அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் ராமையா மகள் உமாபதிக்கும் திருமணம் கடந்த ஜூன் 10ஆம் தேதி நிகழ்ந்தது. அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அறிமுகமானார். நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜுனுக்கு பிடித்து போக தனது வீட்டு மாப்பிள்ளையாக பச்சைக் கொடி காட்டினார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சியதார்த்தம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவிற்கும் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கடந்த 10 ஆம் தேதி கெருகம்பாக்கத்தில் நடிகர் அர்ஜுன் கட்டியுள்ள ஸ்ரீயோக ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் பலர் கலந்து கொண்டனர். நடிகர் அர்ஜுன் தமிழ் சினிமா துறையிலும், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் வெறுப்பை சம்பாரிக்காமல், அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்ற நடிகராக இருந்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தனது மகள் கல்யாணத்துக்கு 500 கோடி ரூபாய் வரதட்சணை வழங்கியதாக தகவல்கள் வெளியாகி மிக பெரிய விவாத பொருளாக மாறியது, இது குறித்து விசாரத்தில், நடிகர் அர்ஜுன் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே, சினிமாவில் நடிக்கும் பணத்தில் இடங்களை வாங்கி குவித்து வந்துள்ளார். அந்த வகையில் அர்ஜுன் சினிமாவில் நடிக்க தொடங்கிய காலகட்டத்தில், பெரும்பாலும் படப்பிடிப்பு சென்னை போரூரில் நடைபெற்று வந்துள்ளது.
அப்போது போரூரில் அருகில் உள்ள பகுதியில் உள்ள நிலத்தை விலையை கேட்டு, அந்த இடத்தின் உரிமையாளரை நேரில் சந்தித்து இடத்தை விலைக்கு வாங்க தொடங்கிய அர்ஜுன், அதனை தொடர்ந்து தான் வாங்கிய இடத்தின் அடுத்தடுத்து பக்கத்து இடத்தையும் விசாரித்து ஒவ்வொரு இடமாக வாங்கி, போரூரில் அர்ஜுனுக்கென ஒரு கிராமமே உள்ளது என்று சொல்லும் அளவுக்கு இடங்களை வாங்கி குவித்து வைத்துள்ளார் நடிகர் அர்ஜுன்.
அர்ஜுனுக்கு சொந்தமான போரூரில் உள்ள இடத்தில் அவருடைய பெயரில் அப்பார்ட்மெண்ட்ம் சொந்தமாக உள்ளது. இப்படி அர்ஜுன் சொத்து மதிப்பை கணக்கிட்டால், சுமார் 1000 கோடிக்கு மேல் இருக்கும் என்று சொல்ல படுகிறது. இந்நிலையில், நடிகர் அர்ஜுனுக்கு இரண்டும் பெண் குழந்தைகள் தான் , ஆகையால் தன்னிடம் உள்ள சொத்துக்கள் அனைத்தும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தான் என்பதால், சொத்தில் பாதி மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் பங்கு உண்டு.
இதை வைத்து தான் அர்ஜுன் மகளுக்கு 500 கோடி வரதட்சணை கொடுத்துள்ளார் என செய்தி பரவியுள்ளது, ஆனால் அதில் உண்மை இல்லை என்றும், ஆனால் அர்ஜுனுக்கு இருக்கும் சுமார் 1000 கோடி மேல் உள்ள சொத்துக்கள் நிச்சயம் அர்ஜுன் மகளுக்கு கொடுக்க படும் என்று கூறப்டுகிறது. இதற்கிடையே அர்ஜுன் மகள் திருமண வரவேற்பு நிகழ்வில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அந்தவகையில் ரஜினிகாந்த்தும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்துகொண்டார். அப்போது மேடையில் நின்றிருந்த மணமக்களை வாழ்த்திவிட்டு தான் கொண்டு வந்திருந்த கிஃப்ட்டை அவர்களிடம் நீட்டினார். ஆனால் அங்கு நின்றுகொண்டிருந்த மணமக்களோ, அர்ஜுனோ, தம்பி ராமைய்யாவோ அதை கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து ரஜினிகாந்த்தே அந்த கிஃப்ட்டை ஓரமாக வைத்துவிட்டார். இந்த நிகழ்வை பார்த்த பலரும் என்னடா இது ரஜினிகாந்துக்கு வந்த சோதனை, அவர் கொண்டு வந்த கிப்டை கூட யாரும் வாங்காம இப்படி அவமான படுத்தி அனுப்பி விட்டார்களே என பலரும் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.