நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் படம் தான் சினிமாவில் தான் நடிக்கும் கடைசி படம் என்கிற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு விட்டார், அந்த வகையில் ரஜினிகாந்த் மாதிரி இதோ நான் அரசியலுக்கு வருகிறேன், எல்லாம் முடுச்சுருச்சு இன்னும் அம்பு விடுவது மட்டும் தான் பாக்கி, என தன்னுடைய ரசிகர்களை ரஜினிகாந்த் மாதிரி உசுப்பேத்தி விட்டு அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி கடையில் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினிகாந்த் அல்வா கொடுத்தது போன்று விஜய் அவருடைய ரசிகர்களை ஏமாற்றவில்லை.
மாறாக தன்னுடைய அரசியல் அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டு சினிமாவை விட்டு விலகி முழுநேர அரசியல்வாதியாக களம் இறங்க இருக்கிறார் நடிகர் விஜய். அப்படி இருக்கும் பொழுது நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அவரும் அறிவித்து விட்டார். விஜய் சினிமாவில் நடிக்கவில்லை என்றால் அஜித் நிச்சயம் சினிமாவை விட்டு விலகுவார் என்றும் அந்த வகையில் அவரும் நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து சினிமாத்துறைக்கு குட்பாய் சொல்லிவிட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பு மிகப் பெரிய அளவில் இருக்கிறது.
காரணம் நடிகர் அஜித் தற்பொழுது அடுத்து தன்னுடைய எதிர்காலம் கார் ரேஸ் நோக்கி நகர வேண்டும் என்பதற்காக பல திட்டங்களை வகுத்து வருகிறார். அதே நேரத்தில் ஏன் அஜித் சினிமாநில் நடிப்பதை நிறுத்துவார் என்றால், பாபா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இதுதான் தன்னுடைய கடைசி படம் என்று ரஜினி ஒரு முடிவை எடுத்த போது, கமல்ஹாசனும் ரஜினி இனி சினிமாவில் நடிக்கவில்லை என்றால் நானும் நடிப்பதை நிறுத்தி விடுகிறேன் என்கின்ற ஒஒரு தகவலை தெரிவித்தவர்.
மேலும் ரஜினியிடம் ஒரு கோரிக்கையை வைத்தார் ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கிறது என்றால், இரண்டு பக்கமுமே ஒருவர் ஒருவர் விளையாட வேண்டும், இருவருமே மாற்றி மாற்றி கோல் அடித்தால் தான் அந்த போட்டி சுவாரசியமாக இருக்கும். ஆனால் ரஜினி திடீரென்று சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்து விட்டால், நான் எப்படி நடிப்பது என்று கமல்ஹாசனே ரஜினியிடம் தொடர்ந்து நீங்க நடிக்க வேண்டும் என்று தெரிவித்து இருப்பார்.
அந்த வகையில் சினிமாவில் ஒரு போட்டி என்பது இருந்தால் மட்டுமே அந்த நடிகர் வெற்றி பெற முடியும். எம்ஜிஆர் -சிவாஜி, ரஜினி – கமல், விஜய் – அஜித் என இரண்டு ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி நடக்கும் களோபரம், இப்படி ஒரு பரபரப்பு இருந்தால் தான் அந்த நடிகருக்கான படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடையும், இந்த நிலையில் நடிகர் விஜய் சினிமா விட்டு விலகும் பொழுது அஜித்துக்கு போட்டியே யாரும் இல்லை.
அந்த வகையில் அஜித் நிச்சயம் சினிமா விட்டு விலகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் காரணம் அஜித்துக்கு நீண்ட நாட்களுக்கு முன்பே சினிமாவில் போதும் நடித்தது, சினிமாவை விட்டு விலக வேண்டும் என்கின்ற முடிவில் தான் இருந்தார். இருந்தாலும் அவர் விருப்பம் இல்லாமல் தான் இதுவரை சினிமாவில் தொடர்ந்து நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் விஜய் இல்லாத சினிமாவில் அஜித் படம் வெளியானால் அது இதுவரை அஜித் கட்டி காப்பாத்தி வந்த மானம் மரியாதை காற்றில் பறக்கும் சூழல் உருவாகும்.
காரணம் விஜயும் விஜய் ரசிகர்கள் அரசியல் பக்கம் சென்று விட்டால், அஜித்க்கு போட்டி நாங்க தான் என்று சிவகார்த்திகேயன் மாதிரி ஆட்கள் கம்பு சுத்த கூட வாய்ப்பு இருக்கிறது அப்படி அல்ற சிலரை எல்லாம் தன்னை போட்டியாக கருதும் சூழலை அஜித் உருவாக்க மாட்டார் என்பதால் விஜய் இல்லாத சினிமாவுக்கு குட் பை சொல்லிவிட்டு வெளியேறுவரா.? என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.