிற்கு இயக்குனர்கள் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு அவரிடம் பாடல்களை வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இத்தனைச் சிறப்புமிக்கவராக விளங்கும் இளையராஜாவிற்கு இசைத் திறமை மட்டுமின்றி, தான் ஒரு மிகப்பெரிய இசையமைப்பாளர் என்ற தலைக் கணமும் சற்று அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். புகழ் ஓங்கியிருக்கும் இடத்தில் ஆணவம் தானாகவே தலைக்கு வந்துவிடுமல்லவா!! அதுபோலத்தான், இளையராஜாவுக்கு தன்னை வெல்ல யாருமில்லை, தனக்கு நிகரான திறமை படைத்தவர் எவருமில்லை என்றளவிற்கு ஆணவம், திமிரு இருக்கத்தான் செய்தது.

இதை நம்மில் பலரும் சில மேடை நிகழ்ச்சி மற்றும் பேட்டிகளில் கூட பார்த்திருக்கிறோம். இந்நிலையில், நடிகர் பாக்யராஜும் இளையராஜாவை பற்றி ஒரு ரகசியத்தை போட்டுடைத்திருக்கிறார். இயக்குனர், நடிகர் பாக்யராஜ் இயக்கிய படங்களிலேயே “முந்தானை முடிச்சு” திரைப்படம் பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. 25 வாரங்களுக்கு மேலாக திரையரங்குகளில் வெற்றகரமாக ஓடி வெள்ளிவிழாப் படமாகக் கொண்டாடப்பட்டது.

இந்தப் படத்தின் கதை, திரைக்கதையுடன் சேர்த்து இளையராஜாவின் இசையும் படத்தின் வெற்றிக்கு கூடுதல் வலு சேர்த்திருந்தது. சமீபத்திய பேட்டியில் இயக்குனர் பாக்கியராஜ் இளையராஜாவைப் பற்றி கூறியது என்னவென்றால், இவ்வளவு பெரிய ஹிட் அடித்த படத்திற்கு இசைஞானி இளையாராஜா இசையமைத்துள்ளார். ஆனால், இளையராஜாவிடம் “முந்தானை முடிச்சு” படத்திற்கு இசையமைத்துத் தரும்படி பாக்கியராஜ் அவர்கள் கேட்டதற்கு, முதலில் இளையராஜா இந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறார்.

அவ்வாறு இளையராஜா மறுத்ததற்கு காரணம் என்னவென்பது பற்றியும் இயக்குனர் பாக்கியராஜ் பகிர்ந்துள்ளார். முதலில் பாக்கியராஜ் படத்திற்கு இசையமைக்க கங்கை அமரனை ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஏனெனில், அதற்கு முந்தைய பாக்கியராஜ் படங்களுக்கும் கங்கை அமரன் தான் இசையமைத்துக் கொடுத்திருக்கிறார். அதனாலேயே முந்தானை முடிச்சு படத்திற்கான இசை வேலைகளையும் கங்கை அமரனிடம் ஒப்படைத்திருக்கிறார்.

ஆனால், படத்தைத் தயாரித்த AVM நிறுவனம் படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று சொல்லவே, பாக்கியராஜ் இளையராஜாவிடம் சென்று கேட்டிருக்கிறார். ஆனால், இளையராஜா சற்று ஆணவத்துடன் ‘முதலில் என் தம்பியிடம் தானே சென்றீர்கள். அதனால் நான் இந்தப் படத்திற்கு இசையமைக்க மாட்டேன்’ என்று பட்டென்று பேசியிருக்கிறார்.

அதற்கு பாக்கியராஜ் ‘அதனாலென்ன? அவர் உங்கள் தம்பிதானே?’ என்று சொல்லியிருக்கிறார். உடனே,’தொழில்னு வந்துவிட்டால் தம்பி, பாசம் என்பதெல்லாம் இருக்கக் கூடாது’ என்று இளையராஜா சொன்னாராம். அதற்கு பிறகு, போராடி இளையராஜாவை பாக்கியராஜ் சம்மதிக்க வைத்தாராம்.