பல கோடீஸ்வர மாப்பிள்ளை வரிசை கட்டி நிற்க.. இந்த ஒரே காரணத்திற்காக தான் தம்பி ராமைய்யாவுக்கு சம்பந்தி ஆன அர்ஜுன்…

0
Follow on Google News

நடிகர் அர்ஜுன் மூத்த மகள் ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் உருவான பட்டத்து யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார். ஆனால், அதைத்தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் இருந்து விலகியே இருக்கிறார். ஐஸ்வர்யா சில வருடங்களாக நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமா பதியை காதலித்து வந்த நிலையில் , சில தினங்களுக்கு முன்பு இருவரும் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நடிகர் அர்ஜுன் சமீபத்தில் கட்டி முடித்த ஆஞ்சநேயர் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது. மேலும் இவர்களின் ரிசப்ஷன் ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்த நிலையில், தம்பி ராமையாவின் மகனுக்கு அர்ஜுன் தனது ஆசை மகளை முழு சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தது ஆச்சரியம் அளிப்பதாக சோசியல் மீடியாக்களில் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஏனெனில், பொதுவாக பெண் வீட்டார் தன் மகளை தன்னைவிட வசதியான குடும்பத்தில் மனம் முடித்து வைக்க தான் ஆசைப்படுவார்கள். தன் மகள் வாழப்போகும் வீட்டில் சகல வசதியும் இருக்க வேண்டும் என்ற ஆசையில் வசதி மற்றும் அந்தஸ்து நிறைந்த வீட்டில் பெண்ணை கட்டி கொடுப்பார்கள். அப்படி இருக்கையில், தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவான அர்ஜுன், எந்த ஒரு அந்தஸ்தும் பார்க்காமல் தன் மகள் காதலித்து விட்டால் என்ற ஒரே காரணத்திற்காக தம்பி ராமையாவின் மகனுக்கு திருமணம் செய்து வைத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

ஏனெனில் அர்ஜுனுக்கு சம்மந்தியாக வேண்டும் என்று பல கோடீஸ்வரர்கள் போட்டி போட்டுக் கொண்டு பெண் கேட்டார்களாம். ஆனால் அதை எல்லாம் நிராகரித்த அர்ஜுன் தனது மகள் விருப்பப்படியே அவளது திருமணம் நடக்கும் என்று சொல்லிவிட்டாராம். நடிகர் அர்ஜூன் நினைத்திருந்தால் ஏதாவது ஒரு கோடீஸ்வரர் வீட்டு பையனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைத்திருக்கலாம்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் ஐஸ்வர்யாவின் விருப்பப்படி திருமணம் செய்து வைத்ததற்கு பின்னால் சில காரணங்கள் இருப்பதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது அர்ஜுனை வைத்து முதல்வன் படத்தை எடுத்த இயக்குனர் சங்கர், அவரது மூத்த மகளுக்கு மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டு மாப்பிள்ளை பார்த்து மணமுடித்து வைத்தார்.

ஆனால் கொஞ்ச நாளிலேயே அந்த மருமகன் மீது ஏராளமான பாலியல் குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் எழுந்தது. இதனால், சங்கரின் மகள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த சம்பவம் அர்ஜுன் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனாலேயே அர்ஜுன் கோடீஸ்வரர் மாப்பிள்ளை என்று மகளின் வாழ்க்கையை வீணடிக்க விரும்பவில்லை என்றும், மகளுக்கு பிடித்த பையனுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்ததாகவும் சொல்லப்படுகிறது.

அதாவது பணம் முக்கியமில்லை குணம் முக்கியம், மாப்பிள்ளை வீட்டார் குடும்பம் ஒழுக்கமான குடும்பமா என்று தான் பார்க்க வேண்டும், அப்போது தான் மகள் வாழ்கை நன்றாக இருக்கும் என முடிவு செய்து, மகள் காதலித்த தம்பி ராமையா பையனவே திருமணம் செய்து வைத்து, தம்பி ராமையாவை சம்பந்தியாக ஏற்றுக்கொண்டுள்ளார் அர்ஜுன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here