துணிவு படத்தின் வசூல்… சோகத்தில் தயாரிப்பாளர் போனி கபூர்… இனி படம் தயாரிப்பாரா.?

0
Follow on Google News

பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் அஜித் நடிப்பில் துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வாரிசு ஆகிய இரண்டு படங்கள் தற்பொழுது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அஜித் மற்றும் விஜய் இருவருடைய படம் ஒரே தேதியில் வெளியாகுவதால் தமிழக முழுவதும் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களின் அட்ராசிட்டி எல்லை மீறி சென்றுள்ளதை ஆங்காங்கே பார்க்க முடிந்தது.

துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சினிமா பைனான்சியர்களிடம் பணம் பெற்று தான் இந்த படத்தை தயாரித்து உள்ளார். ஆரம்பத்தில் துணிவு படம் தொடங்கிய சில நாட்களிலே குறிப்பிட்ட சினிமா பைனான்சியர்கள் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையினால் பல சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்வதில் பைனான்சியர்களுக்கு மிகப்பெரிய தடையாக அமைந்தது.

ஆரம்பத்தில் பிரபல சினிமா பைனான்சியர் அன்புச் செல்வனிடம் பணம் பெற்று துணிவு படத்தை எடுக்கும் முடிவில் இருந்தார் போனி கபூர். ஆனால் வருமான வரி சோதனைக்கு பின்பு அன்புசெழியனிடம் இருந்து பணம் வெளியாவதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டுள்ளத. இதனை தொடர்ந்து ஜி5 என்கின்ற நிறுவனத்திடம் பணம் பெற்று படத்தை முடித்து விடலாம் என பணம் பெற்று படப்பிடிப்பு பணிகளை போனி கபூர் தொடங்கினார்.

அடுத்தடுத்து ஜி5 நிறுவனம் துணிவு படத்திற்கு பைனான்ஸ் செய்வதற்கு மிக தாமதம் செய்து வந்துள்ளதால் படப்பிடிப்பும் தாமதமானது. இந்நிலையில் அஜித் நடிக்கும் படம் பணம் பற்றாக்குடையால் படப்பிடிப்பு நின்று விட்டது என்கின்ற ஒரு செய்தி வந்து விடக்கூடாது என்பதற்காக, அஜித் பைக்கை எடுத்துவிட்டு ஒரு டூர் சென்று விட்டார். இந்த ஒரு இக்கட்டான சூழலில் தயாரிப்பாளர் போனி கபூர்க்கு ரெட் ஜெயின்ஸ் மூவிஸ் நிறுவனம் உதவி செய்ய முன்வந்துள்ளது.

தேவையான பணத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் பைனான்ஸ் செய்ததை தொடர்ந்து. துணிவு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக தொடங்கியது. ஆனால் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்த போது மீண்டும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு பணம் தேவைப்பட மீண்டும் ரெட் ஜெயினின் உதவியை கேட்டுள்ளார். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் துணிவு படத்திற்கு பணம் கொடுத்து வந்த ரெட் ஜெயின் ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த துணிவு படத்தையும் அவர்கள் கைப்பற்றி விட்டதாக கூறப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட லாப தொகையுடன் போனி கபூரிடம் இருந்து துணிவு படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை விலைக்கு வங்கியுள்ளார்கள். தமிழ்நாடு தியேட்டர் உரிமையை மட்டும் ரெட் ஜெய்ன்ட்ஸ் மூவிஸ் பெறவில்லை. அந்தப் படத்தின் உண்மையான தயாரிப்பாளர்களே அவர்கள் தான் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

வாரிசு – துணிவு இரண்டு படங்களும் வெளியாகி துணிவு படம் வசூல் முதல் நாள் வசூலிலே வாரிசு படத்தை பின்னுக்கு தள்ளி வசூல் சாதனை படைத்துள்ளது. வாரிசு படம் மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாததாலும் அடுத்தடுத்து தொடர்ந்து விடுமுறை தினங்களில் மக்கள் கொண்டாடு வகையில் துணிவு படத்தின் வசூல் மிகப்பெரிய தொகையை குவிக்கும் என்பதால், இந்த படத்தை நேரடியாக ரிலீஸ் செய்திருந்தால் பெரும் லாபத்தை சம்பாதித்து இருக்கலாம் என மிகப் பெரிய சோகத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் இருந்து வருவதாக கூறப்படுகிறது.