அஜித் சொன்ன யோசனை… கேட்காத மாரிமுத்து… கேட்டிருந்தால் இதெல்லாம் நடந்துருக்குமா.?

0
Follow on Google News

எதிர்நீச்சல் சீரியல் மூலம் ஆதி குணசேகரன் ஆக பிரபலமாக அறியப்பட்டவர் நடிகர் மாரிமுத்து. தேனி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து இன்ஜினியரிங் படித்துவிட்டு, சினிமா மீது இருந்த ஆசையின் காரணமாக சென்னை வந்து சுமார் 30 வருடங்கள் கடுமையான போராட்டங்களுக்கு பின்பு இன்று தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்று இனிமே தன்னுடைய வாழ்க்கையில் எல்லாம் வெற்றி தான் என்கின்ற ஒரு வளர்ச்சியை நோக்கி மாரிமுத்து அடைந்து விட்டார்.

இப்படி அவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொடுத்து கொண்டிருக்கும் இந்த காலத்தில், தற்போது சென்னையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வீடையும் கட்டி அதில் சுமார் 90 சதவீத பணிகள் முடிந்து விரைவில் அந்த வீட்டிற்கு குடியேற இருந்த நிலையில் அந்த வீட்டிற்கு செல்வதற்கு முன்பே மாரடைப்பு காரணமாக பரிதாபமாக மாரிமுத்து உயிரிழந்தது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதவி யாளராக மாரிமுத்து ராஜ்கிரனிடம் பணியாற்றிக் கொண்டிருந்த போது இயக்குனர் மணிரத்தினத்தின் படங்கள் மிக வெகுவாக அவரை கவர்ந்துள்ளது. இருந்தாலும் ஒரு கிராமத்து சாயல் பின்னணியில் உள்ள நாம் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மணிரத்தினத்திலும் எப்படி உதவியாளராக சேர்வது, நம்மளை எல்லாம் அவர் எப்படி அவருடன் இணைத்துக் கொள்வார் என்கின்ற ஒரு கேள்வி மாரிமுத்து மனதில் தோன்றியது.

அந்த வகையில் மாரிமுத்து இந்த விஷயத்தை மணிரத்தினத்தை நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்ட போது தெரிவித்து விடுகிறார், அப்போது மாரிமுத்து சொன்னதை கேட்டு சிரித்த மணிரத்தினம், நீங்களும் ஒரு கிரியேட்டர், நானும் ஒரு கிரியேட்டர் அவ்வளவுதான் நீங்கள் வந்து என்னுடைய மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் வேலை செய்யுங்கள் என மணிரத்தினம் தெரிவிக்க, உடனே மெட்ராஸ் டல்கிஸ்ல் வேலையை தொடங்குகிறார்.

அதன் பின்பு மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் வசந்த் இயக்கத்தின் ஆசை படத்தில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிகிறார் மாரிமுத்து, அப்போது அவருக்கு நிறைய நண்பர்கள் கிடைக்கிறார்கள் அதில் ஆசை படத்துல் நடித்த அஜித்துடனும் நெருங்கி பழகும் வாய்ப்பு மாரிமுத்து கிடைக்கிறது. மாரிமுத்துவின் வேலைகளை பார்த்து வியப்படைந்த நடிகர் அஜித், அப்போது அசோசியேட் டைரக்டராக இருந்த மாரிமுத்துவை அழைத்து உங்களிடம் கதை ஏதாவது இருந்தால் என்னிடம் சொல்லுங்கள்.

உங்கள் இயக்கத்தில் நான் நடிக்கிறேன் என்று அஜித் தெரிவித்துள்ளார், அப்போது கடுமையாக போராட்டத்துக்கு பின்பு அசோசியாட் டைரக்டராக இருந்து வந்த மாரிமுத்துக்கு, நல்ல சம்பளம் அசோசியேட் டைரக்டராக வாங்கி கொண்டுள்ளார், இந்த நிலையில் திடீரென்று நான் கதை சொல்லி இயக்குனராகப் போகிறோம் என்றால் அசோசியேட் டைரக்டரின் வருமானம் நின்றுவிடும் என்கின்ற ஒரு அச்சத்தில் அஜித் நேரில் அழைத்து கதை சொல்லுங்க இணைந்து ஒரு படம் பண்ணுவோம் என்ற போதும் மாரிமுத்து தட்டி கழித்துள்ளார்.

ஒருவேளை மாரிமுத்து அன்று அஜித் நேரில் அழைத்து ஒரு கதையை தயார் செய்யுங்கள் என அஜித் அழைப்பை ஏற்று அவரை வைத்து மாரிமுத்து படம் இயக்கியிருந்தால் இன்று மிகப்பெரிய இயக்குனராக உருவாகி இருப்பார் மாரிமுத்து. இந்த நிலையில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் வாலி படத்தில் கமிட்டாகிறார் , அப்போது வாலி படத்திற்கு ஒரு நல்ல அசோசியேட் அல்லது ஒரு கோ டைரக்டர் வேண்டும் என்ற போது.

எஸ் ஜே சூர்யா மாரிமுத்துவை முன்மொழிகிறார் உடனே அஜித் குமார் ஆமாம் மாரிமுத்து தானே அவர் எனக்கு நன்றாகத் தெரியும் ஆசை படத்திலே அவருடைய வேலையை பார்த்து இருக்கிறேன், நல்ல வேலை செய்யக் கூடியவர் தான், உடனே அவரை உங்களுடன் இணைத்துக் கொள்ளுங்கள் என அஜித் எஸ் ஜே சூர்யாவிடம் சொல்ல , வாலி படத்திலும் கோ டைரக்டராக பணியாற்றினார் மாரிமுத்து.

இதனைத் தொடர்ந்து வாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததும் அந்தப் படத்தில் பணியாற்றிய கோ டைரக்டர் அனைவருக்கும் ஒவ்வொருவருக்கும் பைக் பரிசளித்தார் அஜித். அப்போது மாரிமுத்துக்கும் பைக் பரிசாக அஜித் கொடுத்துள்ளார். அந்த வகையில் மாரிமுத்துவுக்கும் அஜித்துக்கும் நெருக்கிய பழக்கம் இருந்தும் , மேலும் அஜித்தை இயக்கும் வாய்ப்பு மாரிமுத்துவுக்கு கிடைத்தும் அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் மாரிமுத்து.