துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்ட அஜித்தின் அணி மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. பொதுவாகவே இந்த விளையாட்டு ஒரு பணக்காரர்களுக்கான விளையாட்டு என்று தான் சொல்ல வேண்டும், காரணம் இந்த விளையாட்டில் சாதாரண ஆட்கள் யாருமே பங்கேற்க முடியாது, குறிப்பாக இந்த விளையாட்டை பார்க்க வேண்டும் என்றால் கூட ஒரு சாமானியனால் பார்க்க முடியாது.
அந்த வகையில் வசதி படைத்தவர்களால் மட்டுமே பார்க்கக்கூடிய, விளையாடக்கூடிய கார் ரேஸ் என்பது அஜித்தின் நீண்ட நாள் கனவு, ஆனால் ஆரம்பத்தில் இந்த கார் ரேசில் பங்கு பெறுவதற்கு போதுமான பொருளாதாரம் அஜித்திடம் இல்லை, இதனால் சினிமாவில் படங்கள் நடித்துக் கொண்டு, அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து மெல்ல மெல்ல தன்னுடைய கார் ரேஸின் கனவை நோக்கி நகர்ந்தார் அஜித்குமார்.
பல தடவை கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்து, இருந்தாலும் தொடர்ந்து கனவை நோக்கி சென்ற அஜித், சில சில தடைகளால் முழுமையாக அவரை கார் ரேஸில் ஈடுபடுத்தி கொள்ள முடியாமல், வேண்டா வெறுப்பாக சினிமாவில் நடித்து வந்தார் அஜித் குமார்.
இந்நிலையில், அஜித்தின் நீண்ட நாள் கனவை நிறைவு செய்தது போன்று துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை வெற்றி பிடித்துள்ளதை துபாயில் மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டம் கொண்டாடி வருகிறது. இதில் ஒன்றாவது இடம் இரண்டாவது இடத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. அந்த அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் அஜித் அந்த போட்டியில் உள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக இந்தியாவில் இருந்து துபாய் சென்றது.
அப்படி துபாய் சென்ற அஜித் ரசிகர்கள் சாதாரண ரசிகர்கள் அல்ல, எல்லாம் பணக்கார ரசிகர்கள், அஜித் இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்பு ஒரு குழந்தை போல் தேசிய கொடியை அசைத்து, மகிழ்ச்சியில் கொண்டாடியது, பின்பு எப்போதுமே பத்திரிகையாளரை சந்திக்க மாட்டேன் என்கின்ற கட்டுப்பாடுடன் இருக்கக்கூடிய அஜித், இந்த கார் ரேஸ் போட்டிக்கு பின்பு பத்திரிகையாளர்களிடம் சந்தித்து பேசினார்.
மேலும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா துபாயிலிருந்து கொண்டு அஜித் நடவடிக்கைகளை மீடியா வாயிலாக வெளிவர பெரும் பங்காற்றி இருக்கிறார். இந்த நிலையில் அஜித் பங்கேற்ற துபாய் கார் ரேஸில் பயிற்சியின் போது அஜித்துக்கு ஏற்பட்ட அஜித் ஓட்டிச் சென்ற கார் விபத்தின் காரணமாக விபத்து ஏற்பட்டது. இதனால் அஜித் நடந்து முடிந்த ரேஸில் கார் ஓட்டவில்லை.
அவருடைய அணியில் இருக்கக்கூடிய நான்கு பேர் அந்த ரேசில் பங்கு பெற்றார்கள், 24 மணி நேரம் தொடர்ந்து நடக்கக்கூடிய இந்த ரேஸில். ஒருவர் 6 மணி நேரம் என அணியில் உள்ள 4 பேர் 24 மணி நேரம் இடை விடாமல் ஓட்டினார்கள்.மொத்தம் அந்த 568 முறை சுற்றி வர வேண்டும், குறைந்தபட்சமே அந்த காரின் வேகம் 240 கிலோமீட்டர் வேகம் என்று கூறப்படும் நிலையில் அதிகபட்சம் எவ்வளவு இருக்கும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மேலும் அந்த ரேஸில் பங்கேற்ற அஜித்தின் அணியின் ஓட்டிய கார் 26 முறை நிறுத்தப்பட்டது என்றும், அதாவது ஒவ்வொரு முறையும் ஆட்கள் மாற்றுவதற்காக, பெட்ரோல் நிரப்புவதற்காக, காரின் டயர் மாற்றுவதற்காக, , இப்படி பிரமிக்க வைக்கும் வகையில் நடந்துள்ள இந்த கார் ரேஸில் அஜித் பங்கேற்கவில்லை என்றாலும், அவருடைய அணி வெற்றி பெற்றுள்ளது.குறிப்பாக அஜித் ரேசர் என்ற அஜித் அணியின் ஸ்பான்சரும் அஜித் தான் என்றும், இதற்காக பல கோடி அஜித் ஸ்பான்ஸர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.