முழு பப்ளிசிட்டி பிரியராக மாறிய அஜித்… என்னது அஜித்துக்கு பப்ளிசிட்டி பிடிக்காதா.? யார் சொன்னது.?

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் பெரும்பாலும் சினிமா தொடர்பான பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டார். அவருக்கு வழங்கப்படும் அவார்டு நிகழ்ச்சி, சினிமா தொடர்பான கலை நிகழ்ச்சி என எந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொள்வதில்லை. மேலும் அவர் நடிக்கும் படங்களின் ஆடியோ வெளியீட்டு விழா, ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஆகியவற்றில் கூட அஜித்குமார் கலந்து கொள்வதில்லை.

அஜித் ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பே அந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, புரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள மாட்டேன் என்ன தயாரிப்பாளிடம் ஒப்பந்தம் செய்துவிட்டு தான், அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிப்பார் என்கின்றது சினிமா துறைய. அஜித் பப்ளிசிட்டியை விரும்ப மாட்டார் அதனால் தான் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் அஜித் கலந்து கொள்வதில்லை என்ற ஒரு கருத்தும் உண்டு.

இந்த நிலையில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை படத்திற்கு பின்பு, அஜித்தின் நடவடிக்கைகளில் சில மாற்றங்கள் வந்துள்ளது.இதற்கு முன்பு அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் என்ன செய்கிறார் என்பது குறித்த எந்த ஒரு தகவலும் மீடியாக்கள் கவனத்திற்கு வருவதில்லை. ஆனால் வலிமை படத்திற்கு பின்பு தற்பொழுது அஜித் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் அவர் ஐரோப்பிய நாடுகளுக்கு பைக்கில் பயணம் செல்வது.

வெளிநாடுகளில் அவர் ரயிலில் பயணம் செய்வது, ஷாப்பிங் செய்யும் வீடியோக்கள், இப்படி தொடர்ந்து அவர் தொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அஜித் தரப்பிலிருந்து தான் விளம்பரத்திற்காக அஜித் தொடர்பான புகைப்படம், வீடியோக்கள் வெளியிடப்படுவதாக ஒரு கருத்தும் நிலவி வந்தது . தற்போது அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா நேரடியாக அஜித் தொடர்பான புகைப்படங்களை கடந்த மூன்று நாட்களாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

அஜித் மேற்கொள்ளும் பைக் பயணம், ஹெலிகாப்டர் பயணம் மற்றும் அஜித் தொடர்பான புகைப்படங்களை தொடர்ந்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இதுவரை அஜித் பப்ளிசிட்டி எதிர்பார்க்காமல் இருந்த நிலையில், தற்போதைய காலகட்டத்திற்கு அவருடைய படம் ஓட வேண்டும் என்றால் ப்ரமோஷன் முக்கியம் என்பதை உணர்ந்துவிட்டார் அஜித்.

இதனால் தான் இதற்கு முன்பு அவர் தொடர்பான புகைப்படங்கள் அவர் தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட நிலையில், தற்போது நேரடியாக அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிடுகிறார். இந்த நிலையில் இதெல்லாம் பார்க்கும் சினிமா ரசிகர்கள் யார் சொன்னது அஜித்துக்கு பப்ளிசிட்டி பிடிக்காது என்று.? இதோ அவரே தன்னை பப்ளிசிட்டி செய்யும் காலத்தின் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.