வாய் இருக்குனு என்ன வேண்டுமானாலும் பேசலாமா… அஜித்துக்கு இது தேவை தானா.?

0
Follow on Google News

2006 முதல் 2011 வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நடிகர், நடிகைகள் கட்டாயப்படுத்தி வரவழைக்க படுவதாக அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பு மேடையில் கர்ஜித்தவர் அஜித். இவரின் இந்த பேச்சுக்கு கருணாநிதி அருகில் அமர்ந்திருந்த ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டி அஜித் தைரியமான பேச்சுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித் இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என சிலர் பகிரகமாக மிரட்டல் விடுத்தனர்.மேலும் திரைமறைவில் அஜித்குமாருக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் எந்த நடிகர், நடிகைகளுக்காக அஜித் பேசினாரரோ, அதில் ஒருவர் கூட அஜித்துக்கு துணையாக நிற்கவில்லை.

மேடையில் அஜித் பேசிய போது எழுந்து நின்று கைதட்டிய ரஜினி கூட அஜித்துக்கு ஆதரவாக இல்லாமல். இந்த விஷயத்தில் கருணாநிதி மற்றும் அஜித் இருவரையும் சந்திக்க வைத்து சமாதானம் செய்யும் முயற்சியை தான் ரஜினி செய்து வந்தார். அஜித்தை தொடர்புகொண்டு ரஜினி பேசியதை தொடர்ந்து இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கருணாநிதியை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார் அஜிகுமார்.

இதன் பின்பு தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒட்டு மொத்த சினிமாவும் தனக்கு ஆதரவாக இல்லை என்பதால் கோபம் அடைந்த அஜித் குமார். இந்த விவாகரத்துக்கு பின்பு தான் சினிமா தொடர்பான எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை என்கிற முடிவை எடுத்ததாகவும், மேலும் சினிமா துறையை சேர்ந்த யாரையும் பெரிதாக கண்டு கொள்வதில்லை, மதிப்பதில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் சுமார் 13 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்வு குறித்து பிரபல இயக்குனர் செல்வமணி சமீபத்தில் பேசுகையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, சேப்பாக்கம் மைதானத்தில் பிரமாண்ட விழாவில் பேசிய அஜித், தன்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழைத்ததாக, கொந்தளித்து பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் எழுந்து நின்று கை தட்டினார்.

இது அப்போது மிகவும் சர்ச்சைக்குள்ளானது. ஆனால், உண்மையில், நாங்கள் அவரை அந்த நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாப்படுத்தவே இல்லை என தெரிவித்த செல்வமணி. அந்த சமயத்தில் நிக் ஆர்ட்ஸ் நிறுவனத்தில்தான் அஜித் படங்களை செய்து கொண்டிருந்தார். அப்போது விநியோகஸ்தர்களுக்கும் அஜித்திற்கும் ஏற்பட்ட பிரச்சனையால் விநியோகஸ்தர்கள் அவருக்கு ரெட் கார்டு கொடுத்துவிட்டார்.

இந்த கோபத்தைதான் அஜித் அந்த மேடையில் அப்படி பேசிவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் மீது சில நடவடிக்கை எடுக்கப்பட்டது அதில் அஜித்திற்கும் என் மீது வருத்தம் இருந்தது. என்று ஆர்.கே செல்வமணி பேசி இருந்தார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொள்ள அஜித் கட்டாய படுத்தவில்லை என செல்வமணி பேசியுள்ளது குறித்து, அப்படியானால் அஜித் மேடையில் மைக் கிடைக்கிறது என்பதற்காக பொய் பேசினாரா.? என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள், இதை பற்றி உங்கள் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்.