விடா முயற்சி படம் பார்க்க சென்ற ரசிகர்கள், தியேட்டருக்கு வெளியே பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு தியேட்டருக்குள் சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அவர்கள் எதிர்பார்த்தபடி படமானது இல்லை. ஆக்ஷன் அவதாரத்தை அஜித் எடுப்பார் என்று பார்த்தால், அப்படியெல்லாம் இந்த படத்தில் ஒன்றும் இல்லை.
ஏற்கனவே இந்தப் படம் பிரேக்டவுன் படத்தின் தமிழ் ரீமேக் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் படம் முழுவதும் அஜர்பைஜான் நாட்டிலேயே எடுத்து வைத்திருக்கிறார்கள். படத்தோட ஓபனிங்கில் காதல் காட்சி என மொக்கையான சில சீன்கள் இடம்பெற்று இருந்தது. இந்த படத்தின் ஆரம்பத்தில் அஜித் மற்றும் த்ரிஷா இருவரும் காதலிக்கிறார்கள். அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள். கர்ப்பமாகிறார், இதையடுத்து கரு கலைகிறது. மேலும், அவரால் இனி குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை வருகிறது.
![](https://dinaseval.com/wp-content/uploads/2025/02/Actor-ajithkumar-trisha-1024x576.jpg)
இதை தொடர்ந்து இருவரும் பிரிந்து செல்ல முடிவு செய்கிறார்கள். கடைசியாக ஒரு நீண்ட தூர பயணம் செய்ய அஜித் கேட்க, த்ரிஷாவும் ஓகே சொல்லி டிராவல் செய்ய ஆரம்பிக்கிறார்கள். இது போன்று ஒரு படம் தமிழில் வெளியானது. அது வேறு எந்த படமும் இல்லை. அது தான் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்றும், இந்தப் படத்தின் தழுவல்களும் விடாமுயற்சி என்று ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.
படத்தில் வில்லனுக்கு ஜோடியாக நடித்த ரெஜினாவிற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் கூட அஜித்திற்கு கொடுக்கப்படவில்லை என்பது வேதனையான ஓன்று, மேலும் அஜித்தின் கெட்டப்பை மாற்றி மாற்றி காட்டப்பட்டாலும் இதெல்லாம் அவருக்கு செட்டே ஆகவில்லை, மொத்தத்தில் படம் முழுவதும் அஜித்தை டம்மியாக காட்டி கிளைமேக்ஸ் காட்சியில் மட்டும் அஜித்தை மாஸ் ஹீரோவாக காட்டியுள்ளது ரசிக்கும்படி இல்லை.
இந்த படத்தின் கதை பிரேக் டவுன் என்றாலும் கூட, திரைக்கதையை கொஞ்சம் சுவாரஸ்யமாக்கியிருக்கலாம், அஜித்துக்கான மாஸ் சீன்களை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தியிருக்கலாம் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது, விஜய் நடித்த கோட் படத்தின் முதல் நாள் வசூல் இந்திய அளவில் 43 கோடியாக இருந்தது. ஆனால் விடாமுயற்சி உலகம் முழுவதும் 40 கோடி என்றும், தமிழகத்தில் மட்டும் 30 கோடி என கூறப்படுகிறது.
மேலும் விஜய் நடித்த கோட் படத்தின் முதல் நாள் வசூல் தமிழக அளவில் 38.3 கோடியாக இருந்தது இந்நிலையில், விடாமுயற்சி இந்திய அளவில் 32 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்கூட்டி எடுத்த கணக்கெடுப்பின்படி முதல் நாள் வசூல் 22 கோடி என தகவல் வெளியானது, வரும் நாள்களில் சனி, ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் வசூலானது கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
விடாமுயற்சி தெலுங்கில் 50 லட்சம் ரூபாய் வசூல் என கூறப்படுகிறது. அதேசமயம் விஜய் நடித்த GOAT திரைப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய்வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், விடாமுயற்சி மண்ணை கவ்வியுள்ளது என பலரும் ட்ரோல்ல செய்து வருகிறார்கள். இந்நிலையில் விடாமுயற்சி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவில்லை. அப்படி வந்திருந்தால் வசூலில் மொக்கை வாங்கியிருக்கும் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.