விஜயகாந்த் மரணத்தில் கிழிந்தது அஜித் முகத்திரை… அஜித்துக்கு இந்த கேவலமான வாழ்க்கை தேவையா…

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் ஏன் விஜயகாந்தின் மரணத்தின் போது நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என பல சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், அஜித் பெரும் புழுதியில் மாட்டிக் கொண்டார், இல்லை அஜித் விபத்தில் சிக்கி விட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார், இல்லை அஜித் விஜயகாந்த் மனைவியிடம் தொலைபேசியில் பேசி இரங்கல் தெரிவித்தார் என பல வகையான பொய்கள் கட்டவிழ்த்து விட்டு வருவதின் பின்னணியில் அஜித் தரப்பு இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

அந்த வகையில் அஜித் பற்றி எந்த செய்திகள் வந்தாலும் ஒரு பொய்யான செய்திகளாகவே உள்ளது, இப்படி பொய் செய்திகளை அவித்து விடுவதற்கே ஒரு கூட்டம் தா அஜித்தை சுற்றி சூழ்ந்துள்ளது என்கின்ற விமர்சனம் எழுந்துள்ளது.நடிகர் அஜித் வெளிநாடுகளில் இருப்பதால் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை.

ஆனால் சினிமா துறையே வாழவைத்த ஒரு நடிகன் மரணம் அடைந்த இந்த சூழலில் , ஒரு இரண்டு வரியில் ஒரு அறிக்கையாக அஜித் அவருடைய மேனேஜர் மூலமாக பொது வெளியில் வெளியிட்டு இருக்கலாம். அல்லது ஒரு சில நிமிடங்கள் நேரம் ஒதுக்கி வீடியோவாக பேசி விஜயகாந்த் அவர்களின் இரங்கல் தெரிவித்து இருக்கலாம். ஆனால் விஜயகாந்த் இரங்கல் தெரிவிப்பதற்கு குறுஞ்செய்திகள் மூலமாக தன்னுடைய மேனேஜருக்கு அனுப்பி அந்த மேனேஜர் மூலமாக விஜயகாந்த் மனைவிக்கு அந்த குறுஞ்செய்தியை அனுப்ப முயற்சிப்பது. அப்படி என்ன மூடி மறைத்து இப்படி ஒரு வாழ்க்கையை அஜித் வாழ வேண்டும்.

உலக தமிழர்கள் விஜயகாந்த் மரணத்தை கண்ணீர் வடித்து இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஒரு குறுச்செய்தியை அதுவும் அவரே நேரடியாக விஜயகாந்த் குடும்பத்திற்கு அனுப்பாமல், அவருடைய மேனஜர் மூலமாக , அதுவும் ரகசியமாக அனுப்புவது என்பது, அஜித் எந்த மாதிரியாக கேவலமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

நீங்கள் ஒரு நடிகர் அதாவது பொதுவெளியிலே நீங்கள் ஒரு கூத்தாடியாக தானே திரையில் தோன்றி, ரசிகர்கள் கொடுக்கும் 5, 10 பணத்தில் என்று ஏக போக வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் மக்களோடு மக்களாக இருந்து, மக்கள் என்ன நினைக்கிறார்களோ அவர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட வேண்டியது தானே, ஒரு இரண்டு வரியில் கேப்டனுக்கு இரங்கல் தெரிவிப்பதால் அஜித்தின் சொத்து மதிப்பு ஏதும் குறைந்து விடுமா.?

அல்லது இத்தனை வருடமாக அஜித் எந்த ஒரு நிகழ்வுக்கும் வரமாட்டார் என கட்டி காத்து வந்த இமேஜுக்கு ஏதும் களங்கம் வந்துவிடுமா,? என்கிற கேள்வியும் மக்கள் மத்தியில் கோபமாக அஜித்துக்கு எதிராக எழுந்துள்ளது. ஆனால் அஜித் ஏ கே மோட்டார்ஸ் என்கின்ற ஒரு நிறுவனத்தை தொடங்குகிறோம் என்பதை தன்னுடைய மேனேஜர் வாயிலாக அறிக்கையாக பதிவு செய்யும் அஜித், தனக்கு வருமானம் ஈட்டக்கூடிய செயலை மட்டும் பொதுவெளியில் செய்து விளம்பரம் தேடிக் கொள்ளும் அஜித் ஒரு இரண்டு வரியில் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவிக்காதது, அஜித்தின் போலி முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது என்று கூட சொல்லும் அளவுக்கு அவருடைய இமேஜ் மிகப் பெரிய அளவில் தற்பொழுது டேமேஜ் ஆகியுள்ளது.

இருந்தாலும் அஜித் போன்ற நடிகர்கள் வரவில்லை என்றாலும் கூட விஜயகாந்தின் உடல் மக்கள் வெள்ளத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது, விஜயகாந்த் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் இரண்டு முறை சென்று மரியாதை செலுத்தினார் என்பது வரலாற்றில் இடம் பெற கூடிய சம்பவம், அதே போன்று அஜித் போன்ற நடிகர்கள் விஜயகாந்துக்கு இரண்டு வரியில் இரங்கல் கூட தெரிவிக்க வில்லை என்பதும் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத ஒரு நிகழ்வாக இடம்பெறும்.

அந்த வகையில் அஜித் விஜய்காந்து உடலுக்கு அஞ்சலி செலுத்தாதது, அவருக்குத்தான் மிகப்பெரிய இழுக்கு என்றும் மேலும் அஜித் பப்ளிசிட்டி இல்லாதவர் விளம்பரத்தை விரும்பாதவர் என்கின்ற இதுவரை கட்டமைத்து வைத்து வந்த பிம்பம் விஜயகாந்தின் மரணத்தில் ஒட்டுமொத்தமாக சுக்கு நூறாக நொறுக்கப்பட்டது, தற்போது அஜித் ரசிகர்களை அஜித்துக்கு எதிராக திரும்பி வருவது குறிப்பிடத்தக்கது.