நடிகர் விஜய் நடித்த குருவி படம் மூலம் 2008ம் ஆண்டு தமிழ் சினிமாவில் தயாரிப்பு தொழிலை தொடங்கியவர் உதயநிதி ஸ்டாலின். 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் 2011 ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு பெரிய படங்களை தயாரிப்பதை நிறுத்திக் கொண்டு உதயநிதி நடிக்கும் சொந்த படங்களை மட்டும் தயாரித்து வந்தனர்.
2011 ஆட்சி மாற்றத்திற்கு பின்பு சுமார் பத்து வருடங்களில் உதயநிதி ஸ்டாலின் தான் நடிக்கும் படங்களை மட்டுமே தயாரித்து வந்தார், 2021 மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு புத்துணர்ச்சி பெற்று ரெட் ஜெயன்ட் மோவிஸ் நிறுவனம் மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளது. தற்பொழுது ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெரும்பாலும் படம் தயாரிப்பதை குறைத்து கொண்டுள்ளது.
பெரிய பட்ஜெட் படங்கள் முதல் சிறிய பட்ஜெட் படங்கள் வரை தமிழ் சினிமாவில் இன்று வெளியாகும் பெரும்பாலான படங்களை தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையை பெற்று தமிழ்நாடு முழுவதும் வெளியிட்டு அவர்களுக்கான கமிஷனை பெற்று வருகிறது ரெட் ஜெயன்ட் மூவிஸ். இந்த நிலையில் சினிமா துறையில் அதிக கவனம் செலுத்தி வரும் உதயநிதி சில youtube சேனல்களையும் விலைக்கு வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் உதயநிதி சமீபத்தில் பிளாக் ஷீப் என்ற youtube சேனலை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளார். ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சியில் பங்கு தாரராக இருக்கும் உதயநிதி, புதியதாக வக்கியுள்ள பிளாக் ஷீப் யூடியூப் சேனலை தற்போது தொலைக்காட்சியாக மாறியுள்ளார். கலைஞர் தொலைக்காட்சி போன்று பங்கு தாரராக இல்லாமல், பிளாக் ஷீப் சேனலில் ஒரே ஓனர் அது உதயநிதி தான் என்று கூறப்படுகிறது.
மேலும் பிளாக் ஷீப் ஒடிடி தளமும் உள்ளது என்றும், அந்த ஒடிடி தளத்தில் புதிய படங்களை வாங்கும் முயற்சியில் உதயநிதி ஈடுபட்டுள்ளார். மேலும் பிளாக் ஷீப் தொலைக்காட்சியில் சில பழைய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், முன்னனி தொலைக்காட்சியான சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சேனலுக்கு போட்டியாக புதிய திரைப்படங்களை வாங்குவதற்கான நடவடிக்கைகளில் உதயநிதி ஸ்டாலின் இதற்காக ரூபாய் 2000 கோடி முதலீடு செய்துள்ளதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிபிடத்தக்கது.