அஜித் செய்த ஓவர் அட்டூழியம்… படத்தை பதிலயிலே விட்டுட்டு ஓடின இயக்குனர்… விடாமுயற்சிக்கு வந்த சிக்கல்…

0
Follow on Google News

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படத்தை முடித்துவிட்டு அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக இருந்தது. இந்த படத்திற்கான லொகேஷன் தேர்வு, மற்ற நடிகர்கள் தேர்வு, என அனைத்தையும் முடிவு செய்து, முழு கதையையும் அஜித்திடம் தெரிவித்து படத்தை தொடங்கலாம் என சென்ற விக்னேஷ் சிவன் கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை என அஜித் நடிக்கும் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் விக்னேஷ் சிவன்.

ஒரு படத்தில் கமிட்டாகி அந்த படத்திற்கான சுமார் 6 மாதங்களுக்கு மேல் வேலை செய்து இறுதியில் கதை பிடிக்கவில்லை என அஜித் கழட்டிவிட்டது, விக்னேஷ் சிவன் சினிமா வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து விட்டது என்று சொல்லுபடி அமைந்துவிட்டது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் அஜித் படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பு அடுத்து இயக்குனர் மகில் திருமேனியிடம் ஒன் லைன் ஸ்டோரியை கேட்டு உடனே அஜித் நடிக்கும் படத்தில் கமிட் செய்யப்பட்டார்.

மகிழ்திருமேனியை முதலில் படத்தின் முழு ஸ்கிரிப்ட் தயார் செய்து வரட்டும் அதன் பின்பு படப்பிடிப்பை தொடங்கலாம் என தெரிவித்துவிட்டு அஜித் பைக் எடுத்துட்டு ஒரு ரவுண்டு நேபால், பூட்டன் என பைக் பயணத்தை தொடங்கினார். இந்நிலையில் அஜித் பைக் பயணத்தை முடித்து வந்து மகிழ் திருமேனி தயார் செய்து வைத்துள்ள முழு ஸ்கிரிப்ட்டையும் ஓரிரு நாட்களில் கேட்டு ஓகே செய்ததும் அடுத்து ஒரு வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என கூறப்பட்டது.

ஆனால் நடிகர் அஜித் பைக் பயணத்தை முடித்து சுமார் ஒரு மாதம் ஆன நிலையில், மகிழ் திருமேனியிடம் இருந்து வந்த முழு ஸ்கிரிப்ட் பேப்பரில் முதல் பக்கத்தை கூட இதுவரை பார்க்காமல், காலம் தாமதம் செய்து வந்தார் அஜித். இதனால் அஜித் விடாமுயற்சி படத்தில் காமிட்டன இயக்குனர் மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் மற்றும் மற்ற டெக்கினிசன் அனைவரும், அய்யோ.. எப்ப இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாவது என அஜித்துக்காக காத்திருந்தனர்.

அஜித் நடித்த துணிவு படத்துடன் விஜய் நடித்த நடித்த வாரிசு வெளியாகி, அடுத்து விஜய் நடித்த லியோ படமும் வெளியான நிலையில், அஜித் நடிக்க இருந்த விடா முயற்சி படம் தொடங்க படாமலே இருந்து வந்தது. இதில் விடாமுயற்சி படத்தில் ஒளிப்பதிவாளராக கமிட்டாகி இருந்த நீரவ் ஷாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும் கூட, அஜித் படத்தில் சிக்கி கொண்டு, இதை விட்டுட்டு எப்படி வருவது என வந்த வாய்ப்புகளை தவற விட்டு கொண்டே இருந்தார்.

ஒரு வழியாக அனைவர்க்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கியது. ஏற்கனவே இந்த படத்தில் கமிட்டாகி இருந்த ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, ஏற்கனவே காத்திருந்து காத்திருந்து, நாட்களை வீணாகி போனது, அதனால் ஒரே கட்ட படப்பிடிப்பாக விடாமுயற்சி படத்தை எடுத்து முடித்துவிட்டு எங்களை விடுதலை செய்யுங்கள் என்கிற அளவுக்கு விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அஜித் தொடர்ந்து இந்த படத்துக்கு கால் சீட் கொடுக்க இருப்பதாகவும், அதனால் ஒரே கட்ட படப்பிடிப்பாக அஜித் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் அஜர்பைஜனுக்கு சென்று விடாமுயற்சி ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், ஷூட்டிங் பாதியிலே விட்டுட்டு அஜித் சென்னை திரும்பியுள்ளார். ஏற்கனவே அஜித்தால் தான் படப்பிடிப்பு தனமாதமாகி வருகிறது என அந்த படத்தில் கமிட்டானவர்கள் அஜித் சென்னை பயணத்தால் படப்பிடிப்பு மேலும் தாமதம் அடைந்தது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, யப்பா சாமி என்னை அளவிடுங்க, நீங்க யாரையும் வெச்சு படம் எடுங்க என விடாமுயற்சி படத்தில் இருந்து வெளியேறி கொள்கிறேன் என்கிற முடிவுக்கு வந்ததால், தற்பொழுது விடாமுயற்சி படத்தின் ஒளிப்பதிவாளராக, நீரவ் ஷாவுக்கு பதில், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தான் தற்போது ஒளிப்பதிவு செய்து வருவதாக கூற்படுக்கிறது.