நீ அஜித் ஆளு தான.. விஜய் என்ன சொன்னாரு தெரியுமா.? அம்பலப்படுத்திய பிரேம் ஜி…

0
Follow on Google News

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தையடுத்து, ’தளபதி 68’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை 28, மங்காத்தா, மாநாடு போன்ற பல்வேறு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு, விஜய்க்கும் அதிரடி மாஸான ஒரு படத்தைக் கொடுப்பார் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரபல AGS நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள் இருப்பதாகவும், நடிகை பிரியங்கா மோகன் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், மற்றொரு கதாநாயகியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. குறிப்பாக, இன்னொரு நாயகியாக நடிக்க ஜோதிகா, சிம்ரன், சினேகா ஆகியோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், சமீபத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சினேகாவுடன் எடுத்துக் கொண்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த தளபதி ரசிகர்கள் ’தளபதி 68’ திரைப்படத்தில் சினேகா தான் இன்னொரு கதாநாயகி என்று விவாதித்து வருகின்றனர். இயக்குனர் வெங்கட்பிரபு, பெரும்பாலும் அவருடைய படங்களில் தன் தம்பி நடிகர் பிரேம்ஜியை எப்போதும் களமிறக்கிவிடுவார். அவ்வாறு இருக்கையில், அவர் அடுத்ததாக இயக்கவுள்ள ’தளபதி 68’ படத்தில் பிரேம்ஜி நடிக்கப் போவதில்லை என்றும் , அதற்கு விஜய் தான் காரணம் என்றும் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஒருபக்கம், தான் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கப்போவது உறுதியானதிலிருந்து இயக்குனர் வெங்கட் பிரபு அவ்வப்போது படம் குறித்த பல்வேறு அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகிய இருவரும் தனியார் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் தல ரசிகர் என்பதால் பிரேம்ஜி என் படத்தில் நடிக்க கூடாது என தளபதி விஜய் சொன்னதாக பிரேம்ஜி கூறியிருக்கிறார்.

தற்போது அந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த பேட்டியில் பிரேம்ஜி கூறும்போது , “ தளபதி என்கிட்ட நானும் உங்க அண்ணனும் படம் பண்ணும் போது அதில் நீ நடிக்க கூடாதுனு சொன்னாரு. ஏன் அண்ணானு கேட்டத்துக்கு நீ தல ஆளுனு சொன்னாரு. நீ வேணா அந்த படத்துக்கு மியூசிக் பண்ணு ஆன நீ நடிக்க கூடாது என சொன்னாரு.

அதுக்கப்புறம் கெஞ்சிக் கூத்தாடி இல்ல அண்ணா ஏற்கனவே உங்க ரசிகர்கள் எல்லாம் என்ன கழுவிக் கழுவி ஊத்தறாங்க அண்ணா” என நகைச்சுவையாக பிரேம்ஜி தெரிவித்துள்ளார். சும்மாவே, தல தளபதின்னு சண்டை போடும் அஜித், விஜய் ரசிகர்கள், இந்த வீடியோ வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் சூடுபிடிக்கும் விவாதத்தில் இறங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.