பிரதமர் மோடி முன்பு ரசிகர்களின் செயலால் அஜித் வேதனை.! வருத்தத்துடன் அறிக்கை வெளியிட்ட அஜித்.!

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை, இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது, கொரோன தொற்று காரணமாக படப்பிடிப்பு தாமதம் ஆனது, இந்நிலையில் இந்த படத்தின் எந்த ஒரு அப்டேட்டும் வெளியிடாமல் படக்குழுவினர் இருந்து வந்தனர், இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு சமூக வலைத்தளத்தில் ட்ரென்ட் செய்தனர், ஆனால் படக்குழுவினர் கண்டு கொள்ளவில்லை.

இதனை தொடர்ந்து பொது இடங்களில் முதல்வர் பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் சார் வலிமை அப்டேட் என கேட்டனர், மேலும் கிரிக்கெட் மைத்தனத்தில் கிரிக்கெட் வீரர்களிடம் வலிமை அப்டேட் கேட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது, இந்நிலையில் நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க வழியெங்கும் பொதுமக்கள் கூடி இருந்தனர், அந்த கூட்டத்தில் அஜித் ரசிகர்களும் இருந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் கார் அஜித் ரசிகர்கள் அருகில் வந்ததும், வலிமை அப்டேட் என்று எழுதிய பாதகையை ஏந்தி, சார் வலிமை அப்டேட் என கோஷமிட்டனர், இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது, இதனை தொடர்ந்து இன்று நடிகர் நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில். என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்புக் கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம்.

கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் “வலிமை” சம்பந்தப்பட்ட updates கேட்டு அரசு, அரசியல் விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும்.

உங்களுக்கு சினிமா ஒரு பொழுது போக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும், சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன் என அஜித் குமார் தனது வேதனையை அறிக்கை மூலம் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவீட்டர் பக்கத்தில்,வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில். அதற்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். ஆர்வம் காட்டியமைக்கு நன்றி என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வலிமை திரைப்படத்தின் அப்டேட் கேட்டு காத்திருந்த அஜித் ரசிகர்கள் விரைவில் வலிமை திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளிவர இருக்கும் செய்தி கேட்டு கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.