ரஜினி, அஜித் , விஜய் ஆகிய மூன்று முன்னணி நடிகர்களும் ஒரு விஷயத்தில் ஒரே கோட்டில் பயணிக்கிறார்கள், ஆனால் இவர்களுக்கு எதிர்மாறாக நடிகர் கமல்ஹாசன் துணிந்து பயணிக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். இந்த விஷயத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் இவர்கள் மூவரும் கற்று கொள்ள வேண்டியது அதிகமாக இருக்கிறது என்று சினிமா வட்டாரத்தில் விமர்சனம் எழுந்துள்ளது சமீபத்தில் நடிகர் அஜித் குமார் அவரது மேனேஜர் வாயிலாக கருத்து ஒன்றை பதிவு செய்திருந்தார்.
ஒரு கழுதையை நடக்க வைத்து கொண்டு கணவன் மனைவி இருவரும் ரோட்டில் நடந்து செல்லும் செல்கிறார், அதற்கு ஒருவர் கழுதை மேல் யாராவது ஒருவர் அமர்ந்து செல்லலால் என்று சொல்ல, மனைவியை கழுதை மேல் ஏற்றி கொண்டு கணவர் சென்ற சிறிது தூரத்தில் வயதானவரை நடக்க விட்டு மனைவி மட்டும் கழுதை மேல் செல்கிறார் என விமர்சனம் செய்ய கணவன் – மனைவி இருவரும் கழுதை மேல் அமர்ந்து செல்கிறார்கள்.
அதை பார்த்த மற்றொருவர் பாவம் கழுதை என விமர்சனம் செய்ய, இருவரும் கழுதையை தூக்கி கொண்டு நடந்து செல்கின்றனர், இதை பார்த்த ஒருவார் இவர்கள் என்ன முட்டாளா.? என விமர்சனம் செய்கிறார். இப்படி ஒரு கதையை தனது மேனேஜர் வாயிலாக பதிவு செய்து, தங்களுக்கு எதிராக வரும் விமர்சனங்களை காது கொடுத்து கேட்க கூடாது என்றும் குறிப்பாக விமர்சனங்களை புறக்கணிக்க வேண்டும் என்று அஜித் தெரிவித்துள்ளார்.
அஜித் போன்றே ரஜினிகாந்த் காலா படத்தில் ஆடியோ வெளியிட்டு விழாவில் செவிட்டு தவளை கதை ஒன்றை தெரிவித்தார். நான்கு தவளை மேலே செல்கிறது, கிழே இருக்கும் மற்ற தவளைகள் மேலே பாம்பு இருக்கு, தேள் இருக்கு என மிரட்டுவதை பார்த்து மற்ற மூன்று தவளை மேல செல்லவில்லை, ஒரு தவளை மட்டும் மேலே சென்றது, காரணம் அந்த தவளைக்கு காது கேட்காது, அது போல் தன்னை விமர்சனம் செய்பவர்களை காது கேட்காதது போன்று சென்று விட வேண்டும் என ரஜினிகாந்த் பேசியிருந்தார்.
இதே போன்று நடிகர் விஜய், உசுப்பேத்துறவன் கிட்ட உம்முனு காடுபேத்துறவன் கிட்ட கம்முன்னும் இருந்த வாழ்க்கை ஜம்முனு இருக்கு என்று இதற்கு முன்பு பேசியிருந்தார். இப்படி தனக்கு எதிராக எந்த ஒரு விமர்சனதை ஏற்று கொள்ள மாட்டோம் என புறக்கணிப்பது, ரஜினி, விஜய் , அஜித் போன்ற முன்னனி நடிகர்கள் இருக்கும் தமிழ் சினிமாவில் தனக்கு எதிராக எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதை ஏற்று கொண்டு பதிலும் அளித்து வருகின்றவர் நடிகர் கமல்ஹாசன்.
அந்த வகையில் தனக்கு எதிராக விமர்சனமே கூடாது என்று சொல்வது கோழை தனம் என்றும், இந்த விஷயத்தில் நடிகர் கமல்ஹாசனிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் ரஜினி, கமல் , விஜய் போன்ற நடிகர்கள் என சினிமா துறையை சேர்ந்த பிரபலம் ஒருவர் அறிவுரை கூறியுள்ள நிலையில், விமர்சனம் தான் ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.